சீனாவில் வூஹான் பகுதியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் பரவல் கண்டுபிடிக்கப்பட்டது. பின் வந்த ஒவ்வொரு நாளும் வைரஸின் வீரியம் அதிகரித்துக் கொண்டே போனது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வைரஸூக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியின் இறுதி கட்டத்தை விஞ்ஞானிகள் எட்டியுள்ளனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
 
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 2,43,000 கடந்துள்ளது. குறிப்பாக இந்தியா, அமெரிக்கா, பிரேசிலில் கொரோனா வேகமெடுத்துள்ளது. உலக அளவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

இந்திய அரசு நேற்று வெளியிட்ட தகவலில், அதற்கு முந்தைய 24 மணி நேரத்தில் 67,151 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல அமெரிக்காவில் 42, 573 பேருக்கும், பிரேசிலில் 47,828 பேருக்கும் புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

இதன் மூலம் உலக அளவில் கொரோனா வேகமாக பரவும் நாடுகள் பட்டியலில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது.

தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 24,31,555 பேருக்கு கொரோனா பரவியுள்ளது. 

வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 66 லட்சத்து 44 ஆயிரத்து 582 பேர் சிகிச்சை பெற்று வருகிறனர். சிகிச்சை பெறுபவர்களில் 61 ஆயிரத்து 872 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 

வைரஸ் பாதிப்பில் இருந்து 1 கோடியே 65 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனாவால் இதுவரை 8 லட்சத்து 25 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா - 59,98,301
பிரேசில் - 37,22,004
இந்தியா -  32,34,474    
ரஷியா - 9,70,865
தென் ஆப்பிரிக்கா - 6,15,701

இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் நேற்று ஒரே நாளில் 75,760 பேருக்கு கொரோனா; 1023 பேர் மரணமடைந்திருக்கின்றனர். இந்த எண்ணிக்கை உயர்வு காரணமாக இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 33 லட்சத்தை தாண்டியுள்ளது. 

இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் கொரோனா பாதிப்புகளுக்கு கடந்த 24 மணிநேரத்தில் 75,760 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை 33 லட்சத்து 10 ஆயிரத்து 235 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பால் இதுவரை 7,25,991 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 56,013 பேர் டிஸ்சாக்ர்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 25,23,772 பேர் குணமடைந்து சென்றுள்ளனர். நேற்று ஒரே நாளில் 1,023 பேர் பலியாகி உள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 60,472 ஆக உயர்வடைந்து உள்ளது என்று தெரிவித்து உள்ளது.

நாடு முழுவதும் நேற்று 9,24,998 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதனுடன் 3,85,76,510 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து 76.30 சதவிதம் பேர் குணமாகி உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.