என்ஜினீயரிங் படிப்பில் சேரும் மாணவர்களுக்கான ரேண்டம் எண்ணை உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன்

என்ஜினீயரிங் படிப்பில் சேரும் மாணவர்களுக்கான ரேண்டம் எண்ணை உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன்  - Daily news


12 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான இணையவழி விண்ணப்பம் கடந்த ஜூலை மாதம் 15ஆம் தேதி ஆரம்பமாகி மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கான அவகாசம் கடந்த 16 ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான ரேண்டம் எண் இன்று மாலை 4 மணிக்கு வெளியிடப்பட்டது. ஒரே கட்-ஆப் மதிப்பெண் கொண்ட பலரையும் வரிசைப்படுத்த ரேண்டம் எண் பயன்படும் எனக்கூறப்படுகிறது.

முந்தைய ஆண்டுகளை ஒப்பிட்டு பார்க்கும்போது, இந்த ஆண்டு அதிகளவு மாணவர்கள் என்ஜினீயரிங் படிப்பில் சேர போட்டிப்போட்டு விண்ணப்பத்திருப்பதாக சொல்லப்படுகிறது. மொத்தம் 1 லட்சத்து 60 ஆயிரத்து 834 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களில் ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 436 பேர் விண்ணப்ப கட்டணம் செலுத்தி இருந்தனர். இதில் 29 ஆயிரத்து 398 பேர் விருப்பம் தெரிவிக்காமல் கட்டணம் செலுத்தவில்லை.

விண்ணப்ப கட்டணம் செலுத்தியவர்கள் அடுத்தகட்டமாக சான்றிதழ் பதிவேற்றம் செய்யவேண்டும். அதன்படி, நேற்று முன்தினம் வரை சான்றிதழ் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டு இருந்தனர். அதன்படி ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 206 பேர் தங்களுடைய சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்தனர். விண்ணப்ப கட்டணம் செலுத்தியவர்களில், 17 ஆயிரத்து 230 பேர் விருப்பம் காட்டாதது இதன் மூலம் தெரியவந்து இருக்கிறது. இந்த புள்ளி விவரங்களை பார்க்கும்போது, கலந்தாய்வு தொடங்குவதற்கு முன்பே விண்ணப்பித்தவர்களில் 46 ஆயிரத்து 628 பேர் ஆர்வம் காட்டாதது தெரிய வருகிறது.

இதனைத்தொடர்ந்து ரேண்டம் எண் வெளியிடப்படும். அதன்படி, விண்ணப்ப கட்டணம் செலுத்தி, சான்றிதழ் பதிவேற்றம் செய்த மாணவர்களுக்கான ரேண்டம் எண்ணை உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் இன்று மாலை 4 மணிக்கு சென்னை தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரியின் ஒருங்கிணைந்த பயிலரங்க வளாகத்தில் வெளியிட்டார்.

முன்னதாக மாணவா்கள் தங்களின் சான்றிதழ்களை ஜூலை 31-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 20-ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்வதற்குத் தேவையான வசதிகளை பொறியியல் மாணவா் சோ்க்கைக் குழு செய்திருந்தது. இந்த காலகட்டத்தில் 1,11,436 போ் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்திருந்தனா். இதையடுத்து பொறியியல் படிப்பில் சேர உள்ள மாணவா்களின் கோரிக்கையை ஏற்று, சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய ஆக. 24-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 206 மாணவா்கள் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்துள்ளனா். விண்ணப்பங்களில் தவறுதலாகப் பதிவு செய்து இருக்கலாமோ என்ற எண்ணத்தில் சிலா் மீண்டும் விண்ணப்பித்துள்ளனா். விண்ணப்பித்து பதிவு கட்டணம் செலுத்திய ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 436 மாணவா்களுக்கும் சம வாய்ப்பு எண் இன்று வழங்கப்பட்டுள்ளது.

இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.பி.அன்பழகன், “அரசு கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு கல்வி கட்டணம் உயர்வு இல்லை. கடந்தாண்டு 480 ஆக இருந்த பொறியியல் கல்லூரிகள், இந்தாண்டு அது 458 கல்லூரிகளாக குறைந்துள்ளது. புதிய கல்வி கொள்கை குறித்து ஆராய குழு செயலாளர் தலைமையில் ஆராய்ந்து குழு அமைக்கப்படும். கட்டணம் கட்டிவிட்டு தேர்வு எழுத தயாராக இருந்த அனைவரும் தேர்ச்சி பெறுவார்கள். தொலைதூர கல்வியில் ஈடுபடும் மாணவர்களுக்கும் இது பொருந்தும். பி.இ. படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் செ.17ஆம் தேதி வெளியிடப்படும்” எனக் கூறினார்

Leave a Comment