கொரோனா வைரஸ்கள் ரூபாய் நோட்டுகள் மூலம் பரவும் என்பதை ரிசர்வ் வங்கி உறுதி செய்திருப்பதாக அனைத்திந்திய வர்த்தகக் கழகம் தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் 9-ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அனைத்திந்திய வர்த்தகக் கழகம் எழுதிய கடிதத்தில், ``ரூபாய் நோட்டுகள் வாயிலாக கொரோனா வைரஸ் உள்பட பாக்டீரியாக்கள், வைரஸ்கள் பரவுமா?" என்று கேள்வி எழுப்பியிருந்தது.

இந்தக் கடிதத்தை மத்திய நிதியமைச்சகம் இந்திய ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி வைத்திருந்தது. இதற்கு இந்திய ரிசர்வ் வங்கி அளித்திருக்கும் பதிலில், ``ரூபாய் நோட்டுகள் மூலம் கரோனா வைரஸ் உள்பட பாக்டீரியாக்கள், வைரஸ்கள் பரவும் வாய்ப்பு உள்ளது. எனவே, கொரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில், முடிந்த அளவுக்கு டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை மேற்கொள்ளுங்கள்" என அறிவுறுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்திருப்பதாக அனைத்திந்திய வர்த்தகக் கழகம் கூறியுள்ளது.

மேலும், பொதுமக்கள் அவசியமின்றி வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை எடுக்க வேண்டாம் என்றும், பல்வேறு ஆன்லைன் வசதிகள் மூலம் பணப்பரிமாற்றத்தை மேற்கொள்ளலாம் என்றும் இந்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதனால் ரூபாய் நோட்டுகள் மூலம் கொரோனா பரவலை தடுக்க டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க ஊக்கத் தொகைகளை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் எனவும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

இந்தியாவில் 10,875 கோடி ரூபாய் நோட்டுகளும் 12,000 கோடி நாணயங்களும் புழக்கத்தில் உள்ளன. இந்நிலையில் கொரோனா இதன் வழி பரவும் என்பது பலருக்கும் அச்சத்தை தந்துள்ளது. இந்தக் கேள்வி பலருக்கும் உள்ளது.

இருப்பினும், ரூபாய் நோட்டுகள் வழி கொரோனா பரவும் என்று இதுவரையிலான எந்த வகை நிரூபிக்கப்பட்ட ஆய்வு முடிவும் சொல்ன்னதாக தெரியவில்லை. ஆகையால், உலக சுகாதார நிறுவனமும் இதுகுறித்து எந்த அறிவிப்புகளையும் வெளியிடவில்லை. ஆனால், வெவ்வேறு காலகட்டங்களில் செய்யப்பட்ட ஆய்வுகள் வேறு சில கிருமிகள் ரூபாய் நோட்டுகளில் இருப்பதைக் கடந்த காலங்களில் நிரூபித்திருக்கின்றன. அப்படியென்றால் ரூபாய் நோட்டுகளை எப்படி அணுகுவது? அச்சமே வேண்டாம். ரூபாய் நோட்டுகளைக் கையாண்ட பிறகு, ஒருமுறை சோப்பு போட்டு கை கழுவி விடுங்கள். இது உங்கள் அச்சத்திலிருந்து உங்களை விடுவித்துவிடும்.

இப்படிச் செய்தாலும்கூட கிருமிகளை முற்றாக ஒழித்துவிட முடியாது; அதேசமயம், நோய் பரவுவதைத் தடுக்கவும் உயிரிழப்புகளைக் குறைக்கவும் முடியும். அதற்குள் சுகாதாரத் துறை தேவைப்படும் அடித்தளக் கட்டமைப்பு வசதிகளைப் பெற்றுவிடும்; தடுப்பு மருந்துகள் வந்துவிடலாம்; எப்படியும் வைரஸைக் கட்டுக்குள் கொண்டுவந்துவிடலாம் என்கிறார்கள்.மூன்று மாதங்களுக்கு ஜனநெரிசல்
தவிர்ப்பு தேவை.

அரசுக்குத் தர வேண்டிய கட்டண நிலுவை, உரிமக் கட்டணம் ஆகியவற்றாலும் கடுமையான வணிகப் போட்டியாலும் திணறிவந்த இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இப்போது ஊரடங்கு நடவடிக்கையால் முக்கியத்துவம் பெற்றுள்ளன. ஊரடங்கு அறிவித்த நாளிலேயே எல்லாத் தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தங்களுடைய தளங்களையும் தகவல்தொடர்பு மையங்களையும் வலுப்படுத்தின. 

ஆனாலும், மக்கள் வீடுகளிலேயே உள்ள இந்நாட்களில் நிறைவான சேவையை அவற்றால் தர முடியவில்லை. சிறுநகரங்கள், கிராமங்களில் இணைய சேவை மிக மோசம். இந்தியாவில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் எதிர்வரும் காலங்களில் எத்தகைய வீச்சுக்குத் தயாராக வேண்டும் என்பதை இந்நாட்கள் சுட்டுகின்றன. அரசும் தொலைத்தொடர்பு நிறுவனங்களும் இது தொடர்பில் கலந்து பேச வேண்டும்.