#IPL2022 சீசனில் தோனி மீண்டும் கேப்டன்ஸியை ஏற்று உள்ள நிலையில், #CSK டீமுக்கு மொத்தமாக SPARK வந்த மாதிரி, ஐதராபாத்தை பந்தாடி அசத்தல் வெற்றியை பதிவு செய்திருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

#IPL2022 சீசனில் #CSK சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக மீண்டும் தோனி நியமிக்கப்பட்டு உள்ளார்.

#IPL2022 15 வது சீசன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், #CSK சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக மீண்டும் தோனி நியமிக்கப்பட்டு உள்ளதால், நேற்றைய போட்டியில் மொத்த  #CSK டீமும் SPARK வந்த மாதிரி தங்களது ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

அதன்படி, நேற்று இரவு நடைபெற்ற 46 வது லீக் போட்டியில் சென்னை - ஐதராபாத் அணிகள் மோதின.

அதில், டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன் படி, சென்னை அணியின் சார்பில் தொடக்க வீரர்களாக கான்வேவும் - ருத்துராஜ் கெய்க்வாட்டும் களமிறங்கினர். தொடக்கத்தில் இருவரும் பொறுமையாகவும், நிதானமாகவும் விளையாடிய நிலையில், போக போக தங்களது அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி அதிரடி காட்டினார்கள்.

இதனால், பவர்பிளே முடிவில்  #CSK சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது, விக்கெட் இழப்பின்றி 40 ரன்கள் சேர்த்தது. அத்துடன், #IPL2022 நடப்பு சீசனில் முதல் முறையாக #CSK அணியின் தொடக்க வீரர்கள் பவர் பிளேவில் விக்கெட்டை பறிகொடுக்காமல் இருந்தது இதவே முதல் முறையாகும். அதன் பிறகு,  கான்வேவும் - ருத்துராஜ் கெய்க்வாட்டும் அதிரடி காட்டத் தொடங்கினார்கள் இதனால், #CSK வின் ரன் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.

இந்தப் போட்டியில் கான்வேவும் - ருத்துராஜ் கெய்க்வாட்டும் பல சாதனைகளை படைத்தனர்.

குறிப்பாக, #CSK அணியின் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்பில் கான்வேவும் - ருத்துராஜ் கெய்க்வாட்டும் 182 ரன்களைச் சேர்த்தனர். அந்த ரன்களே, #IPL வரலாற்றில் #CSK வின் அதிக பட்சமாக ஸ்கோராக அமைந்தது.

அத்துடன், ஐதராபாத் அணிக்கு எதிராக அதிக ரன்கள் ஓபனிங் பார்ட்னர்சிப் வைத்த ஜோடி என்ற பெருமையை ருத்துராஜ் - கான்வே ஜோடி படைத்தனர்.

அதே நேரத்தில், இந்த சீனில் சற்று சொதப்பி வந்த ருத்துராஜ், நேற்றைய போட்டியின் மூலமாக கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் சாதனையை சமன் செய்தார்.

அதாவது, இந்த போட்டியின் மூலமாக ருத்துராஜ் கெய்க்வாட், 31இன்னிங்சில் ஆயிரம் ரன்களை விளாசினார். இதன் மூலமாக, #IPL தொடரில் அதிவேகமாக ஆயிரம் ரன்களை கடந்த இந்திய வீரர் என்ற சச்சின் சாதனையை ருத்துராஜ் சமன் செய்தார். 

மேலும், 57 பந்துகளில் 6 சிக்சர்கள், 6 பவுண்டரிகள் என மொத்தம் 99 ரன்கள் எடுத்த நிலையில், சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டபோது, 1 ரன்னில் ருத்துராஜ் தனது சதத்தை தவறவிட்டார். 

இதனால், முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 182 ரன்கள் சேர்த்தது. பின்னர் வந்த கேப்டன் தோனி, 8 ரன்னில் வெளியேறி கான்வே 55 பந்துகளில் 85 ரன்கள் அடித்து, இறுதிவரை ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார். இதன் மூலம் #CSK அணி 20 ஓவர் முடிவில் 202 ரன்கள் குவித்தது. 

இதனால், 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய #SRH ஐதராபாத் அணியில் அபிஷேக் சர்மா - கேப்டன் வில்லியம்சன் ஜோடி களம் இறங்கி தொடக்கம் முதலே அதிரடி காட்டினர். ஆனாலும், பவுலிங்கில் பலமே இல்லாத #CSK அணியானது தங்களது பவுலிங்கில் கடும் நெருக்கடி கொடுத்தனர். இதனால், அபிஷேக் 39 ரன்களும், வில்லியம்சன் 47 ரன்களும் ஆட்டமிழந்த நிலையில், ராகுல் திரிபாதி டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். 

இப்படியாக, கடைசி ஓவரில் #SRH ஐதராபாத் அணி வெற்றி பெற 50 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது, களத்தில் இருந்த நிக்கோலஸ் பூரன் அதிரடி காட்டிக்கொண்டு இருந்தார். அப்போது, கடைசி ஓவரில் #SRH ஐதராபாத் அணி வெற்றி பெற 38 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், முகேஷ் சௌத்ரியின் அந்த ஓவரில் 3 சிக்சர், ஒரு பவுண்டரி என மொத்தம் 24 ரன்களை விட்டு கொடுத்தார்.

இதன் மூலமாக, 13 ரன்கள் வித்தியாசத்தில் #CSK அணியானது 3 வது வெற்றியை பதிவு செய்தது. இந்த போட்டியில முகேஷ் சௌத்ரி 4 விக்கெட்டை கைப்பற்றினார்.