போலீசார் துப்பாக்கி சூட்டில் படுகாயம் அடைந்து விழுந்து கிடந்த நபர் மீது போட்டோகிராபர் ஒருவர், எகிறி குதித்த அவரை ஏறி மிதித்த சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

அசாம் மாநிலத்தில் தான் இப்படி ஒரு கொடூர சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

அசாம் மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக ஆக்கிரமிப்பு நிலங்களை அகற்றும் பணியில் அந்த மாநில அரசு தொடர்ந்து தீவிரம் காட்டி வருகிறது. 

அதாவது, மாநில அரசுக்கு சொந்தமான கோவில் நிலங்கள், விவசாய நிலங்களில் வீடு கட்டி இருப்பவர்கள், பக்கத்து மாநிலங்களில் இருந்து அசாமிற்கு வந்து வீடு கட்டி இருப்பவர்கள், வங்கதேசத்தில் இருந்து வந்து அசாமில் குடியேறியவர்கள் ஆகியோர்களின் ஆக்கிரமிப்புகளை அரசு அகற்றி வருகிறது.

இந்த நிலையில் தான், நேற்றைய தினம் அசாமில் டாரங் மாவட்டத்தில் 2 கிராமங்களில் மொத்தம் 4500 பிகாஸ் ஆக்கிரமிப்பு நிலங்களை அரசு கைப்பற்றியது. 

அப்போது, அந்த கிராமங்களில் வசித்த 800 குடும்பங்களை அரசு அங்கிருந்து வெளியேற்றியது. 

அப்போது, அந்த மாநில அரசு அதிகாரிகள், வீடுகளை இடிக்கும் போது அதற்கு எதிராக பொது மக்கள் பலரும் போராட்டம் நடத்தனர். அந்த போராட்டம் பெரிய கலவரமாக வெடித்த நிலையில், அங்கு இருந்த பொது மக்கள் போலீசாருடன் மோதல் போக்கில் ஈடுபட்டதாகவும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

இதனால், அங்கு கூடுதல் போலீசார் துப்பாக்கிகளுடன் குவிக்கப்பட்டனர். முதலில் அங்கு இருந்த மக்கள் மீது போலீசார் லத்தி தாக்குதல் நடத்திய நிலையில், கம்புகளை வைத்து சிலர் போலீசாரை துரத்தியதாகவும், இதனால் அந்த நபர்கள் மீது போலீசார் துப்பாக்கியால் சுட்டதாகவும் கூறப்படுகிறது. 

இப்படியாக, துப்பாக்கியால் சுடப்பட்ட நபர் 2 குண்டுகள் உடலில் பாய்ந்த நிலையில் கீழே சரிந்து விழுந்த நிலையில், அவர் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார்.

அmப்போது, கீழே விழுந்து அந்த நபர் உயிருக்காக போராடி துடித்துக்கொண்டு இருந்த நிலையில், துப்பாக்கி சூட்டில் சுருண்டு விழுந்த அந்த நபரை போலீசார் சுற்றி வளைத்து மிக கடுமையாகத் தாக்கினார்கள். 

குறிப்பாக, குண்டடிப்பட்டு உயிருக்குப் போரடிய நபரை, இரக்கமே இல்லாமல் அவரை சுற்றி வளைத்து லத்தியை வைத்து போலீசார் கடுமையாக மாறி மாறி மிருகத் தனமாக தாக்கினார்கள். போலீசாரின் இரக்கமற்ற இந்த கொடூர செயலை, அங்கிருந்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்துகொண்டிருந்தார்.

அப்போது, குண்டடிப்பட்டு சுருண்டு விழுந்து கிடந்த அப்பாவி நபரின் மீது, அங்கிருந்த ஒரு போட்டோகிராபர் எகிறி குதித்து, அவர் மீது மாறி மாறி குதித்து அவரை மிதித்து கொடூரமான செயலில் ஈபட்டார்.

இதனால், பாதிக்கப்பட்ட அப்பாவி மீது நெஞ்சிலே ஏறி, மாறி மாறி அந்த போட்டோகிராபர் எகிறி குதித்தது மிதுக்கும் வீடியோவும் வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

அந்த நபர், எகிறி குதித்தது மிதுக்கும் அந்த நபர் மாவட்ட நிர்வாகத்தின் அரசு தரப்பு போட்டோகிராபர் என்றும், கூறப்படுகிறது. இவர் அங்கு ஆளும் கட்சியோடு நெருக்கமான தொடர்பு கொண்டவர் என்றும், முக்கியமாக போலீசாரோடு நெருக்கமாக தொடர்பு கொண்டவர் என்றும், செய்திகள் வெளியாகி உள்ளன.

தற்போது, இது தொடர்பாக வீடியோ வெளியான நிலையில், வேறு வழியில்லாமல் சம்மந்தப்பட்ட போட்டோகிராபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். 

முக்கியமாக, போலீசார் நடத்திய இந்த துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும், தகவல்கள் வெளியாகி உள்ளன. அத்துடன், 11 பேர் படுகாயம் அடைந்து உள்ளனர். 

மேலும், அசாமில் நடந்த இந்த கொடூரச் செயல் தொடர்பான வீடியோ உலகம் முழுவதும் வைரலாகி வரும் நிலையில், பலரும் அசாம் மாநில அரசுக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.