எக்ஸ்பிரஸ் ரயிலில் கொள்ளை கும்பலால் இளம் பெண் ஒருவர் 8 பேரால் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

லக்னோவில் இருந்து மும்பை சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் தான் இப்படி ஒரு அதிர்ச்சியூட்டும் கூட்டுப் பாலியல் பலாத்காரம் அரங்கேறி இருக்கிறது.

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து மும்பை நோக்கி கடந்த 8 ஆம் தேதி இரவு “லக்னோ - மும்பை புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயில்” புறப்பட்ட சென்றது. 

அப்போது, மராட்டியத்தின் லகட்புரி நகர் பகுதியில் இருக்குமு் ரயில் நிலையத்திற்கு அந்த ரயில் வந்தபோது, அந்த நேரத்தில் பயங்கர ஆயுதங்களுடன் 8 கொள்ளை கும்பல்கள் ஏறி உள்ளனர். 

அந்த நேரம் பார்த்து, அங்குள்ள ஏசி கோச் கொண்ட படுக்கை பெட்டியில் ஏறிய அந்த கொள்ளை கும்பல், சக பயணிகளிடம் ஆயுதங்களை காட்டி மிரட்டிய நிலையில், அவர்கள் அணிந்திருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்தனர்.

அத்துடன், அந்த ஏசி கோச் கொண்ட படுக்கை பெட்டியில், 20 வயது நிரம்பிய இளம் பெண் ஒருவர் தனது கணவருடன் பயணித்து இருக்கிறார்.

அந்த இளம் பெண்ணின் கணவனை கத்தி முனையில் நிற்க வைத்து, அந்த 8 பேர் கொண்ட கொடூர கொள்ளை கும்பல், அந்த இளம் பெண்ணை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர். எனினும், இந்த பலாத்காரத்தை தடுக்க முயன்ற அந்த இளம் பெண்ணின் கணவர் மற்றும் சக பயணிகளை அந்த 8 பேர் கொண்ட கொள்ளை கும்பல் தங்களது ஆயுதங்களால் அவர்களை தாக்கி உள்ளனர்.

அந்த நேரம் பார்த்து அந்த ரயில், மும்பையின் கசரா ரயில் நிலையம் வந்துள்ளது. அப்போது, இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட சக பயணிகளும் சத்தம் போட்டு கூச்சலிட்டு உதவிக்கு ஆட்களை அழைத்து உள்ளனர். 

இந்த சத்தம் கேட்டு, பக்கத்தில் இருந்த சக பயணிகளும் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், அங்கு விரைந்து வந்த போலீசார், அந்த 8 பேர் கொண்ட கொள்ளை கும்பலில் 4 பேரை அதிரடியாக கைது செய்துள்ளனர். ஆனால், மற்ற 4 கொள்ளையர்கள் அங்கிருத்து தப்பித்து ஓடி உள்ளனர்.

மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், ரயில்வே போலீசார் தப்பியோடிய கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்தனர்.  

இந்த நிலையில், ஓடும் ரயிலில் இளம் பெண்ணை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பியோடிய மற்ற 4 கொள்ளையர்களையும் ரயில்வே போலீசார் தற்போது அதிரடியாக கைது செய்து உள்ளனர். இதனால், ஓடும் ரயிலில் கொள்ளை மற்றும் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட 8 பேரும் தற்போது கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

குறிப்பாக, இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், “கைது செய்யப்பட்டுள்ள 8 பேரில் 4 பேர் குற்றப் பிண்ணனி கொண்டவர்கள் என்றும், கைது செய்யப்பட்ட 8 பேரும் மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர்கள்” என்றும், போலீசார் தெரிவித்து உள்ளனர். 

முக்கியமாக, “கைது செய்யப்பட்ட 8 பேரும் 18 முதல் 25 வயதிற்கு உட்பட்ட இளைஞர்களே” என்றும், போலீசார் கவலைத் தெரிவித்து உள்ளனர். அத்துடன், இது தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இச்சம்பவம், சக ரயில் பயணிகள் மத்தியில் பெரும் பீதியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.