17 வயது சிறுமி குளிப்பதை, மீசை கூட முளைக்காத இளைஞன் ஒருவன் செல்போனில் வீடியோ எடுத்ததால், ஊர்மக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகில் உள்ள பைரப்பல்லி பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பவரின் 17 வயது மகள், அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகிறார். தற்போது கொரோனா காரணமாகப் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால், அந்த சிறுமி வீட்டில் இருந்து வருகிறார்.

இந்நிலையில், சிறுமியின் பெற்றோர் நேற்று வேலைக்கு சென்றிருந்த நிலையில், நேற்று மாலை அந்த 17 வயது சிறுமி, தன் வீட்டில் இருந்து குளியலறையில் குளித்துக்கொண்டிருந்தார்.

அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த தனுஷ் குமார் என்ற இளைஞர், அந்த வழியாக வந்திருக்கிறார். அப்போது, சிறுமி குளியலறையில் குளித்துக்கொண்டிருக்கும் சத்தம் கேட்டு சபலப்பட்டுள்ளார். 

இதனையடுத்து, சிறுமியின் வீட்டில் அவரது பெற்றோர்கள் யாரும் இல்லாததை நோட்டமிட்ட அந்த இளைஞர், சிறுமி குளிப்பதை மறைவான இடத்தில் நின்று தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துகொண்டிருந்தார்.

இதனைச் சிறுமியின் பக்கத்து வீட்டில் இருந்த சிறுமியின் உறவினர்கள் பார்த்து சத்தம் போடவே, சிறுமியின் உறவினர்கள் மற்றும் ஊர்மக்கள் பலரும் கூடி, அந்த மீசை கூட முளைக்கா இளைஞனை வச்சி செய்தனர். தர்ம அடி கொடுத்து, அவனது செல்போனையும் பறித்துக்கொண்டனர்.

இதனையடுத்து, அந்த பகுதி போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, சம்ப இடத்திற்கு விரைந்து வந்த உமராபாத் போலீசாரிடம், அந்த இளைஞனை ஒப்படைத்தனர். 

மேலும், இது தொடர்பாகச் சிறுமியின் தந்தை முருகேசன் அளித்த புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்த போலீசார், அந்த இளைஞன் எடுத்த வீடியோவை ஆய்வு செய்து, விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து, அந்த இளைஞனை சிறையில் அடைத்தனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அதேபோல், பாஞ்சாப் மாநிலம் ஜலந்தர் கபுர்தலா சாலையின் அருகே உள்ள தீன் தயால் உபாத்யா நகரின் சாலையில் 15 வயது சிறுமியான குசும்குமாரி,  கையில் செல்போனுடன் தன் வீட்டிற்கு நடந்து சென்று உள்ளார். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், சிறுமியின் கையில் இருந்த செல்போனை பறிக்க முயன்றுள்ளனர். இதனால், சுதாரித்துக்கொண்ட சிறுமி உடனடியாக இருசக்கர வானத்தின் பின்பக்கம் அமர்ந்திருந்த நபரைப் பிடித்து கீழே இழுத்து உள்ளார்.

இதனால், கீழே தடுமாறிய கொள்ளையன், தான் வைத்திருந்த கூர்மையான ஆயுதத்தால் சிறுமியை தாக்க முயன்றும், சிறுமியோ அவனை விடாமல் பிடித்துக்கொண்டே இருந்துள்ளார். இதனையடுத்து, அந்த பகுதி மக்கள் ஓடி வந்து அந்த கொள்ளையனுக்கு தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இதனையடுத்து, படுகாயமடைந்த 15 வயது சிறுமி, அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், பிடிபட்டவனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, சிறுமி ஒருவர் வீரத்துடன் திருடர்களிடம் போராடிய காட்சிகள், அங்கிருந்த ஒரு சிசிடிவி கேமிராவில் பதிவாகி இருந்தது. தற்போது, அந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.