புதுக்கோட்டை அருகே தனது தங்கையின் காதலனை அண்ணன் அடித்தே கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் பகுதியை சேர்ந்தவர் நல்லையா. இவர் கோவையில் உள்ள ஒரு பேக்கரியில் வேலை பார்த்து வந்துள்ளார். அருகாமை வீட்டை சேர்ந்த ஜான்சி என்ற பெண்ணும் நல்லையாவும் கடந்த 5 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். அதோடு யாருக்கும் தெரியாமல் அவ்வப்போது சந்தித்து வருவதையும் வழக்கமாக வந்துள்ளனர்.

ஜான்சியின் அண்ணன் பிரபு இவர்களது காதலுக்கு ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். ஆகவே அடிக்கடி ஜான்சிக்கு அறிவுறுத்துவதோடு நல்லையாவையும் சில முறை கண்டித்துள்ளார். இந்த நிலையில் தான் ஜான்சியிடம் பேசுவதற்காக அவரது வீட்டுக்கே வந்துள்ளார் நல்லையா.

மல்லையாவும் ஜான்சியும் வீட்டு மாடியில் பேசிக்கொண்டு இருந்ததை கண்ட பிரபு ஆத்திரத்தின் உச்சிக்கே சென்றுள்ளார். அப்போது பிரபு அருகே  கிடந்த கட்டை ஒன்றால் மல்லையாவை பலமாக தாக்கியுள்ளார். உடனே நல்லையா அங்கேயே மயங்கி விழுந்துள்ளார். அவசர அவசரமாக நல்லையாவை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்காக ஆம்புலன்ஸ்-க்கு போன் செய்யப்பட்டது. அவர்கள் வந்து பரிசோதித்து விட்டு, நல்லையா இறந்து விட்டதாக கூறினார்.

இந்நிலையில் திருக்கோகர்ணம் பகுதி போலீசார் பிரபுவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்