இந்தியாவில் கொரோனா லாக்டௌன் தொடங்கிய மார்ச் மாதத்தில், நோயாளிகள் எண்ணிக்கை ரொம்பவும் குறைவு. இவ்வளவு குறைவான நோயாளிகள் எண்ணிக்கை உள்ள நேரத்திலேயே, இந்தியா பொது முடக்கத்தை அமல்படுத்தியிருக்கிறது பாராட்டுக்குரிய விஷயம் என சொல்லி, உலக நாடுகளும் - உலக சுகாதார நிறுவனமும் இந்தியாவை வாழ்த்தியது. பல நாட்டு தலைவர்களும், `பிற நாடுகள் எடுக்கத்தயங்குற முக்கியமான முன்னெடுப்பை, இந்தியா எடுத்திருக்கு' என வெளிப்படையாகவே கூறினர். பாராட்டுகள் எந்த அளவுக்கு வந்ததோ, அதேயளவுக்கு விமர்சனங்களும் வந்தன. விமர்சனங்கள் அனைத்துமே, பொருளாதாரம் சார்ந்தவைதான். அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவில், பொதுமுடக்கமென்பது, மிக மோசமான பொருளாதார மந்தநிலையை உருவாக்கும் என்றார்கள் நிபுணர்கள் அனைவரும். 

இப்போது அதுதான் நிகழ்ந்துள்ளது. மாபெரும் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்துள்ள காரணத்தினால், லாக்டௌனை தளர்த்தி மக்களை செயல்பட சொல்கிறது அரசு. இந்த பொருளாதார வீழ்ச்சிக்கு, 
கோவிட் 19 கொரோனாவும், அதனால அமல்படுத்தப்பட்ட அடுத்தடுத்த பொது முடக்கங்களும் மட்டும்தான் காரணமா என்றால், இல்லை. இதுநாள்வரை இருந்த பொருளாதார வீழ்ச்சியோடு இதுவும் சேர்ந்துவிட்டதால், மிகமோசமான சூழலை இந்தியா எதிர்கொண்டது.

`சரி, பொருளாதார வீழ்ச்சி மட்டும்தான் இந்தியாவோட லாக்டௌன் தளர்வுக்கு ஒரே காரணமா?' என நீங்க கேட்பீர்களேயானால், இல்லை என்றுதான் பதில்சொல்லனும். இந்தியாவின் இந்த தளர்வுக்கு பின்னால, மருத்துவ ரீதியான ஒரு காரணமும் இருக்கலாம் என்று எதிர்ப்பார்க்கிறாங்க அறிவியலாளர்கள். அந்தக் காரணம், `ஹெர்டு இம்யூனிட்டி'. 

இதை தமிழ்ல, குழு நோய் எதிர்ப்பு சக்தினு சொல்லுவாங்க.

அதென்ன குழு நோய் எதிர்ப்பு சக்தி? அதாவது, குறிப்பிட்ட ஒரு நிலப்பரப்புள்ள இருக்க பெரும்பான்மையான மக்கள், குறிப்பிட்ட ஒரு நோய்க்கான எதிர்ப்புத் திறனை, அதாவது நோய்க்கான எதிர்ப்புரதத்தைப் பெறுவது. இந்த இடத்துலதான் நாம ஒருவிஷயத்தை புரிஞ்சுக்கணும். அது என்னன்னா, நோய்க்கான எதிர்ப்புரதம், எடுத்தவுடனே பெரும்பான்மையான மக்களுக்கு கிடைச்சிடாது. ஒவ்வொரு தனிநபருக்குக் கிடைக்கணும். ஒவ்வொருத்தரா கிடைச்சு, அந்த சமூகத்துல இருக்க பெரும்பான்மை மக்களுக்குக் கிடைக்கணும். 

இதுல, ஒவ்வொரு நபருக்கும் நோய்க்கு எதிர்ப்புரதம் கிடைக்கணும்னு சொன்னோம் இல்லையா... அப்படி ஒவ்வொருவருக்கும் எதிர்ப்புரதம் கிடைப்பதுல, ரெண்டு வழிகள் இருக்கு. 

* முதல் வகை, எதிர்ப்புப்புரதத்தை மருந்தாக தயாரித்து, அந்த தடுப்பு மருந்தை தடுப்பூசி மூலமா உடலுக்குள் செலுத்துவது. இப்படி செலுத்துவது மூலமா, ஒருவேளை கிருமித்தொற்று நமக்கு ஏற்பட்டாலும்கூட, உடம்பு அதுக்கு எதிரா போராடி, அந்த தொற்று நோயாக மாறிவிடாமல் நம்மை தற்காத்துடும்.  

* ரெண்டாவது வகை, எதிர்ப்புரதம் இயற்கையாக உடல்ல உருவாகணும். அப்படி இயற்கையா அது உருவாகனும்னா, அதுக்கு நமக்கு நோய் வந்து - நோயிலிருந்து முற்றிலுமாக முழுவதுமாக மீண்டிருக்கணும். 

இந்த இரண்டில், முதல் வகைதான் சிறந்தது. அதாவது, தடுப்பூசி கிடைக்கப்பெறுவது. இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. 

* முதல் காரணம், தடுப்பூசி மூலம் சூழலை சரிசெய்தால், உயிரிழப்புகளையும் - மேற்கொண்டு ஏற்படும் பாதிப்புகளையும் முழுமையாக கட்டுக்குள் கொண்டு வந்துவிடலாம்.

* இன்னொரு கரணம், இரண்டாவது வகையில் நிறைய சிக்கல்கள் இருக்கு. குறிப்பா, நோய் நமக்கு ஏற்பட்ட பிறகு, அதுல இருந்து மீளும் விகிதம் எவ்வளவு என்பது நமக்கு உறுதியாக தெரியாது. ஸோ, மீளலாம்.... மீளாமலும் போகலாம்! ஒருவேளை மீண்டுவிட்டாலும், நோய் நம்ம உடல்ல வேறு ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தா, அதுவும் சிக்கல்தான். அப்புறம் வாழ்நாள் பூராவும், பிரச்னையோடயே வாழணும். 

முதல் வகைதான் சிறந்தது என்பதை உங்களுக்கு புரியவைக்க, ஒரு எளிமையான உதாரணம் சொல்கிறோம். அம்மை நோய்தான் அந்த உதாரணம். அம்மை நோயைப் பொறுத்தவரை, ஒருமுறை நமக்கு பாதிப்பு ஏற்பட்டா, அதிலிருந்து நாம் மீளும் வாய்ப்பு அதிகமென்றாலும் கூட, குறிப்பிட்ட நோய் நமக்கு சரியான பிறகும்கூட, அதனுடைய தாக்கம் நமக்கு கடைசிவரை இருக்கும். அந்தவகையில Risk Taking is Dangerous என்ற நோக்கத்தை கருத்துல கொண்டு, அம்மைக்கு தடுப்பூசி தயாரிக்கப்பட்டு அதுக்கு எதிரான எதிர்ப்புத்திரதம் உடலுக்குள்ள செயற்கையாக செலுத்தப்பட்டுச்சு. 

பெரும்பான்மை மக்களுக்கு இது செலுத்தப்பட்டபோது, அந்த மக்கள் வாழும் குறிப்பிட்ட நிலப்பரப்புல, குழு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகிடுச்சு. இந்த மாதிரி பெரும்பான்மை மக்களுக்கு அம்மைக்கு எதிரான ஆற்றல் கிடைச்சதுனால (உதாரணமா நூற்றுல, 80 பேருக்கு எதிர்ப்புரதம் கிடைச்சதா வச்சுக்குவோம்), `நோய்ப்பரவுதல்' முற்றிலுமா தடுக்கப்பட்டுவிடும். மீதமிருக்க 20 % பேருக்கு நோய் வரலாமே என்று நீங்க நினைக்கலாம். அவங்களுக்கு வராது. காரணம், எதிர்ப்புத்திறனை பெற்ற 80 % பேர், இந்த 20 % பேர்ல, 15 % பேரை தற்காத்துடுவாங்க. அதாவது, இந்த 80 % பேர் தங்களையே அறியாம, 15 % பேருக்கு தங்களோட உடலுக்குள்ள இருக்குற எதிர்ப்புத்திறனை கொடுத்து, அவங்களையும் நோய்க்கு எதிராக்கிடுவாங்க. மீதமிருக்கும், 5 % பேருக்கு நோய் வந்தாலும்கூட, அவங்களால அதை பரப்ப முடியாது. ஒரே காரணம்.... அதான் 95 % பேருக்கு எதிர்ப்புரதம் இருக்குதே....! ஸோ, 5 % பேர் பரப்பினாலும், எதிர்த்தரப்பினர் கொஞ்சம் கூட பாதிக்கப்படமாட்டாங்க. இந்த இடத்துல, Disease Spread Chain will be Broken, Completely!

எல்லா நோய்க்கும், 80 % பேருக்கு தடுப்பு மருந்து தரப்படணும்னு கட்டாயமில்ல. சில நோய்களுக்கு 50 % தரப்பட்டாலும் போதும். அவங்களே, மீதமுள்ளோரை தற்காத்துடுவாங்க. கோவிட் - 19 கொரோனாவுல, 70 - 80 % பேருக்கு எதிர்ப்புரதம் கிடைத்தால், மீதமுள்ளோரை காப்பாற்றப்படலாம் என்பது அறிவியலாளர்களோட கணக்கு. இந்த சதவிகித கணக்கு, `ஒருத்தர்கிட்டருந்து நோய் எத்தனைப்பேருக்கு பரவுது' என்பதை அடிப்படையாகவச்சு, அறிவியலாளர்களால கணக்கிடப்படுவது.

`சரி... முதல் வகைதான் சரின்னு வச்சுக்குவோம். ஆனால், கோவிட் - 19 கொரோனாவுல அது சாத்தியமில்லயே.... ஏன்னா, இன்னும் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுப்பிடிக்கப்படலயே... அப்போ, என்ன பண்றது? வேற வழியே இல்லயே... இரண்டாவது வகைக்குதானே வந்தாகணும்'னு ஒருசிலர் வாதம் செய்றாங்க. 

இங்கதான் பிரச்னை. முதல் வகைக்கு சாத்தியமில்லன்னா, நீங்க அதை சாத்தியப்படுத்தத்தான் முயல வேண்டுமே தவிர, ரெண்டாவது வகைக்கு வர்ற நினைக்கக்கூடாது. 

இதை, உலக சுகாதார நிறுவனத்தினரேவும் கூட தற்போது சொல்லியிருக்காங்க. 

உலக சுகாதார நிறுவனத்தின் முதன்மை மருத்துவர் சௌமியா சுவாமிநாதன் இதுபற்றி இன்று பேசுகையில், ``கொரோனாவுக்கான இயற்கை நோய் எதிர்ப்பு திறன் உருவாக, ஏறத்தாழ 70 -80 %  வரை நோயிலிருந்து மீண்டு - அவர்கள் உடலில் எதிர்ப்புரதம் இருக்க வேண்டும் என்பது விதி. ஆனால், இன்று கொரோனா பாதித்தவரையே கூட மீண்டும் மீண்டும் பாதிக்கிறது. இதனால் எதிர்ப்புரதம் இருக்கும் நபர்களின் எண்ணிக்கை குறைகின்றது. சில நாடுகளில், 5 முதல் 10 சதவிகிதம் பேருக்குத்தான் கொரோனா எதிர்ப்புரதம் இருக்கிறது. அதிகபட்சமாக சில நாடுகளில் 20 சதவிகிதம் வரை இருக்கிறது. இது 70 - 80 என்றாகும் வரை, இயற்கை எதிர்ப்புரதத்துக்கு, சாத்தியமில்லை. இந்த எண்ணிக்கை அவ்வளவு தூரம் உயர்வதற்குள், பலரும் உயிரிழக்கும் அபாயமும் இருக்கிறது. உயிரிழப்பு ஏற்கெனவே அதிகமாகத்தான் இருக்கிறது என்பதால், தயவுசெய்து யாரும் இந்த ரிஸ்க்கை எடுக்க வேண்டாம்" எனக்கூறியுள்ளார். 

சௌமியாவின் கணக்குப்படி, முதல் வகையான தடுப்பூசி கண்டறிவதே, பிரச்னைக்கான முற்றுப்புள்ளி. அப்படி தடுப்பூசி கிடைக்கும்வரையில், 

* எல்லோரும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கணும். 
* வீட்டை விட்டு வெளியே வராம இருக்கணும். 
* எங்கே, எப்போ போனாலும் மாஸ்க் அணியனும். 
* பொதுப்போக்குவரத்துகளை தவிர்ப்பது  - பொது இடங்கள்ல கூட்டமான இடங்கள்ல கலந்துக்குறதை தவிர்ப்பது - பொது இடங்கள்லயேவும் கவனத்தோட இருப்பது என்றெல்லாம் இருக்கணும். 

இதைத்தவிர்த்துவிட்டு இயல்புக்கு திரும்ப முயன்றால், உலக சுகாதார நிறுவனத்தில் முதன்மை இயக்குநர் டெட்ராஸ் அதேநாம் கூறியது போல, நிலைமை மிக மிக மோசமாக மாறக்கூடும்.

 

- ஜெ.நிவேதா