ஐபிஎல் தொடக்கப் போட்டியில் சென்னை அணியில் 3 பெரும் ஏமாற்றங்கள் நிகழ உள்ள நிலையில், கொல்கத்தா அணியின் 2 முக்கிய வீரர்கள் இல்லை என்கிற தகவலும் வெளியாகி உள்ளது.

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரின் 15 வது சீசன், வரும் 26 ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இந்த முறை வழக்கமான 8 அணிகளுடன் கூடுதலாக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகளும் புதிதாக சேர்ந்து உள்ளதால், கூடுதலான எதிர்ப்பு ஏற்பட்டு உள்ளது. 

அத்துடன், இந்த சீசன் ஐபிஎல் போட்டிகள் தொடங்க இன்னும் 3 நாட்கள் மட்டும் உள்ள நிலையில், ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்பு எகிர வைத்து உள்ளது.

இந்த முறையும், கொரோனா அச்சுறுத்தல்கள் இருப்பதால், ஐபிஎல் போட்டிகள் முழுவதும் மும்பை, புனே நகரங்களில் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இவற்றுடன், வான்கடே மைதானத்தில் 25 சதவீத அளவிற்கு மட்டும் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளதால், போட்டிக்களுக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியுள்ளது

கடந்த சீசனின் இறுதிப் போட்டியில் மோதிய சென்னை - கொல்கத்தா அணிகள் தான், இந்த முறை முதல் போட்டியில் மோதி விளையாடுகிறது. 

அதன் படி,  வரும் 26 ஆம் தேதி மும்பை வான்கடேவில் நடைபெறும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்த நிலையில் தான், சென்னை அணிக்கு தொடக்கமே சற்று பின்னடைவாக அமைந்து உள்ளது என்றே சொல்லலாம். 

அதாவது, சென்னை அணி சார்பில் தீபக் சஹார் 14 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். ஆனால், அவர் காயம் காரணமாக முதல் பாதி தொடரில் விளையாட முடியாது சூழல் ஏற்பட்டுள்ளது. 

கடந்த 2 சீசனாக பவர் ப்ளேவில் மட்டும் 32 விக்கெட்களை எடுத்து, எந்த பவுலரும் நெருங்க முடியாத ஒரு புதிய உச்சத்தில் தீபாக் சஹார் இருக்கிறார். 

இதனால், முதல் போட்டியில் அசுரு வேகத்தில் பந்து வீசக்கூடிய பவுலராக தென்னாப்பிரிக்க வீரர் டுவைன் பிரிட்டோரியஸை தேர்வு செய்தனர். இந்த சூழலில் தான், பிரிட்டோரியஸ் இன்னும் இந்தியா வரவில்லை என்கிற தகவலும் வெளியாகி உள்ளன. 

அதாவது, வங்க தேசத்துக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் விளையாடி நிலையில் தான், நாளைய தினம் அவர் இந்தியா வருவார் என்றும், அப்படியே அவர் இந்தியா வந்தாலும், அடுத்த 3 நாட்கள் குவாரண்டைன் தனிமையில் இருக்க வேண்டும் என்றும், அதன் பிறகே அவரால் அணிக்கு திரும்ப முடியும் என்றும் கூறப்படுகிறது. இதனால், அவரால் வரும் 26 ஆம் தேதி நடைபெறும் கொல்கத்தாவுடனான முதல் லீக் போட்டியில் பங்கேற்க முடியாது சூழல் உருவாகி உள்ளது.

அதே போல், மொயீன் அலியும் விசா பிரச்சினை காரணமாக இன்னும் இந்தியா வந்து சேரவில்லை. அவர், சற்று தாமதமாகவே ஐபிஎல் தொடரில் பங்கேற்கிறார் என்றும் கூறப்படுகிறது. 

மொயீன் அலியை பொறுத்தவரையில், மிடில் ஆர்டரில் சென்னை அணிக்கு பெரும் தூணாக இருந்து அணியை மீட்டெக்ககூடியவர். இப்படியாக, சென்னை அணியில் முக்கியமான 3 வீரர்கள் இல்லாமல் முதல் போட்டியில் களம் இறங்குவது, தோனிக்கு பெரும் சிக்கலாகவே இருப்பதாக கூறப்படுகிறது.

அதே போல், கொல்கத்தா அணியின் முன்னணி பவுலரான பேட் கம்மின்ஸ் மற்றும் ஓப்பனிங் இறங்கும் ஆரோன் ஃபிஞ்ச் ஆகியோரும் முதல் 5 போட்டியில் களம் இறங்க மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், முதல் போட்டியில் இரு அணிகளின் சார்பிலும் முக்கிய வீரர்கள் இல்லாமல் இரு அணிகளும் களம் இறங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.