பண மோசடி புகாரில் சன்னி லியோனை கைது செய்ய கேரளா உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 

2019ம் ஆண்டு கேரளாவில், நிகழ்ச்சி ஒன்றில் சன்னி லியோனை சிறப்பு விருந்தினராக பங்கேற்க ஏற்பாடு செய்துள்ளனர். இதற்காக 29 லட்சம் ரூபாய் கொடுக்கப்படுவதாக பேசி முடித்துள்ளனர். இதற்கு சம்மதம் தெரிவித்து, சன்னி லியோன் வர ஒப்புக்கொண்டுள்ளார். 


ஆனால் நிகழ்ச்சி நடக்கும் நாள் மாறிக்கொண்டே இருந்துள்ளது. மேலும் நிகழ்ச்சிக்கு வருவதற்கு கொடுப்பதாக கூறியிருந்த 29 லட்சத்தில், 12 லட்சத்தை சன்னி லியோனுக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கொடுக்கவில்லை. இதனால் சன்னி லியோன் அந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ளவில்லை.


பணம் பெற்றுக்கொண்டு நிகழ்ச்சிக்கு வரவில்லை என்று பண மோசடி புகாரை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கேரள காவல்துறையில் கொடுத்தனர். இந்த புகாரையடுத்து கேரள, காவல்துறை சன்னிலியோனை கைது செய்யலாம் என்ற சூழல் உருவாகி இருந்தது.


இதனையடுத்து இந்த வழக்கில் முன் பிணை கோரி சன்னிலியோன் மற்றும் அவரது கணவர் கேரள உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் , பண மோசடி புகாரில் சன்னிலியோனை கைது செய்ய தடை விதித்துள்ளது.