சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள் மற்றும் பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

கொரோனா பாதிப்பில் உலக நாடுகளில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது. இதில், நேற்று ஒரு நாளில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதில், பிரேசில் முதலிடத்தில் இருந்தது. அங்கு நேற்று ஒரு நாளில் மட்டும் 56,411 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. 2வது இடத்தில் இருந்த அமெரிக்காவில் 54,504 பேரும், இந்தியாவில்  52,479 பேருக்கும் தொற்று உறுதியாகி உள்ளது.

இந்த எண்ணிக்கை உயர்வை தொடர்ந்து, இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 19 லட்சத்தைத் தாண்டியது. அதே நேரத்தில், கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கையும் 857 ஆக உயர்ந்து 39,795 என்ற எண்ணிக்கையை அடைந்துள்ளது.

மிக மோசமாகப் பரவக்கூடிய இந்த கொடிய கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து தேசிய அளவில் 12,82,215 மக்கள் மீண்டுள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதன் மூலம் தேசிய அளவில் கொரோனா தொற்றிலிருந்து மீள்பவர்களின் சதவீதம் 67.19% என்று உயர்ந்துள்ளது.

இந்தியாவில், தமிழகத்தில் மட்டும் இது வரையிலான மொத்த பாதிப்பு 2,68,285 ஆக உள்ளது. இவர்களில், நேற்று புதிதாக 5,063 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் 5,035 பேரும், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களில் 28 பேரும் அடங்குவார்கள். சென்னையில் மட்டும் செவ்வாய்க் கிழமையான நேற்று 1,023 நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக அளவில் நேற்று மேலும் 108 பேர் பலியாகியுள்ளதாக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பலி எண்ணிக்கை தமிழகத்தில் 4349 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் நேற்று 6501 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியதால் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 2,08784 ஆக உயர்ந்துள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டுக் குணமடைந்தவர்கள் வீதம் 77.80% சதவீதமாக உள்ளது. கடந்த சில தினங்களாகவே, இறப்பு சதவிகிதம் முன்பைவிட தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையும் உள்ளது. உதாரணத்துக்கு 6000 - த்துக்கும் மேற்பட்ட நபர்களுக்கு தொற்று உறுதிசெய்யப்பட்ட போது வந்த இறப்பு எண்ணிக்கையைவிட, இப்போது 5,000 த்துக்கு மேற்பட்ட நபர்களுக்கு தொற்று உறுதிசெய்யப்பட்ட போது வரும் இறப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

இப்படி கொரோனாவுக்கான இறப்பு எண்ணிக்கை அதிகரிப்பானது, இரண்டாவது அலைக்கான தொடக்கமோ என்ற் அச்சம் மக்கள் மத்தியில் எழத்தொடங்கியுள்ளது. நேற்றைய தினம், ``தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையை எதிர்கொள்ள மக்கள் ஒத்துழைப்பு அவசியம்" என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேசியிருந்தது, கவனிக்கத்தக்க விஷயம். தமிழகத்தின் அடுத்தகட்ட நிலை குறித்தான மக்களின் பயம், இதனால் அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் மட்டுமன்றி, இந்திய அளவிலும் கொரோனா தொற்று பரவலை  கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், தினந்தோறும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. சூழல் எப்போது கட்டுக்குள் வரும் என்று அனைவருமே காத்திருக்கின்றனர்.