#IPL2022 பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் போட்டியில், லக்னோ அணி அபார வெற்றி பெற்று பிளே ஆஃப் சுற்றை கிட்டதட்ட உறுதி செய்து உள்ளது. 

#IPL2022 நேற்றைய 42 வது லீக் போட்டியில் #PBKS v #LSG அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் மயங்க் அகர்வால் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். 

அதன்படி, அணி லக்னோ அணியின் சார்பில் கேப்டன் கேஎல் ராகுல் - டி காக் களமிறங்கிய நிலையில் ராகுல், 6 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

அதன் பிறகு வந்த தீபக் ஹூடா - டி காக் ஜோடி நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், இருவரும் அரைசதம் அடிப்பார்கள் என்று எதிர்பார்க்கபட்ட நிலையில் டி காக் 46 ரன்னிலும், ஹூடா 36 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர்.

பின்னர் வந்த வீரர்கள், சொற்ப ரன்களில் வெளியேற 20 ஓவர்கள் முடிவில் #LSG லக்னோ அணி 8 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்தது. 

இதனால், 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் #PBKS பஞ்சாப் அணியன் தொடக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் மயங்க் அகர்வால் 25 ரன்களில் அவுட்டாகி வெளியேற, தவான் 15 பந்துகளில் வெறும் 5 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டானார்.

பின்னர் வந்த ராஜபக்சே 9, லிவ்விங்ஸ்டன் 18, ஜித்தேஷ் சர்மா 2 என அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். பேர்ஸ்டோவ் மட்டும் நிதானமாக விளையாடி 32 ரன்கள் சேர்த்து ஆட்டமிழ்ந்தார். 

இதனால், பஞ்சாப் அணி 16 ஓவர்களில் 105 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து தடுமாறி நின்றது. இதனால், கடைசி 4 ஓவர்களில் #PBKS பஞ்சாப் அணி வெற்றி பெற 49 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், கடைசி ஓவரில் 31 ரன்கள் தேவைப்பட்டது.

அப்போது, ஆவேஸ் கான் வீசிய அந்த ஓவரின் முதல் பந்தில் சிக்சர் விளாசிய ரிஷி தவன், 2 வது பந்தை பவுண்டரி விளாச கடைசி 4 பந்தில் 21 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், அடுத்த 4 பந்திலும் ரன் எதுவும் எடுக்க முடியவில்லை. 

இதனால், #LSG அணியானது 20 ரன் வித்தியாசத்தில் சூப்பர் வெற்றி பெற்றது. இதன் காரணமாக, லக்னோ அணி 12 புள்ளிகளுடன் 3 வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. இதன் காரணமாக, #IPL2022 நடப்பு தொடரில் #LSG லக்னோ அணியானது, கிட்டதட்ட பிளே ஆஃப் சுற்றை உறுதி செய்து உள்ளது. 

குறிப்பாக, பஞ்சாப் அணி 8 புள்ளிகளுடன் 7 வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, #IPL2022 கிரிக்கெட் இன்று இரண்டு போட்டிகள் நடக்கின்றன. அதன்படி, மதியம் 3.30 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில் நம்பர் 1 இடத்தில் உள்ள குஜராத் டைட்டன்ஸ் அணியுடன், 5 வது இடத்தில் உள்ள ஆர்சிபி அணி மோதுகிறது.

அதே போல், இரவு 7 மணிக்கு நடைபெறும் மற்றொரு போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.