#IPL2022 நேற்றைய லீக் போட்டியில் #RCB வெற்றி பெற்று, #LSG லக்னோ தோல்வியடைய #CSK தவறவிட்ட 2 முன்னாள் வீரர்கள்கள் தான் முக்கிய காரணமாக அமைந்திருந்தது, சென்னை ரசிகர்களை ஏக்க பெரு மூச்சில் ஆழ்த்தி உள்ளது.

#IPL2022 சீசினன் லீக் போட்டிகள் தற்போது நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. இதில், நேற்று நடைபெற்ற போட்டியில் #RCB v #LSG அணிகள் மோதின.

இதில், டாஸ் வென்ற #LSG லக்னோ அணியின் கேப்டன் லோகேஷ் ராகுல், முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன் படி, பெங்களூரூ அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய அனுஜ் ராவத் - டு  பிளேசிஸ் ஜோடி நிதானமாக ஆடத் தொடங்கினார். ஆனால், அனுஜ் ராவத் 4 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி அளிக்க, அப்போது களமிறங்கிய விராட் கோலி ரன் ஏதும் எடுக்காமல் தீபக் ஹூடா விடம் கேட்ச் கொடுத்து கோல்டன் டக்கவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

அதாவது, விராட் கோலி கடைசியாக எப்போது கடைசியாக சதமடித்தார் என்று யோசித்து பார்த்தால், அவர் கடைசியாக கடந்த 2019 ஆம் ஆண்டு வங்க தேசத்துக்கு எதிராக 136 ரன்கள் எடுத்ததே விராட் கோலியின் கடைசி சதமாக இப்பேர்து வரை இருக்கிறது.

ஆனால், அந்த வங்கதேச சதத்துக்குப் பிறகு விராட் கோலி இதுவரை சுமார் 17 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 21 ஒரு நாள் போட்டிகள், 25 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். 

இது மட்டுமில்லாமல் அவர் 37 ஐபிஎல் போட்டிகளிலும் விளையாடி உள்ளார். ஆனால், இதில் எதிலுமே அவர் சதம் விளாசவில்லை. இதனால், “விராட் கோலி கடைசியாக சதம் அடித்து கிட்டதட்ட 100 போட்டிகளை விளையாடி விட்டதால், விராட் கோலி ரன்களில் சதம் எடுக்காமலே, போட்டிகளில் சதம் அடித்து உள்ளார்” என்கிற விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இதனையடுத்து,  #RCB அணியில் டூ பிளேசிஸ் உடன் மேக்ஸ்வெல் ஜோடி சேர்ந்து சிறிது நேரம் அதிரடி காட்டிய நிலையில், 11 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து அவரும் அவுட்டானார்.

அவரைத் தொடர்ந்து பிரபு தேசாய் களமிறங்கிய நிலையில், குருனால் பாண்டியா பந்து வீச்சில் 10 ரன்களில் வெளியேறினார். இதனால், பெங்களூரு அணியானது, 64 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தட்டுத் தடுமாறி நின்றது.

எனினும், அணியை தாங்கிப் பிடிக்க வேண்டும் என்கிற உறுதியுடன் #RCB கேப்டன் டு  பிளேசிஸ் சிறப்பாகவும், அதே நேரத்தில் அதிரடியாகவும் விளையாடி அரைசதம் கடந்து அசத்திய நிலையில், சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் டூ பிளேசிஸ் 96 ரன்கள் எடுத்து கடைசி ஓவரில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். 

இதனால், #RCB பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் சேர்த்தது. இதனையடுத்து, 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் #LSG லக்னோ அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய டி காக் 3 ரன்களில் வெளியேறி அதிர்ச்சி அளித்தார். அவரைத் தொடர்ந்து மனிஷ் பாண்டே 6 ரன்களில், ஹேசில்வுட் அவுட்டாக்கினார்.

பின்னர், கேப்டன் ராகுல் 30 ரன்களில் வெளியேற, குருனால் பாண்டியா சற்று அதிரடியாக விளையாடி 42 ரன்கள் சேர்த்து அவுட்டானார். அதன் பிறகு வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க 20 ஓவர்கள் முடிவில் #LSG லக்னோ அணி 163 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.

இதன் காரணமாக, #RCB பெங்களூரு அணியானது 18 ரன்கள் வித்தியாசத்தில்  #LSG  லக்னோ அணியை வீழ்த்தி சூப்பர் வெற்றியை பதிவு செய்தது.

#RCBபெங்களூரு அணியில் சூப்பராக பந்து வீசி அசத்திய ஹேசில்வுட், 4 ஓவர்களில் 25 ரன்கள் மட்டுமே விட்டு கொடுத்து, அதிகபட்சமாக 4 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.

குறிப்பாக, இந்த போட்டியில் #RCB பெற்றி பெற மிக முக்கிய காரணமாக இருந்தது. 2 வீரர்களால் தான். அந்த இரு வீரர்களுமே சென்னை அணி தக்க வைத்துக்கொள்ளாத 2 வீரர்கள் ஆவார்கள். அவர்கள் யார் என்றால், நேற்றைய போட்டியில் அதிரடியாக ஆடிய டூ பிளசிஸ், அபராமாக பந்து வீசிய ஹேசில்வுட் என இவர்கள் இருவருமே கடந்த முறை சென்னை அணியில் இடம் பெற்ற நிலையில், இந்த சீசனில் சென்னை அணி தக்க வைத்துக்கொள்ள தவறிய வீரர்கள் ஆவர்கள். இப்படியான இந்த இரு வீரர்களால் தான் நேற்றைய போட்டியில் லக்னோ வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வெற்றிப் பெற்றது குறிப்பிடத்தக்கது.