#IPL2022 சீசனில் தோல்வியடையும் கேப்டன்களுக்கெல்லாம் அபராதம் விதிப்பது போல், நேற்றைய போட்டியில் #DC டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட்டிற்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

#IPL2022 சீசனில் நேற்று நடைபெற்ற 15 வது லீக் போட்டியில், #LSG vs #DC அணிகள் மோதின. இரு அணிகளுமே சம பலம் பொருந்திய அணிகள் என்றாலும், இந்த போட்டியில், டாஸ் வென்ற #LSG லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல், முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். 

அதன்படி டெல்லி அணி சார்பில் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் - பிரித்வி ஷா களமிறங்கினர். 

இதில், தொடக்கம் முதலே அதிரடி காட்டிய பிரித்வி ஷா, பவர்பிளே ஓவர்களை சூப்பராக பயன்படுத்தி ரன்களை வாரி குவித்தார். இப்படி, சிறப்பாக விளையாடிய பிரித்வி ஷா, 30 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். 

34 பந்துகளில் 61 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், கிருஷ்ணப்பா கெளதம் பந்து வீச்சில் பிரித்வி ஷா ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்த நிலையில், அதன் தொடர்ச்சியாக தொடர்ந்து பவல் 3 ரன்களிலும், டேவிட் வார்னர் 4 ரன்களிலும் அடுத்தடுத்து அவுட்டாகி வெளியேறினார். இதனால், டெல்லி அணி அப்படியே தடுமாற்றம் கண்டது.

அதிரடி நாயகன் டேவிட் வார்னர், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அடி தூள் கிளப்பிவிட்டு இந்தியா திரும்பிய நிலையில், டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் முதல் போட்டியில் நேற்று விளையாடினார். ஆனால், வாணவேடிக்கை காட்டுவார் என்று, எதிர்பார்த்த நிலையில் வார்னர் ஏமாற்றத்தையே அளித்தார். அதன்படி, ரவி பிஷ்னாய் பந்துவீச்சில், மிகவும் மோசமாக அவுட்டாகி அவர் நடையை கட்டினார்.

பிறகு வந்த #DC கேப்டன் ரிஷப் பண்ட்- சர்ப்ராஸ் கான் உடன் ஜோடி சேர்ந்து 50 ரன்கள் பாட்னர்ஷிப் அமைத்துக்கொடுத்த நிலையில், பண்ட் 39 ரன்களுடனும், சர்ப்ராஸ் கான் 36 ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். எனினும், 20 ஓவர்கள் முடிவில்  #DC டெல்லி அணியானது 3 விக்கெட் இழப்பிற்கு வெறும் 149 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

இதனையடுத்து, 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் லக்னோ அணியின் தொடக்க வீரர்களாக குவின்டன்  டி காக் - கேப்டன் கே. எல். ராகுல் ஆகியோர் களமிறங்கி, சற்று நிதானமாகவும், அதிரடியாகவும் ஆடத் தொடங்கினர்.

இதில், அதிரடியாக ஆடிய குவின்டன் டி காக், டெல்லி பந்து வீச்சாளர்களுக்கு பவர் பிளேவில் பெரும் சவால் விடுத்தார். 

இதில், கே.எல். ராகுல் வெறும் 24 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி அளிக்க அவரை தொடர்ந்து வந்த லீவிஸ் 5 ரன்களில் வெளியேறினார். 

பிறகு வந்த தீபக் ஹூடா சற்று அதிரடி காட்ட எதிர் முனையில் நின்ற டி காக் 36 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார்.

அத்துடன், டி காக் 80 ரன்கள் எடுத்திருந்தபோது கேட்ச் கொடுத்து வெளியேறினார். பிறகு வந்த க்ருனால் பாண்டியா- தீபக் ஹூடா ஜோடி சற்று ரன்கள் சேர்த்த நிலையில், கடைசி 2 ஓவரில் #DC அணியின் வெற்றிக்கு 19 ரன்கள் தேவைப்பட்டது. 

அப்போது, 19 வது ஓவரின் 3 வது பந்தை சிக்சருக்கு விரட்டிய பாண்டியா அணியின் வெற்றியை ஏறக்குறைய உறுதி செய்து, #DC அணியின் பக்கம் போட்டியை திசை திருப்பி நிறுத்தினார். 

இப்படியாக, கடைசி ஓவரில் #DC அணியின வெற்றிக்கு 5 ரன்கள் தேவை என்ற நிலை உருவானது. இதில், கடைசி ஓவரின் முதல் பந்திலே தீபக் ஹூடா அவுட்டாகி அதிர்ச்சி அளித்த நிலையில், களமிறங்கிய இளம் வீரர் ஆயுஷ் படோனி, அந்த ஓவரின் 3 வது பந்தை பவுண்டரிக்கு விரட்டிய நிலையில், அடுத்த பந்தை சிக்சருக்கு விரட்டி எளிதாக வெற்றிப் பெற்றார். 

இதனால்,  #LSG லக்னோ அணியானது 19.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்து #DC அணியை மிக எளிதாக வீழ்த்தி வெற்றி பெற்றது. லக்னோ அணிக்கு இது 3வது வெற்றியாகும்.

இந்த நிலையில் தான், #IPL2022 சீசனில் தோல்வியடையும் கேப்டன்களுக்கெல்லாம் அபராதம் விதிப்பது போல், நேற்றைய போட்டியில் #DC டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட்டிற்கு, “ஓவர்களை குறித்த நேரத்துக்கு வீசாததற்காக, 12 லட்சம் ரூபாய் அபராதம்” விதிக்கப்பட்டு உள்ளது. 

இதற்கு முன்னதாக, இந்த சீசனில் முதலில் சன் ரைசர்ஸ் தோல்வி அடைந்த போது, அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. பின்னர், அடுத்த போட்டியில் தோல்வி கண்டன மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், நேற்றைய போட்டியில் தோல்வி கண்ட டெல்லி அணிக்கும் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் - குஜராத் டைட்டன்ஸ் அணி இன்று மோதி விளையாடுகிறது.