ஆபத்தான முறையில் கட்டிப்பிடித்து அமர்ந்து கொண்டு பைக் ஓட்டிய காதல் ஜோடி, அநாகரிகமான முறையில் சில்மிஷத்தில் ஈடுபட்ட புகைப்படங்கள் வெளியாகி 
வைரலாகி வருகின்றன.

பீகார் மாநிலத்தில் தான் இப்படி ஒரு விநோத சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

சென்னை உட்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் பைக் சாகசங்கள் அவ்வப்போது நடந்துகொண்டு தான் இருக்கின்றன.

உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் பைக் சாகசம் செய்யும் இளைஞர்கள் குறித்து, பொது மக்கள் போலீசாருக்கு அவ்வப்போது புகார்கள் தெரிவித்தும், இது தொடர்பாகக் கைது செய்யப்படும் இளைஞர்களை போலீசார் எச்சரித்தும் அனுப்பிக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

ஆனால், தற்போது இந்த பைக் சாகசத்தை எல்லாம் மிஞ்சும் வகையில், பீகார் மாநிலத்தில் ஆள் நடமாட்டம் இல்லாத சாலையில், கட்டிப்பிடித்துக்கொண்டே பைக் ஓட்டிக் கொண்டு சென்ற காதல் ஜோடி ஒன்று, முத்தமிட்டுக்கொண்டு பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டு உள்ளனர். 

அதாவது, காதலன் அந்த பைக்கை ஓட்டிச் செல்ல, அந்த பைக்கின் முன் பகுதியில் இளம் பெண் ஒருவர் அமர்ந்து கொண்டு, அவரை கட்டியணைத்த நிலையில், தனது காதலனை முத்தமிட்டுக் கொண்டே, பைக்கை ஓட்டிச் சென்றுள்ளனர்.

இப்படியாக, காதல் ஜோடி ஒன்று பைக்கில் மிகவும் ஆபத்தான முறையில் அமர்ந்து கொண்டு, இப்படி அநாகரிகமான முறையில் காதலில் அத்து மீறி அதுவும் பொது இடத்தில் அனைவர் முன்பும் முத்தமிட்டுக்கொண்டு பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டதைப் பார்த்த அந்த பகுதி மக்கள் இதனை வீடியோ எடுத்து தனது நண்பர்கள் பலருக்கும் பரப்பி உள்ளார்.

அத்துடன், அந்த காதல் ஜோடிகளைத் தடுத்து நிறுத்திய உள்ளூர் மக்கள் சிலர், அவர்களைக் கடுமையாக எச்சரித்து உள்ளனர். இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த காதல் ஜோடி, என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துப்போய் நின்ற உள்ளனர். 

மேலும், இது தொடர்பாக தங்களுக்கு எதுவும் பிரச்சனைகள் வருமோ என்றும் அவர்கள் பயந்து நடுங்கி உள்ளனர்.

குறிப்பாக, அந்த ஜோடியின் விவரங்களைக் கேட்டுத் தெரிந்துகொண்ட உள்ளூர் மக்கள், இவர்களைப் பற்றிக் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்க முயன்று உள்ளனர்.

இதனால், இன்னும் பதறிப்போன அந்த காதல் ஜோடி, “இனி நாங்கள் இந்த பக்கமே வரமாட்டோம், இது போன்று நடந்து கொள்ளவும் மாட்டோம்” என்று, அவர்களிடம் கெஞ்சி மன்னிப்பு கேட்டுவிட்டு, அங்கிருந்து சென்றுள்ளனர். இதனால், அந்த ஊர் மக்களும் அந்த ஜோடியை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

ஆனாலும், பைக் ஓட்டிய காதல் ஜோடியின் அநாகரிகமான சில்மிஷத்தை வீடியோ எடுத்து அந்த பகுதி மக்கள், அந்த காட்சிகளை சமூக வலைத்தளங்களில் பரப்பி உள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.