ஐபிஎல் தொடரில் இருந்து கடைசி நேரத்தில் 3 இங்கிலாந்து வீரர்கள் திடீரென்று விலகி உள்ளனர்.

14 வது ஐபிஎல் தொடரில் மீதமுள்ள போட்டிகள் அனைத்தும் வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் நடைபெறுகிறது. இறுதிப் போட்டியானது வரும் அக்டோபர் 15 ஆம் தேதியன்று நடைபெறுகிறது.

அதே நேரத்தில், இந்தியாவில் கொரோனா தொற்றின் அச்சம் இன்னும் நிலவி வருவதால், மீதமுள்ள போட்டிகள் அனைத்தும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது நடைபெற உள்ளன. 

முக்கியமாக, இந்த ஐபிஎல் தொடர் முடிந்த அடுத்த 2 நாட்களில் டி 20 உலகக் கோப்பை தொடர் நடக்க இருப்பதால், இந்த ஐபிஎல் தொடரில் வெளிநாட்டு வீரர்கள் கலந்துகொள்வதில் பெரும் சிக்கல் நீடித்து வந்தது. 

இதன் காரணமாக, பல வெளிநாட்டு வீரர்களும், ஐபிஎல் தொடரின் 2 வது பாதியில் பங்கேற்க மாட்டோம் என்றும் கூறி வருகின்றனர். 

இதனால், வேறு வழியின்றி மாற்று வீரர்களை ஒப்பந்தம் செய்து அணிகள் களமிறங்க தற்போது தயாராக வந்தன.

இந்த நிலையில் தான், இந்த ஐபிஎல் தொடரில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிக்கா விளையாடி வரும் இங்கிலாந்து கிரிக்கெட் வீரரும், விக்கெட் கீப்பர் ஜானி பேர்ஸ்டோ, ஐபிஎல் தொடரில் இருந்து திடீரென வெளியேறி உள்ளார்.

அவரைப் போலவே, 20 ஓவர் கிரிக்கெட்டின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் டேவிட் மலான், இந்த முறை பஞ்சாப் கிங்ஸ் அணிக்கா விளையாடி வந்த அவரும், தற்போது விலகி உள்ளார்.

அவரைப் போலவே, ஆல் ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கா விளையாடி வந்த அவரும் சொந்த காரணங்களுக்காக வருகிற 19 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கும் ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து விலகுவதாக அறிவித்து உள்ளனர். 

இப்படியாக, தனிப்பட்ட காரணங்களுக்காக எஞ்சிய ஐபிஎல் போட்டிகளில் விளையாடவில்லை என்று அவர்கள் அறிவித்து உள்ளனர்.

இங்கிலாந்து அணியை சேர்ந்த நட்சத்திர வீரர்களான பேட்ஸ்மேன் ஜானி பேர்ஸ்டோ, டேவிட் மாலன் மற்றும் அல்ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ், ஆகிய 3 பேரும் ஐபிஎல் தொடரில் இருந்து திடீரென வெளியேறினாலும், அவர்கள் 3 பேரும் அமீரகத்தில் 6 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்துதலை கடைப்பிடிக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் திடீரென உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

தற்போது, ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகி உள்ள இந்த 3 வீரர்களும், 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான இங்கிலாந்து அணியில் இடம் பெற்று உள்ளனர்.

இவர்கள் 3 பேரும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரிலும் இடம் பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. 

குறிப்பாக, ஏற்கனவே ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர் ஆகிய இங்கிலாந்து நட்சத்திர வீரர்கள் விலகிய நிலையில், தற்போது மேலும் 3 முன்னணி வீரர்கள் ஐபிஎல் தொடரிலிருந்து விலகி இருப்பது, சம்பந்தப்பட்ட அணிகளுக்கு பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. 

இதன் காரணமாக, பஞ்சாப் அணியானது டேவிட் மலானுக்கு பதிலாக, தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன் எய்டன் மார்க்ராமை ஒப்பந்தம் செய்திருக்கிறது.

மற்ற இருவருக்குப் பதிலாக சரியான மாற்று வீரர்களை அந்தந்த அணி நிர்வாகம் தற்போது தேடி வருகிறது.

முக்கியாக, “மொயீன் அலி, சாம் பில்லிங்ஸ், சாம் கர்ரன், டாம் கர்ரன், ஜார்ஜ் கார்டன், மோர்கன், கிறிஸ் ஜோர்டான், அடில் ரஷித், லிவிங்ஸ்டன், ஜாசன் ராய்”
மற்ற இங்கிலாந்து வீரர்கள் இந்த ஐபிஎல் தொடரில் விளையாடுவார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.