#IPL2022 சீசனின் 18 வது லீக் போட்டியாது, #MI vs #RCB என்று சம பலத்துடன் உள்ள இந்த இரு அணிகளும் மோதின. இந்த ஆட்டத்தில், டாஸ் வென்ற பாப் டு பிளிஸ்சிஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். 

அதன்படி,  #MI மும்பை இந்தியன்ஸ் அணியில் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் சர்மா - இஷான் கிஷன் களமிறங்கினர். இவர்கள் இருவரும் முதலில் நிதானமாக விளையாடிய நிலையில் தலா 26 ரன்கள் எடுத்த நிலையில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தர். பின்னர் வந்த, டேவாட் பிரேவிஸ் 8 ரன்களுக்கு அவுட்டானார்.

அதன் தொடர்ச்சியாக வந்த திலக் வர்மா, போல்லார்டு ஆகிய இருவர்களும் டக் அவுட்டாகி அடுத்துடுத்து வெளியேற,  #MI அணியானது திக்குமுக்காடிப் போனது.

பின்னர் வநத ராமந்தீர்ப் சிங்கும் 6 ரன்கள் எடுத்து வெளியேறி, 11 வது ஓவருக்குள் #MI அணி 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அந்த குறிப்பிட்ட 5 ஓவர்களும் 5 விக்கெட்டுகளும், #MI மும்பையின் மிக மோசமான போட்டியாகவே அமைந்திருந்தது.

இதனால், #MI அணியின் ஸ்கோர் 79 ரன்களுக்கெல்லாம் 6 விக்கெட்டுக்களை பறிக்கொடுத்து பரிதாபமாக நின்றது.

குறிப்பாக, #RCB அணியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மேக்ஸ்வெல், தனது திருமணத்திற்கு பிறகு, நேற்று முதல் போட்டியில் களமிறங்கினார். “அவர், ஃபார்மில் தான் இருக்கிறாரா? பேட்டிங் சிறப்பாக இருக்குமா?” என்று, ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், நேற்று செய்த ஃபீல்டிங்கில் தனது ஃபார்ம் இன்னும் மாஸாக இருக்கிறது என்பதை அவர் நிரூபித்துக்காட்டினார்.

அதன்படி, போட்டியின 10 வது ஓவரில் ஆகாஷ் தீப் வீசிய பந்தை #MI அணியின் வீரர் திலக் வர்மா அருகிலேயே அடித்துவிட்டு, சிங்கிள் எடுக்க ஓடிக்கொண்டிருந்த நேரத்தில், யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் சற்று தொலைவில் நின்றிருந்த மேக்ஸ்வெல் அதிக வேகமாக ஓடி வந்து டைவ் அடித்து பந்தை ஸ்டம்பை நோக்கி வீசினார். சூப்பர் மேனை போல, காற்றில் பறந்துக்கொண்டிருந்த போது இவர் வீசிய அந்த பந்து, மிக துள்ளியமாக ஸ்டம்ப்பில் பட்டு எகிறியது. இதனால், திலக் வர்மாவின் விக்கெட்டை சூப்பராகவே, சூப்பர் மேனாகவே வீழ்த்தி அசத்தினார் மேக்ஸ்வெல்.

அப்போது, களமிறங்கிய சூர்யகுமார் யாதவ், மும்பை அணியை தனியில் ஒருவனாக ஒன் மேன் ஆர்மியாக போராடி, #MI அணியின் ஸ்கோர் சற்றே உயர முதல் காரணமாக அமைந்தார்.

கடும் அழுத்தங்களுக்கு மத்தியில் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ், வெறும் 37 பந்துகளில் அவர் வான வேடிக்கை காட்டினார். அதுவும், இந்த 37 பந்துகளில் 5 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என மொத்தமாக 68 ரன்களை விளாசித் தள்ளினார். இதனால், மும்பை அணியானது 6 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் சேர்த்தது.

பின்னர், 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய #RCB அணியில் தொடக்க வீரர்களாக அந்த அணியின் கேப்டன் டூப்ளசிஸ் - அனுஜ்வாட் ஆகியோரும் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சூப்பரான தொடக்கம் தந்தனர். என்றாலும், கேப்டன் டூப்ளசிஸ் 16 ரன்களுக்கு வெளியேற, பின்னர் வந்த விராட் கோலி, சற்று சீரான வேகத்தில் ரன்களை உயர்த்தி, “நான் ஃபார்முக்கு திரும்பிட்டேன்” என்று, சூப்பரான ஒரு இன்னிஸ்சை விளையாடினார் விராட் கோலி.

அப்போது. அனுஜ்வாட் 47 பந்துகளில் 66 ரன்களும், விராட் கோலி 36 பந்துகளில் 48 ரன்களும் எடுத்திருந்த போது ஆட்டிமிழந்தனர். பின்னினர், பளத்திற்கு வந்த தினேஷ் கார்த்திக் - மேக்ஸ்வெல் ஜோடி, அதிரடி காட்ட #RCB அணியானது 18.3 ஓவர்களில் வெறும் 3 விக்கெட் இழப்புக்கு 152 ரன்களை மிக எளிதாக எட்டிப் பிடித்து சூப்பர் வெற்றியைப் பெற்றது.

இதன் மூலமாக, #MI அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, RCB ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம், RCB பெங்களூரு அணியானது புள்ளிப் பட்டியலில் 3 வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. 

அதே நேரத்தில், 4 ஆட்டங்களில் இதுவரை விளையாடி 4 போட்டியிலும் #MI அணியானது தொடர்ந்து தோல்வியை தழுவிய நிலையில், புள்ளிப் பட்டியலில் மும்பை அணியானது 9 வது இடத்தில் உள்ளது.