IPL2022 நேற்றைய போட்டியில் உமேஷ் யாதவ் வேகப்பந்து வீச்சில் சிக்கி சின்னாபின்னமான #PBKS பஞ்சாப் அணியின் பவுலிங்கை, ரஸில் சூறாவளி புயலமாக மாறி வாணவேடிக்கை காட்டியதால், #KKR கொல்கத்தா எளிதாகவே வெற்றிப் பெற்றது.

#IPL2022 கிரிக்கெட் தொடரின் 15 வது சீசன் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், நேற்றைய தினம் 8 வது லீக் போட்டிகள் நடைபெற்றது. இதில், #PBKS பஞ்சாப் கிங்ஸ் அணியும் - #KKR கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.

இதில், இதுவரை 2 போட்டிகளில் விளையாடி இருக்கும் #KKR கொல்கத்தா அணி, முதல் போட்டியில் சென்னையை வீழ்த்தி முதல் வெற்றியும், 2 வது போட்டியில் பெங்களளூருக்கு எதிராக தோல்வியையும் சந்தித்து மீண்டும் எழுச்சி பெரும் நிலையில் களம் கண்டது. அதே போல், #PBKS பஞ்சாப் அணி தனது முதல் போட்டியில், பெங்களூரு அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்து, தொடர் வெற்றியை குவிக்கும் நோக்கில களம் கண்டது.

இதில், டாஸ் வென்ற #KKR கொல்கத்தா அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, பஞ்சாப் அணி சார்பில் தொடக்க வீரராக அந்த அணியின் கேப்டன் மயங்க் அகர்வால் - தவான் ஜோடி களமிறங்கினர்.

இந்த போட்டியில், #PBKS அணியின் கேப்டன் மயங்க் அகர்வால், #KKR அணியின் உமேஷ் யாதவ் புயல் வேக பந்துவீச்சில் சிக்கி, 1 ரன்னில் அவுட்டானார். அதன் பிறகு தவான் உடன், ராஜபக்சா அதிரடியாக விளையாட தொடங்கிய நிலையில், ராஜபக்சா 9 பந்துகளில் 31 ரன்கள் அடித்து மாவி சுழலில் சிக்கி வெளியேறினார்.

பின்னர், ஷிகர் தவான் 16 ரன்களிலும், லிவிங்ஸ்டன் 19 ரன்களிலும், அடுத்தடுத்து வெளியேறினர். அதனைத் தொடர்ந்து, ஷாருகான், ராகுல் சஹர் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்த நிலையில், கடைசி நேரத்தில் களமிறங்கிய ரபாடா சற்று நேரம் வாணவேடிக்கை காட்டிக்கொண்டிருந்தார். சற்று அதிரடியாகவே விளையாடிய அவர், 16 பந்துகளில் 25 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். 

இறுதியில், பஞ்சாப் அணி 18.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து, 137 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தது.

இதில், 4 ஓவர்கள் வீசி வெறும் 23 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து அதிக பட்சமாக 4 விக்கெட்டுகளை உமேஷ் யாதவ், சாய்த்து அசத்தியிருந்தார்.

பின்னர், 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கி #KKR அணியின் தொடக்க வீரர்களாக ரகானே - வெங்கடேஷ் ஐயர் ஜோடி களம் இறங்கியது.

இந்த ஜோடியானது வந்த வேகத்தில், அடுத்தடுத்து விக்கெட்டை பறிக்கொடுத்து நடையை கட்டியது. ரகானே 12 ரன்கள் எடுத்திரந்தபோது, ரபாடா பந்துவீச்சில் அவுட்மாகி வெளியேறினார். எதிர்முனையில் நின்ற வெங்கடேஷ் ஐயர் வெறும் 3 ரன்னில் வெளியேறினார்.

பின்னர் களமிறங்கிய #KKR கேப்டன் ஷ்ரேயஸ் அய்யர் 15 பந்துகளில் 26 ரன்கள் எடுத்திருந்த போது ராகுல் சஹர் பந்துவீச்சில் அவுட்டானார். அப்போது களமிறங்கிய நிதிஷ் ராணா டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். இதனால், இந்த போட்டியனது, #PBKS அணியின் பக்கம் திரும்பியது.

அப்போது களத்தில் குதித்த  #KKR ரஸில் தொடக்கம் முதலே ருத்ரதாண்டவம் ஆடி, வாணவேடிக்கை காட்டினார்.

அப்போது, அடுத்தடுத்து 8 இமாலய சிக்சர்களை விளாசிய ரஸில், 31 பந்துகளில் 70 ரன்கள் விளாசி, அணியின் வெற்றிக்கு வித்திட்டார். குறிப்பாக ஓடன் ஸ்மித் வீசிய 12வது ஓவரில் 4 சிக்ஸர், ஒரு பவுண்டரி விளாசி தள்ளினார். இப்படியாக, கொல்கத்தா அணியானது, வெறும் 14.3 வது ஓவரில் வெற்றி இலக்கை எளிதாக எட்டிப்பிடித்தது அபார வெற்றிப் பெற்றது #KKR.

இந்த போட்டியில், #PBKS அணியை காட்டிலும், #KKR அணியின் பந்து வீச்சே பலம் பொருந்தியதாக இருந்ததால், பஞ்சாப் அணி வீழவும், கொல்கத்தா வாணவேடிக்கை காட்டவும் காரணமாக அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.