அரசு ஆம்புலன்ஸ் வராததால் தனியார் ஆம்புலன்ஸ் அதிக வாடகை கேட்டதால் ஆட்டோக்காரர்கள் உடலை எடுத்து செல்ல சம்மதிக்காததால் மகளின் உடலை பைக்கிலேயே கொண்டு சென்றிருக்கிறார் தந்தை.   ஆந்திராவில் இந்த அவலம் தொடர்கிறது.   

இறந்த மகனின் உடலை ஒரு தந்தையும், மகளின் உடலை இன்னொரு தந்தையும் என பைக்கிலேயே கொண்டுசெல்லும் அவலம் தொடர்கிறது.ஒரே வாரத்தில் மூன்று முறை இந்த அவலம் அரங்கேறி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.  

ஆந்திராவில் திருப்பதி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்த மகனின் உடலை நெல்லூர் மாவட்டத்தில் இருக்கும் சொந்த ஊருக்கு கொண்டு செல்வதற்காக அரசு ஆம்புலன்ஸ் உதவி கேட்க,  அவர்கள் மறுத்து விட , பின்னர் தனியார் ஆம்புலன்ஸ் உதவி கேட்க, அவர்கள் கட்டணம் அதிகமாக கேட்க,  கட்டணத்தை குறைத்துக் கொள்ள சொல்லி கெஞ்சியும் அவர்கள் முடியாது என்று மறுத்து விட்டதால்,  பைக்கிலேயே மகனின் உடலை கொண்டு சென்ற அவலம் நிகழ்ந்தது. 

அதனையடுத்து  நேற்று தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த மகனின் உடலை நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்த தந்தை சொந்த ஊருக்கு பைக்கிலேயே எடுத்துச் சென்றிருக்கிறார். இந்த நிலையில் திருப்பதி மாவட்டத்தை சேர்ந்த நாயுடு பேட்டை அரசு மருத்துவமனையில் இருந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த மகளின் உடலை பைக்கிலேயே கொண்டு சென்றிருக்கிறார் அந்த தந்தை.

இந்நிலையில் அதை தொடர்ந்து நாயுடு பேட்டை அடுத்த கொத்த பள்ளியில் குட்டையில் தேங்கி இருந்த தண்ணீரில் இரண்டு வயது சிறுமி அக்ஷயா தவறி விழுந்திருக்கிறார்.  மகளை எப்படியும் உயிர் உயிர் பிழைக்க  வைக்கலாம் என்ற ஆசையில் பெற்றோர்கள் நாயுடு பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று இருக்கிறார்கள்.  ஆனால் சிறுமி அக்சயாவை பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். 

அந்த தந்தை சொந்த ஊருக்கு மகளின் உடலை எடுத்துச் செல்ல 108 ஆம்புலன்ஸ் உதவியை கேட்டிருக்கிறார்.   அவர்கள் மறுத்திருக்கிறார்கள்.  இதை அடுத்து தனியார் ஆம்புலன்ஸ் இடம் கேட்க அவர்கள் அதிக வாடகை கேட்டு இருக்கிறார்கள்.  அதனால் ஆட்டோவில் கொண்டு செல்லலாம் என்று ஆட்டோவை கேட்க,   ஆட்டோக்காரர்கள் உடலை எடுத்துச் செல்ல முடியாது என்று மறுத்திருக்கிறார்கள்.

மேலும் அவர் வேறு வழியின்றி அக்ஷயாவின் தந்தை தனது மகளின் உடலை நாயுடு பேட்டை அரசு மருத்துவமனையில் இருந்து கொத்த பள்ளிக்கு பைக்கிலேயே எடுத்துச் சென்று இருக்கிறார். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஆந்திராவில் அடுத்தடுத்து மூன்று முறை இந்த அவலம் நடந்திருக்கிறது.   இது குறித்த செய்திகள் வீடியோக்கள் மீடியாக்களிலும் வலைத்தளங்களிலும் பரவி வருகிறது . ஆனால் அரசு அதிகாரிகள் இதை கண்டு கொள்ளாமல் இருந்து வருவது வேதனை என்று தெரிவிக்கின்றனர் சமூக ஆர்வலர்கள். பிள்ளைகளை பறிகொடுத்து ஆம்புலன்ஸ் கேட்கும் தொகையை கொடுத்து உடலை எடுத்துச் செல்ல முடியாத நிலையில் அந்த துக்க  நிலையில் பைக்கிலேயே கொண்டு செல்லும் இந்த அவலம் இனியும் தொடரமால் இருக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.