கோவிட் -19 வைரஸ் தடுப்பு முயற்சிகளில் மருத்துவர்களுக்கு மிகவும் உதவியாக இருப்பவை, மறுபயன்பாட்டு தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் (பிபிஇ), முகக் கவசங்கள், மற்றும் பாதுகாப்பு உடைகள் ஆகியவை இருக்கும். இருப்பினும், இவை அனைத்துமே ஒருமுறை பயன்படுத்திவிட்டால், அதையே மீண்டும் பயன்படுத்துவது, இயலாத காரியம். மீண்டும் பயன்படுத்தப்படும் பி.பி.இ.க்கள், இன்னமும் கண்டறியப்படாமல் இருக்கின்றன.

உடல் முழுக்க மூடியிருக்கும் வகையில் தயாரிக்கப்படும் இந்த உடைகளை, கழற்றி கழற்றி பயன்படுத்துவதில் சுமை. இந்த சுமையை தவிர்ப்பதற்காக, மறுபடி பயன்படுத்த உகந்த வகையிலான பாதுகாப்பு உபகரணங்களை ஆய்வாளர்கள் தற்போது கண்டுபிடறிந்துள்ளனர். 

இதை லாயல் டெக்ஸ்டைல் மில்ஸ் லிமிடெட் என்ற நிறுவனம் பயன்பாட்டுக்கு கொண்டுவருகிறது. இருதினங்களுக்கு முன் நவநாகரிக பாதுகாப்பு உடைகள், அணிகலன்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய ‘வைரல் ஷீல்ட்’  [‘VIRAL SHIELD’]-ஐ இவர்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இந்தியா நிறுவனம் மற்றும் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஹெய்க் நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து இவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த பிபிஇ வைரஸ் ஊடுருவல் சோதனை, செயற்கை இரத்த ஊடுருவல் சோதனை மற்றும் எஸ்பிபிஆர் (SBPR) சோதனை ஆகியவற்றில் வெற்றி பெற்ற உலகின் முதல் மறுபயன்பாட்டு பிபிஇ [World’s first Reusable PPE that has passed the Viral Penetration Test, Synthetic Blood penetration test and the SBPR test.] ஆக வந்துள்ளது.

இந்திய நுகர்வோரைச் சென்றடையும் விதமாக செய்து கொள்ளப்பட்ட இந்த ஒத்துழைப்பு மற்றும் கூட்டு செயல்பாடு குறித்து பேசிய ரிலையன்ஸ் பாலியஸ்டர் நிறுவனத்தின் தலைமை சந்தைப்படுத்துதல் அதிகாரி குஞ்சன் சர்மா [Mr Gunjan Sharma, CMO, Reliance Polyester] கூறுகையில் "ஆர் இலான் ™ ஃபீல்ஃப்ரெஷ் துணியால் தயாரிக்கப்படும் முகக் கவசங்கள் மற்றும் பிபிஇ உபகரணங்களை அறிமுகம் செய்வதற்காக இந்திய ஜவுளித் தொழில்நுட்பத் துறையின் முன்னோடி நிறுவனமான லாயல் டெக்ஸ்டைல் மில்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் கைகோர்ப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த கூட்டு செயல்பாடு ஆர் - இலான் ™ ஃபீல்ஃப்ரெஷ் துணி [R|Elan™ FeelFresh fabric] அதன் உள்ளார்ந்த நுண் உயிர் எதிர்ப்புப் பண்புக்கூறு மூலம் ஆரோக்கியத்தையும் சுகாதாரத்தையும் மேம்படுத்துவதில் நுகர்வோருக்கு வழங்கும் செயல்திறனை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.” என்றார்.

ஹெய்க் வைரோப்ளாக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் இணை நிறுவனருமான திரு. கார்லோ சென்டோன்ஸ், ஹெய்க் வைரோப்ளாக் [Mr. Carlo Centonze, CEO and co-founder, HeiQ Viroblock] சிறப்பு அம்சங்களை எடுத்துரைக்கையில், “ஹெய்க் வைரோப்ளாக் அண்மையில் உலகின் முன்னணி வைராலஜி நிறுவனங்களில் ஒன்றில் சோதிக்கப்பட்டது. அப்போது சார்ஸ் சிஓவி 2 கோவிட் -19 வைரசின் 99.99% ஒழிப்பு 30 நிமிடங்களில் நிகழ்ந்ததை கண்டறிய முடிந்தது. அதன் துடிப்புள்ள இரட்டை நடவடிக்கை முறை வைரஸ்களுக்கு வாய்ப்பு அளிப்பதில்லை. மேலும் முகக் கவசத்தின் பாதுகாப்பு காரணியை 100 சதவீதம் உறுதி செய்கிறது. ஐஎஸ்ஓ 18184 மற்றும் ஐஎஸ்ஓ 20743 போன்ற தொழில் தரங்களின் அடிப்படையில் இது மீண்டும் மீண்டும் சோதிக்கப்பட்டுள்ளது, இது அனைத்து வைரஸ்கள், பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளுக்கு எதிராக திறம்பட செயல்பட்டு பயன்படுத்துபவர்களுக்குப் பாதுகாப்பை வழங்குகிறது. இந்த புதிய சுவிஸ் தொழில்நுட்பத்தின் மூலம் 100 சதவீதம் தோலில் பயன்படுத்தி நிரூபிக்கப்பட்ட ஹைபோ அலர்ஜெனிக்  எனப்படும் ஒவ்வாமை எதிர்ப்பு ஒப்பனை பொருட்களைப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் 72 சதவீதம் உயிரி அடிப்படையிலான புதுப்பிக்கத்தக்க உள்ளடக்கத்தை இது கொண்டுள்ளது. ஹெய்க் வைரோப்ளாக் சுவாச முகக் கவசங்கள் அண்மையில் அமெரிக்காவின் எஃப்.டி.ஏ.-வால் அவசர பயன்பாட்டு அனுமதியின் (Emergency use authorization -EUA) கீழ் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இந்த தொழில்நுட்பம் அமெரிக்க இபிஏ (ஃபிஃப்ரா), ஈயூ பிபிஆர் (ரீச்) மற்றும் ஜேபி எம்ஐடிஐ ஆகியவற்றால் பதிவு செய்யப்பட்டுள்ளது, மேலும் இது ஈசட்டிஹெச்சி (ZDHC), ஓகோடெக்ஸ் மற்றும் ப்ளூசைன் ஆகியவற்றுடன் ஒருமித்து உள்ளது” என்றார்

மறுபயன்பாட்டுக்குரிய பிபிஇ கவச உடைத் தொகுப்பின் முக்கிய அம்சங்களை விளக்கி, உலக வடிவமைப்பு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் டாக்டர் சஞ்சய் குப்தா [Prof. Dr. Sanjay Gupta, Vice Chancellor of World University of Design] கூறுகையில், “எந்த உதவியும் இல்லாமல் எளிதாக அணிதல் மற்றும் விரைவாக அகற்றுதல், உள் ஆடைகள் மற்றும் தோலைத் தொடும் ஆபத்து இல்லாமை ஆகியவை வடிவமைப்பு அம்சங்களில் மிக முக்கியமானவை ஆகும். தலை, முகம் மற்றும் கழுத்து பகுதிக்கு முழு பாதுகாப்பை வழங்கும் வகையில் முழு தலையும் மூடப்படும் அம்சம் மற்றும் ஷூ முழங்கால் வரை உள்ளடக்கிய அம்சம் இதில் உள்ளது. கட்டைவிரல் வளைவுகள், பக்க முடிச்சுகள் மற்றும் கவச உடையான கவுனின் நீண்ட நீளம் போன்ற செயல்பாடுகளுக்கு உதவ சிறப்பு பணிச்சூழலியல் அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த வடிவமைப்பின் ஒரு தனித்துவமான அம்சம் என்னவென்றால், இவை இந்திய உடல் குணாதிசய தன்மைகளின்படி அளவிடப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளன. எனவே இறக்குமதி செய்யப்பட்ட பிபிஇ-க்களில் எதிர்கொள்ளும் அளவுக்கு அதிகமான பிரச்சினைகளை எதிர்கொள்ளத் தேவை இருக்காது” என்றார்.

- ஜெ,நிவேதா