பாஜகவுடன் கூட்டணி இல்லை: முஸ்லிம் லீக்!

பாஜகவுடன் கூட்டணி இல்லை: முஸ்லிம் லீக்! - Daily news

தமிழகத்தில் கடந்த ஆண்டி டிசம்பர் மாதம் 27, 30 ஆகிய நாட்களில் 2 கட்டங்களாக தமிழகத்தில் உள்ள 27 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அதில், ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட பஞ்சாயத்து உள்ளிட்டவைகளுக்கு நடத்தப்பட்ட தேர்தலில் 2 கோடி 58 லட்சத்து 70 ஆயிரத்து 941 வாக்காளர்கள் வாக்களித்தனர். இந்த தேர்தலின் போது ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட பஞ்சாயத்து என ஒவ்வொரு பகுதியையும் வித்தியாசபடுத்தி காட்டும் வகையில் 4 விதமான வண்ணங்களில் வாக்கு சீட்டுகள் பயன்படுத்தப்பட்டன.

ஜனவரி 2 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் ஊராட்சி தலைவர், ஊராட்சி கவுன்சிலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர்கள் ஆகியோர் வாக்கு சீட்டு எண்ணிக்கையின் அடிப்படையின் மூலம் நேரடியாகவே தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதன் பிறகு ஜனவரி 11-ஆம் தேதி நடைப்பெற்ற மறைமுக தேர்தலில் மாவட்ட ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மொத்த உள்ள மாவட்டங்களில் 27 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் மீதம் உள்ள 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் எப்போது நடைபெறும் என்று மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களுக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடத்த திட்டமிட்டிருப்பதாக  தமிழக தேர்தல் ஆணைய அறிவித்தது.

ஊரக உள்ளாட்சிகளின் தேர்தல்கள் முடிந்தும் 15 மாநகராட்சிகள், 148 நகராட்சிகள், 561 பேரூராட்சிகளுக்கான தேர்தல்கள் நடைபெறாமல் இருந்தது. 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் போது பேரூராட்சி, நகராட்சிகளுக்கும் தேர்தலை ஒன்றாக நடத்த மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறதகாவும் கூறப்படுகிறது.
இந்த தேர்தல் பரபரப்பு ஆரம்பித்துள்ள நிலையில் பெரிய கட்சிகளே தங்கள் கூட்டணி நிலைப்பாட்டை உறுதியாகத் தீர்மானிக்காதபோது சிறு சிறு கட்சிகள் முடிவெடுப்பதில் திணறி வருகின்றன. குறிப்பாக, முஸ்லிம் கட்சிகளிடையே சில கேள்விகள் விவாதமாக நடந்து வருகிறது. அதிமுக பாஜகவோடு கூட்டணி வைக்குமா, வைக்காதா என்பதுதான்.  இப்போது திமுக கூட்டணியில் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் இருக்கின்றன. திமுக தற்போது சந்தித்து வரும் இந்து எதிர்ப்பு அரசியல் காரணமாக இனியும் அக்கூட்டணியில் முஸ்லிம் கட்சிகள் மேலும் சேர வாய்ப்பு இல்லை என்பதே உண்மை என பேசப்பட்டு வருகிறது. 

அதேபோல், தற்போது நாகை எம்.எல்.ஏ.வாக அதிமுக கூட்டணியில் இருக்கும் மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தமிமுன் அன்சாரி, அதிமுக பாஜக கூட்டணி காரணமாக கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார். மீண்டும் நாகை சட்டமன்றத் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் நின்றுவிட வேண்டும் என்பது அவரது நோக்கமாக இருக்கிறது. ஆனால் முஸ்லிம் லீக், மமக ஆகிய கட்சிகளோடு மஜகவுக்கும் திமுக இடம் கொடுக்குமா என்பது கேள்விக் குறியாக இருக்கிறது.

 வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவோடு அதிமுக கூட்டணி தொடருமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கும் நிலையில், சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், தேர்தல் நேரத்தில் அதைப் பார்த்துக் கொள்ளலாம் என்று கூறியிருக்கிறார். ஆக இப்போதைக்கு அதிமுக பாஜகவுடனான கூட்டணியில் இல்லை என்பதே முதல்வரின் பதிலில் உள்ளது.  

Leave a Comment