ஆயுள் கைதி மனைவி குழந்தை பெற விரும்பியதை அடுத்து கைதிக்கு 15 நாட்கள் பரோல் குடுத்து உத்தரவிட்டது ராஜஸ்தான் உயர் நீதி மன்றம். 

ஆயுள் தண்டனை பெற்று சிறையில்  தண்டனை அனுபவித்து வரும் கணவர் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பிய மனைவி நீதிமன்றத்தை நாடியதை அடுத்து அவரின் கோரிக்கையை ஏற்று கணவருக்கு 15 நாட்கள் பரோல் வழங்கி உத்தரவிட்டுள்ளது ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் .

ராஜஸ்தான் மாநிலத்தில் அஜ்மீரைச் சேர்ந்தவர் நந்தலால். இந்த கைதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் ஆயுள்  தண்டனை அனுபவித்து வருகிறார். ஆயுள் தண்டனை கைதியான நந்தலால் சில ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகிறார்.

இந்நிலையில் நந்தலாலுக்கு திருமணமாகி ரேகா என்ற மனைவி உள்ளார். அவர் கணவருடன் திருமண உறவில் ஈடுபட்டு அவர் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளவும் விரும்புகிறேன் என்று ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். கணவர் மூலம் தான் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புவதால் கணவரை 15 நாட்கள் பரோலில் விடுதலை செய்ய வேண்டும் என்று அவர் கோரியிருந்தார்.

அதனைத்தொடர்ந்து ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் இந்த மனுவை விசாரித்தது.   அப்போது சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதியின் மனைவி குழந்தை பெற்றுக் கொள்வது அவரது அடிப்படை உரிமை.   அவர் எந்த குற்றங்களையும் செய்யாத போதும்,   கணவன் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வதை தடுப்பது மனைவியின் உரிமையை மோசமாக பாதிக்கும்.  ஆகவே, ஒரு குற்றவாளியின் நடத்தையை மாற்றுவதற்கும் திருமண உறவுகள் உதவும் என்பதை கவனத்தில் கொள்வதாக நீதிபதி தெரிவித்தார்.

மேலும் அப்பெண்ணின் வலியை புரிந்துகொண்டு, எந்த தவறையும் செய்யாமல் கணவன் இல்லாமலும்,  பிள்ளைகள் இன்றியும் தவிக்கும் நிலைக்கு மனைவி தள்ளப்பட கூடாது என்றும் தெரிவித்த நீதிபதி, ஆயுள் தண்டனை கைதி  நந்தனுக்கு 15 நாட்கள் அவசர பரோல் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.