#IPL2022 டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் மேலும் ஒருவர் என மொத்தம் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதால், ஒட்டுமொத்த அணியும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது. இதனால், “போட்டி நடக்குமா? என்பதே தற்போது சந்தேகமாகி உள்ளது. 

#IPL2022 15 வது சீசன் தொடங்கி விறுவிறுப்பாக லீக் போட்டிகள் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது.

இந்த சூழலில் தான், #IPL2022 முழுக்க முழுக்க இளைஞர்களால் புதிதாக கட்டமைக்கப்பட்ட மிக முக்கிய அணியான #DC டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியானது, தற்போது கொரோனா என்னும் பெருந் தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கிறது.

டெல்லி அணியில் தொடர்ந்து விளையாடி வரும் #DC டெல்லி கேப்பிடல்ஸ் அணியை முக்கிய வீரர் ஒருவருக்கு இன்று காலை நடந்த கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது, அவருக்கு கொரோனா தொற்று பரவி இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. அந்த முக்கிய வீரர் வெளிநாட்டை சேர்ந்த வீரர் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதாவது, கடந்த 15 ஆம் தேதி அன்று #DC அணியின் பிசியோ பயிற்சியாளர் பேட்ரிக் ஃபார்ஹார்ட் க்கு கொரோனா தொற்று உறுதியானதாக கூறப்பட்டது. இதன் காரணமாக, அவர் தனிமைப்படுத்தப்பட்டார்.

அதன் தொடர்ச்சியாக, அதற்கு அடுத்த நாள் #DC அணியில் வீரர்களுக்கு மசாஜ் அளிக்கும் தெரபிஸ்டுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால், அவரும் தனிமைப்படுத்தப்பட்டார்.

இதனையடுத்து, வரும் 20 ஆம் தேதி பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக நடைபெறும் போட்டிக்காக திட்டமிட்டபட்டது. 

அப்போது, புனேவுக்கு செல்வதற்கு முன்பாக #DC அணியில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த பரிசோதனையின் போது, #DC அணியில் உள்ள வெளிநாட்டை சேர்ந்த வீரர் ஒருவருக்கு தலைவலி மற்றும் லேசான காய்ச்சல் பாதிப்பு இருந்து உள்ளது.

இதனை தொடர்ந்து, “புனே புறப்பட தயாராக இருந்த டெல்லி அணியை, உடனே அப்படியே நிறுத்தி வைக்கும்படி” அணி நிர்வாகத்திற்கு பி.சி.சி.ஐ. தற்போது அறிவுறுத்தி உள்ளது. 

இதனையடுத்து, அந்த வீரருக்கு மேலும் ஒரு முக்கிய பரிசோதனையான ஆர்.டி. பி.சி.ஆர். பரிசோதனையை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், அந்த பரிசோதனையின் முடிவு வரும் வரை, வீரர்கள் காத்திருக்கும்படியும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அத்துடன், இந்த ஆர்.டி. பி.சி.ஆர். பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியானால், அவர் டெல்லி அணியில் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட 3 வது நபர் ஆகிறார். 

குறிப்பாக, #DC அணியின் வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியான சூழலில், #DC டெல்லி அணியின் புனே பயணம் தற்போது அதிரடியாக ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

முக்கியமாக, கொரோனா தொற்று காரணமாக, டெல்லி கேப்பிடல்ஸ் ஒட்டுமொத்த அணியும் தற்போது அதிரடியாக தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனால், புனேவில் பஞ்சாப் கிங்ஸ்க்கு எதிரான நடைபெற்ற உள்ள போட்டியானது இறுதி நேரத்தில் கேன்சலாக அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது, கிரிக்கெட் ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.