இந்திய சுதந்திரத்தைத் தொடர்ந்து, மகாத்மா காந்தி குறித்து சர்ச்சைக் கூறிய கருத்தை நடிகை கங்கனா ரனாவத் வெளியிட்டு உள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பாலிவுட் நடிகை  கங்கனா ரணாவத் சமீபத்தில் சர்ச்சைக்குறிய வகையில் தொடர்ந்து பேசி வருகிறார். இதனால், அவர் தொடர்ந்து அடுத்தடுத்த சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.

அதுவும், டிவிட்டர் நிறுவனமே அவரது டிவிட்டர் கணக்கை முடக்கும் அளவிற்கு மிகப் பெரிய அளவில் சர்ச்சைக்கு பெயர் போனவர் நடிகை கங்கனா. 

அப்படி தான், நம் நாட்டின் சுதந்திரம் பற்றி சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்து, தற்போது சிக்கலுக்குள்ளும் சிக்கியிருக்கிறார் நடிகை கங்கனா ரணாவத். 

அதாவது, சமீபத்தில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகை கங்கனா ரணவாத், “பிரிட்டிஷ் ஆட்சியின் தொடர்ச்சி தான் காங்கிரஸ் ஆட்சி” என்று, மிக கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். 

“இந்தியாவுக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு தான் உண்மையான சுதந்திரம் கிடைத்தது என்றும்” பாஜக ஆட்சி அமைத்திருந்ததை அவர் குறிப்பிட்டு பேசியிருந்தார்.

அதுவும், “கடந்த 1947 ஆம் ஆண்டு கிடைத்தது பிச்சை தான் என்றும், அது சுதந்திரம் அல்ல” என்றும், இந்தியா சுதிந்திரம் அடைந்த நாளையும், அன்றைய தினத்தையும் மிகவும் கொச்சைப் படுத்தும் விதமாக அவர் பேசியிருந்தார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. 

நடிகை கங்கனா ரணாவத்தின் இந்த ஆணவ பேச்சுக்கு, காங்கிரஸ் கட்சி மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் மிக கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இது குறித்து, பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்துக்கு எதிராக, ஆம் ஆத்மி கட்சியினர் மும்பையில் உள்ள காவல் நிலையத்தில் கடந்த வாரம் புகார் அளித்தனர்.

முக்கியமாக, நடிகை கங்கனா ரணாவத்துக்கு பாஜக தலைமையிலான மத்திய அரசால் “பத்மஸ்ரீ விருது” வழங்கப்பட்டது.

இதனையடுத்தே,  நடிகை கங்கனா ரணாவத் பேசிய ஒளிப்பரப்பு செய்யப்பட்டதால், கடும் அதிர்ச்சியடைந்த பல்வேறு தரப்பினரும் “பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்துக்கு விருது கொடுத்தது தவறு” என்று, பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

குறிப்பாக, “அவருக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதைத் திரும்பப் பெற வேண்டும்” என்றும், வலியுறுத்தி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு பல்வேறு தரப்பினரும் கடிதம் எழுதியிருந்தார்கள்.

இப்படியாக, இந்திய சுதந்திரத்தைப் பற்றி மிகவும் சர்ச்சைக்குறிய வகையில் இழிவான கருத்து தெரிவித்திருந்த நடிகை கங்கனா ரனாவத், தற்போது தேசத் தந்தை மகாத்மா காந்தி குறித்து சர்ச்சைக்கூறிய கருத்தை வெளியிட்டு இருக்கிறார்.

இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸ் பிரிவில் சில கருத்துகளைப் பதிவிட்டு உள்ளார். இதற்காக, கடந்த 1940 ல் வெளியான செய்தித் தாளின் சில பழைய கட்டுரைகளை மேற்கோள் காட்டி தனது கருத்துகளை அவர் பதிவிட்டுயிருக்கிறார்.

அதில், “நீங்கள் காந்தி ஆதரவாளராக இருக்கலாம். இல்லையேல் நேதாஜியின் ஆதரவாளராக இருக்கலாம். ஆனால், ஒரே நேரத்தில் நீங்கள் இருவரின் ஆதரவாளராகவும் இருக்க முடியாது. எனவே, நீங்கள் சுயமாக முடிவு செய்து யாருக்கு ஆதரவு என்பதைத் தேர்வு செய்யுங்கள்.

அதிகாரப் பசியில் இருந்தவர்கள், மிகவும் தந்திரமாக செயல்பட்டு சுதந்திரப் போராட்ட வீரர்களை பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் காட்டிக்கொடுத்து ஒப்படைத்தனர். அத்தகையவர்களுக்கு உண்மையில் அடுக்கு முறையை எதிர்த்துப் போராடும் துணிச்சல் இல்லை.

உங்களின் ஒரு கன்னத்தில் யாரேனும் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டுங்கள், அப்போது தான் சுதந்திரம் கிடைக்கும் எனக் கற்றுக் கொடுத்தவர்கள் நமக்கு சுதந்திரத்தை பிச்சை எடுத்துக் கொடுத்தனர். ஆகையால் உங்களுடைய ஹீரோக்களை மதியுடன் தேர்வு செய்யுங்கள்.

மகாத்மா காந்தி ஒருபோதும், பகத் சிங்கையோ, சுபாஷ் சந்திர போஸையோ ஆதரித்தது இல்லை என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

உங்கள் நினைவாற்றலில் எல்லா தலைவர்களையும் ஒரே அளவில் சீர்தூக்கி நிறுத்தி அவர்களை அவர்களின் பிறந்த நாளில் நினைவு கூர்வது ஏற்புடையது அல்ல. 

இது மேம்போக்கானது, பொறுப்பற்ற செயலும் கூட. வரலாற்றையும், உண்மையான வரலாற்று நாயகர்களையும் தெரிந்துகொள்ள வேண்டும்” என்றும், நடிகை கங்கனா ரனாவத் பதிவிட்டுள்ளது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.