“லக்கிம்பூரில் கார் ஏற்றி விவசாயிகள் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து பிரதமர் மோடி மவுனமாக இருப்பது ஏன்” என்று, காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல்
கேள்வி எழுப்பி உள்ளா நிலையில், “கொலை சம்பத்தில் குற்றம்சாட்டப்பட்டவரை கைது செய்யாமல், அவர்களிடம் ஏன் கெஞ்சுகிறீர்கள்?” என்று, உத்திரப் பிரதேச
அரசுக்கு நீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளது.

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி டெல்லி எல்லையில் கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து விவசாயிகள் போராட்டம் நடத்தி
வருகின்றனர். 

இப்படியான சூழலில் தான், உத்தரப் பிரதேசத்தில் உள்ள லக்கிம்பூரில் அரசு விழாவில் பங்கேற்க கடந்த சில தினங்களுக்கு முன்பு உத்திரப் பிரதேச துணை
முதலமைச்சர் கேசவ் மவுரியா, ஒன்றிய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா ஆகியோர் தங்களது காரில் சென்றனர்.

அப்போது, அவர்களை எதிர்த்து போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது, மத்திய அமைச்சரின் மகன் காரை ஏற்றி 4 அப்பாவி விவசாயிகளை கொலை செய்ததாக
குற்றம்சாட்டப்படுகிறது. 

இதனால் ஏற்பட்ட கலவரத்தில் பாஜவினர் உட்பட மொத்தம் 9 பேரை வரை உயிரிழந்தனர். மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ராதான் காரை
எற்றி விவசாயிகளை கொடூரமான முறையில் கொன்றதா தொடர்ச்சியாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. 

இந்த சம்பவம், நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியையும், பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. வன்முறை குறித்து காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து பிரதமர்
மோடியை மிக கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

அத்துடன், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட பல தலைவர்கள் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினரை நேரில்
சந்தித்து ஆறுதல் கூறினார்கள். 

அதே நேரத்தில், இந்த பிரச்சனை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இது வரை வாய் திறந்து எந்த விளக்கமும் அளிக்கவில்லை. அதே நேரத்தில் விவசாயிகள்
படுகொலைக்கு காரணமான பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சர் இன்னும் பதவி விலகாமலும், மற்றும் அவரது மகன் இதுவரையில் கைது செய்யாமலும் இருந்து
வருகின்றனர். 

இதனால், இந்தியாவின் பல்வேறு தரப்பினரும் இது குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். அதன் படி, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல்,
“லக்கிம்பூர் சம்பவம் பற்றி தெரிந்த பிறகும் பிரதமர் மோடி மவுனமாக இருப்பது ஏன்?” என்று, தனது டிவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். 

மேலும், “லக்கிம்பூர் கெரி சம்பவம் உண்மையில் கொடூரமானது என்றும், ஆனால் ஏன் நீங்கள் அதுகுறித்து அறிந்தும் மவுனமாக இருக்கிறீர்கள் மோடி?” என்று
கேள்வி எழுப்பியிருக்கிறார்.

“கலவரத்தில் கொல்லப்பட்ட விவசாயிகளுக்காகக் குறைந்தபட்சம் ஒரு இரங்கல் வார்த்தை உங்களிடம் இருந்து வருவது எங்களுக்கு அவசியம் என்றும், அது
ஒன்றும் கடினமானதாக இருக்காதே என்றும், நீங்கள் எதிர்க்கட்சியாக இருந்திருந்தால், எவ்வாறு நீங்கள் எதிர்வினையாற்றி இருப்பீர்கள். தயவுசெய்து எங்களிடம் கூறுங்கள்” என்று, கபில் சிபல் பதிவிட்டு உள்ளார்.

அதே போல், “கொலை சம்பத்தில் குற்றம்சாட்டப்பட்டவரை கைது செய்யாமல் கெஞ்சுகிறீர்கள்?” என்று, உத்திரப் பிரதேச அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி 

உச்சநீதிமன்றம் எழுப்பிய கேள்விகள்
 
 குறிப்பாக, “லக்கிம்பூரில் விவசாயிகள் உயிரிழந்த வழக்கை இப்படித்தான் அலட்சியமாகக் கையாளுவீர்களா?

கொலைக்குற்றம் சாட்டப்பட்டவர் சாதாரண நபர் என்றால், இதற்குள் கைது செய்திருக்க மாட்டீர்களா?

லக்கிம்பூரில் மிகமோசமான படுகொலை, துப்பாக்கிச்சூடு எல்லாம் நடந்திருக்கிறது. IPC 302 ன் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளது.

குற்றஞ்சாட்டப்பட்டவரை இன்னும் கைது செய்யாமல், இன்று ஆஜராகுங்கள், நாளை ஆஜராகுங்கள் என்று கெஞ்சி கொண்டிருக்கிறீர்கள்.

வேறு யாராவது இதை செய்திருந்தால், இப்படித்தான் நீங்கள் நடந்து கொள்வீர்களா?” என்று, உச்சநீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளது.