இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை புதிய உச்ச வரம்பை எட்டிக் கொண்டிருக்கின்றன. இருப்பினும், இப்படி நோயாளி எண்ணிக்கை உயர்வதன் காரணம், பரிசோதனை அதிகப்படியாக செய்யப்பட்டதுதான் என கூறப்பட்டு வந்தது.

உலகிலேயே அதிக பரிசோதனைகள் செய்யப்படும் நாடுகளுக்கான பட்டியலில், இந்தியவுக்குத்தான் இரண்டாவது இடம். 

இந்தியாவில் கொரோனா பரிசோதனையில் கடந்த 24 மணி நேரத்தில் , அதிகபட்சமாக 4.2 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 48, 916 பேருக்கு தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு 13 லட்சத்தை தாண்டியது.

இந்நிலையில், இந்தியாவில் முதல்முறையாக ஒரே நாளில் அதிகபட்ச பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 4,20,898 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதனால், 10 லட்சம் பேருக்கு நடத்தப்படும் பரிசோதனையின் சராசரி 11,485 ஆக அதிகரித்துள்ளது. மேலும் மொத்த பரிசோதனை 1,58,49,068 ஆகவும் அதிகரித்துள்ளது என ஐ.சி.எம்.ஆர்., தெரிவித்துள்ளது.

இதனிடையே, ஐசிஎம்ஆர் சார்பில் அமைக்கப்பட்டுள்ள 3 ஆய்வகங்களை பிரதமர் மோடி நாளை திறந்து வைத்தார். மும்பை, கோல்கட்டா, நொய்டா ஆகிய நகரங்களில் அமைந்துள்ள ஆய்வகங்களை வீடியோ கான்பரன்சிங் முறையில் திறந்து வைத்திருந்தார் மோடி.

இந்த நிலையில், நேற்றைய தினம் நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, பரிசோதனை தொடர்பாக சில முக்கியமான விஷய்யங்களை பகிர்ந்திருந்தார். அதில், 

``இந்தியாவில் தினமும் 10 லட்சம் கொரோனா பரிசோதனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" என்றவர், மேலும், ``கடந்த ஜனவரி மாதத்தில் இந்தியாவில் கொரோனா பரிசோதனை ஆய்வகம் ஒன்றுதான் இருந்த நிலையில் தற்போது 1300 ஆய்வகங்கள் இருப்பதாகவும், அங்கு நாள்தோறும் 5 லட்சத்துக்கும் அதிகமாக பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.

மிகப்பெரிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் கொரோனா உயிரிழப்புகள் மிகக்குறைவாகவே இருக்கின்றது. ஆகவே அனைத்திலும் நாம் முதன்மையாகவே இருக்கிறோம். மேலும், புதிய ஆய்வகங்கள் கொரோனா பரிசோதனைக்கு மட்டுமல்லாது ஹெச்ஐவி, டெங்கு, ஹெபாபெட்டிஸ் பி,சி உள்ளிட்ட பரிசோதனைகளுக்கும் விரிவுபடுத்தப்படும். நாட்டில் தற்போது 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா சிகிச்சை மையங்களும், 11 லட்சத்துக்கும் அதிகமான படுக்கைகளும் இருக்கிறது" என்றார் அவர்.

இந்த மையங்கள் மூலம்  நாளொன்றுக்கு 10 ஆயிரம் பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும் எனவும், 24 மணி நேரத்தில் முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்த உயர்திறன் கொண்ட கொரோனா பரிசோதனைகளை தொடங்கி வைத்த பின் பேசிய பிரதமர் மோடி, 'சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளால் மற்ற நாடுகளை விட இந்தியாவில் பாதிப்பு குறைவு தான். உலகளாவிய தொற்றான கொரோனாவை இந்தியர்கள் தைரியத்துடன் எதிர்த்து போராடி வருகின்றனர். கொரோனா உயிரிழப்பு விகிதமும் மற்ற நாடுகளை விட இந்தியாவில் குறைவாகத்தான் உள்ளது. இந்தியாவில் பாதிப்பு 12 லட்சம் என்றிருந்தாலும், இங்கு 10 இலட்சம் பேர் கொரோனா நோயில் இருந்து குணமடைந்துள்ளனர்.

உயர் பரிசோதனை மையங்களால், மராட்டியம், உ.பி.,மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள், தொற்றுக்கு எதிராக வலிமையுடன் போராடும். கொரோனா தடுப்பு கவச உடை தயாரிப்பில் உலகிலேயே இந்தியா 2ம் இடத்தில் உள்ளது. தினமும் 3 லட்சம் என் 95 முகக்கவசங்களை இந்தியா உற்பத்தி செய்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனா சிகிச்சைக்காக 11 லட்சம் படுக்கைகள் உள்ளன' 

இந்தநிலையில், கொரோனா பரிசோதனை எண்ணிக்கை தினமும் 2 ஆயிரம், 3 ஆயிரம் என்று தொடங்கி, நேற்று மட்டும் 61,342 பேருக்கு செய்யப்பட்டுள்ளது. ஆரம்பத்தில், சென்னையில்தான் பாதிப்பு அதிகமாக இருந்தது. இப்போது சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை குறைந்து, மாவட்டங்களில், ஏன் சிறிய கிராமங்களில்கூட கொரோனா பாதிப்பு இருப்பதும் மிகுந்த கவலையளிக்கிறது.

இந்தநிலையில், சோதனை எண்ணிக்கையை மிக அதிகளவில், உயர்த்த வேண்டும் என்பது, அவசர அவசியமாகிவிட்டது. மூக்கிலும், தொண்டையிலும் சளி மாதிரியை எடுத்து, பரிசோதனை செய்யும் பி.சி.ஆர். சோதனையால் மட்டும் இது நிச்சயம் முடியாது. ஏனெனில், இதற்கான பரிசோதனை கூடங்கள் தற்போது 117 தான் தமிழ்நாட்டில் இருக்கின்றன. ஒரே நேரத்தில், 8 மாதிரிகளை மட்டுமே சோதனை செய்ய முடியும். சோதனை செய்து முடிக்க 8 மணி நேரத்திற்கு மேல் ஆகும்.

 

- ஜெ.நிவேதா