``எல். முருகன் எங்களுக்கு கட்டளையிட முடியாது!" - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

``எல். முருகன் எங்களுக்கு கட்டளையிட முடியாது!


வ.உ.சிதம்பரனாரின் 149ஆவது பிறந்தநாளையொட்டி சென்னையில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், மாஃபா பாண்டியராஜன், பெஞ்சமின் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். அதன்பின்னர்  அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அமைச்சர் ஜெயக்குமாரிடம் நிறைய கேள்விகள் எழுப்பப்பட்டது. அனைத்தும் பதிலளித்தார் அவர்.

கேள்விகளில் ஒன்றாக, நடிகர் விஜயை எம்.ஜி.ஆராக சித்தரித்து ஒட்டப்பட்ட போஸ்டர் குறித்து எழுப்பிய கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்,

``மீசை வைத்தவர்களெல்லாம் கட்டபொம்மனாகிவிட முடியாது.செஞ்சிக்கோட்டை ஏறியவர்கள் எல்லாம் ராஜாதேசிங்கு ஆகிவிட முடியாது. நடிகர் விஜயால் எம்.ஜி.ஆரின் இடத்தை நிரப்ப முடியாது என்று பதில் அளித்தார்" என்றார். பின்னர், சசிகலாவின் விடுதலை தொடர்பாக பத்திரிகையாளர்களிடம் இருந்து கேட்கப்பட்டது.

சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் உள்ள, மறைந்த முதல்வர் ஜெயலலதாவின் தோழி சசிகலா, ஒரு சில வாரங்களில் விடுவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என அவரது வழக்குரைஞர் கூறியிருந்தார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அதிமுகவின் தலைமை குறித்த கேள்வி எழுந்தபோது, கட்சியின் பொதுச் செயலாளராக ஒரு மனதாக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். அதிமுகவினர் அவரை 'சின்னம்மா' என்றும் அழைத்தனர்.

ஆனால் அவர் சிறைவாசம் முடிந்துவந்ததும், ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், அதிமுகவுக்கு பொறுப்பேற்றது போல இந்த முறை நடக்க வாய்ப்பில்லை என்பதை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இடைப்பட்ட காலத்தில் கட்சியில் ஏற்பட்ட பிளவு மற்றும் சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சசிகலா சிறை சென்றது ஆகிய நிகழ்வுகளுக்குப் பிறகு, கட்சித் தலைமையை தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஏற்றுக்கொண்டனர்.

அப்படியிருக்கும் நிலையில் இன்று அமைச்சர் ஜெயக்குமார் ``சசிகலாவின் தலையீடு அதிமுகவில் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு" என்று சொல்லியிருப்பது விவாதத்துக்குட்பட்ட விஷயமாகவே பார்க்கப்படுகிறது.

பாஜக அரசுடனான கூட்டணி குறித்து அமைச்சர்கள் பேசக்கூடாது என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கூறியிருப்பது பற்றியும் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ``எல்.முருகன், எங்களுக்கு கட்டளையிட முடியாது. கூட்டணி தர்மத்தை அனைவரும் கடைபிடிக்க வேண்டும்" என்றார்.

இவற்றை தொடர்ந்து, அமைச்சர் ஜெயக்குமார், வ.உ.சி.யின் பெருமைகளை பேசினார். அப்போது ``கப்பலோட்டிய தமிழன், கப்பலோட்டிய இந்தியன் என்ற அளவில் தமிழனுக்கும் இந்தியனுக்கும் பெருமை சேர்த்தவர். கப்பல் ஓட்டுபவர்களெல்லாம் வ.உ.சியாக முடியாது" என்றார்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர், ``அரசின் நிர்வாக காரணங்களுக்காவே இராமநாதபுரம் எஸ்.பி.வருண்குமார் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். பாஜகவின் புற அழுத்தம் காரணமாகவே அவர் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டதாக வைக்கப்படும் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு எந்த அழுத்தமும் எங்களை நிர்பந்திக்க முடியாது" என்று கூறி பாஜக-வுக்கு தங்கள்மீது உள்ள அதிகாரம் பற்றி பேசினார்.
 

Leave a Comment