#IPL2022 நேற்றைய போட்டியியில் 222 ரன்கள் அடித்தும் நெருக்கடிக்கு ஆளான ராஜஸ்தான் திரில் வெற்றி பெற்ற நிலையில், டெல்லி அணி போராடி தோல்வி அடைந்தது.

#IPL2022 சீசினன் 34 வது லீக் ஆட்டத்தில் #DC- #RR அணிகள் மோதின. இரு அணிகளும் சம பலம் பொருந்தியவை என்பதால், நேற்றைய போட்டியா மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதில், டாஸ் வென்ற  #DC டெல்லி அணி முதலில் பந்து வீசுவதாக கூறிய நிலையில், அதன் படி #RR ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக 
ஜாஸ் பட்லர் - தேவ்தத் படிக்கல் ஜோடி களமிறங்கி, தொடக்கம் முதலே அதிரடி காட்டினார். இருவருமே, டெல்லி அணியின் பந்து வீச்சை அடித்து துவம்சம் செய்து வானவேடிக்கையாக காட்டிக்கொண்டிருந்தனர். 

இதில், அற்புதமாக விளையாடிய பட்லர், 36 பந்துகளில் அரைசதம் கடந்த நிலையில், தேவ்தத் படிக்கல் 31 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினர். இவர்கள் இருவரின் அதிரடியால், ராஜஸ்தான் அணி 11 ஓவர்களில் 100 ரன்களை கடந்தது. 

அத்துடன், இந்த #IPL2022 சீசனில் தொடக்க வீரர்கள் அடிக்கும் முதலாவது 100 ரன்கள் பாட்னர்ஷிப் இதுவாக அமைந்து போனது. 

அப்போது, அதிரடியாக ஆடி வந்த தேவ்தத் படிக்கல், 54 ரன்களில் அவுட்டாக, #RR கேப்டன் சாம்சன் களமிறங்கி, படிக்கல் விட்டுச் சென்ற அதிரடியை தொடங்கினார்.

எனினும், மறுமுனையில் வெறும் சிக்சர், ஃபோர் என்று வானவேடிக்கை காட்டிக்கொண்டிருந்த பட்லர், 57 பந்துகளில் 6 சிக்சர், 6 பவுண்டரி என தெறிக்கவிட்டு சதம் அடித்து அசத்தினார். இதன் மூலம், நடப்பு ஐபிஎல் தொடரில் பட்லருக்கு இது 3 வது சதமாகும். அத்துடன், தொடர்ந்து அதிரடி காட்டிய பட்லரால் #RR ராஜஸ்தான் அணி 18.4 ஓவரில் 200 ரன்களை கடந்தது. 

அப்போது, 65 பந்துகளில் 106 ரன்கள் சேர்த்த பட்லர், ஆட்டமிழந்தார். சஞ்சு சாம்சனும் தன் பங்கிற்கு வானவேடிக்கை காட்டிய நிலையில். 19 பந்தில் 46 ரன்கள் சேர்த்தார். இதனால், 20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 222 ரன்கள் குவித்தது. இதனால், நடப்பு  #IPL2022 சீசனில் அதிகபட்ச ஸ்கோர் மற்றும் தனி நபரின் அதிக பட்ச ஸ்கோர் என 2 புதிய சாதனைகளையும், ராஜஸ்தான் அணி படைத்து காட்டியது. 

இதனால், 223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் #DC டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக ப்ரித்வி ஷா - டேவிட் வார்னர் ஜோடி களமிறங்கிய நிலையில், இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய நிலையில், 5 பவுண்டரி 1 சிக்சருடன் டேவிட் வார்னர் 28 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார்.

பின்னர் வந்த சர்பிரஸ் கான் 1 ரன்னில் வெளியேற, ப்ரித்வி ஷாவுடன் #DC டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த் ஜோடி சேர்ந்து, இருவரும் சிறப்பாக விளையாடினார்கள். இருப்பினும், ப்ரித்வி ஷா 37 ரன்னில் ஆட்டமிழந்தார்.

பின்னர், சிறப்பாக விளையாடிய ரிஷப் பண்ட் 44 ரன்களும், லலித் 37 ரன்களும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்த நிலையில், கடைசி ஓவரில் #DC டெல்லி அணி வெற்றி பெற 36 ரன்கள் தேவைப்பட்டது. 

அப்போது, #DC டெல்லி அணி வீரர் பொவேல் முதல் 3 பந்தை சிக்சராக பறக்கவிட்டு வானவேடிக்கை காட்டிக்கொண்டிதார். இதனால், அந்த ஆட்டத்தில் பெரும் பரபரப்பு தொற்றி கொண்டது. ஆனால், அடுத்த 3 பந்தையும் பெரிய ஷாட் அடிக்க அவரால் முடியவில்லை. இதனால், டெல்லி அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் விடாமல் போராடிய நிலையில், தோல்வி அடைந்தது.

குறிப்பாக, ஓபெட் மெக்காய் வீசிய கடைசி ஓவரில், முதல் 3 பந்துகளை  #DC வீரர் போவல் சிக்ஸர்களாக மாற்றினார். ஆனால், அப்போது வீசப்பட்ட அந்த 3 வது பந்து ஃபுல் டாஸாக வந்த பந்தை தான், போவெல் சிக்ஸருக்கு அடித்து வானவேடிக்கை காட்டினார். என்றாலும், “அந்த பந்து நோ பால்” என்று, அம்பயரிடம் கேட்டார். ஆனால், “இந்த பந்து சரியான பந்து தான்” என்று, நடுவரும் பிடிவாதமாக இருந்தார்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த டெல்லி அணியின் வெளியே நின்றிருந்த பயிற்சியாளர்கள் மற்றும் சக வீரர்கள் என அனைவரும் நடுவரின் முடிவுக்கு எதிராக கடும் வாக்குவாதம் செய்தனர். 

இந்த வாக்குவாதத்தில், ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த பண்ட், கள வீரர்களிடம் “நீங்கள் யாரும் விளையாட வேண்டாம், வெளியே வாருங்கள், ஏமாற்றுகிறார்கள்” என்று, அழைத்தார். இதனால், களத்தில் நின்றிருந்த இரு பேட்ஸ்மேன்களும் வெளியே கிளம்ப புறப்பட்டுவிட்டனர். அப்போது, அந்த களத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

என்றாலும், நடுவர் அந்த இரு வீரர்களிடம் ஏதோ பேச அதன் பிறகு சமாதானம் அடைந்த அந்த இரு வீரர்களும் பின்னர் விளையாடினார்கள். எனினும், டெல்லி அணியானது 20 ஓவர்களின் முடிவில் 207 ரன்கள் மட்டுமே எடுத்தது குறிப்பிடத்தக்கது.