காதல் வெறியில் இளம்பெண்ணை ரயிலில் தள்ளி கொள்ள முயற்சி!

காதல் வெறியில் இளம்பெண்ணை ரயிலில் தள்ளி கொள்ள முயற்சி! - Daily news

மும்பை அருகே இளைஞர் ஒருவர் தனது காதலை ஏற்க மறுத்த இளம்பெண்ணை ஓடும் ரயில் மீது வீசியுள்ளார். இக்கொடூர சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பி ஏற்படுத்தி உள்ளது.

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. பச்சிளம் குழந்தை முதல் அணைத்து தரப்பு பெண்களும், பாலியல் வன்கொடுமைகளுக்கும், வன்முறை தாக்குதல்களுக்கும் ஆளாகி வருகின்றனர். இந்தியாவில் பெண்களின் பாதுகாப்பது கேள்விக்குறியாகி உள்ள நிலையில், தற்போது மும்பையில் நடைபெற்றுள்ள இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மும்பையை சேர்ந்த சுமேஷ் ஜாதவ் என்ற இளைஞர் தன்னுடன் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த பெண்ணிடம் காதல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். அப்பெண் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்ததால் கோபமான இளைஞர், மும்பை கார் ரயில் நிலையத்தில் ஓடும் ரயில் மீது அப்பெண்ணை வீசி கொடூரமான முறையில் தள்ளி வீசியுள்ளார். சுமேஷ் யாதவ் பெண்ணை ரயில் மீது  வீசிய வீடியோ அங்கிருக்கும் சிசிடிவி கேமிராவில் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இச்சம்பவத்தில் அந்த பெண் உயிர் பிழைத்தாலும் தலையில் 12 தையல்கள் போடப்பட்டுள்ளது. தற்போது அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். ரயில் நிலையத்திலிருந்து தப்பி ஓடிய சுமேஷ் யாதவை 12 மணி நேரத்தில் போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சுமேஷ் ஜாதவ் விசாரணைக்கு பின் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

 இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "பாதிக்கப்பட்ட பெண்ணும் இளைஞரும் 2 வருடங்களுக்கு முன் ஒரே அலுவலகத்தில் பணி புரிந்து வந்துள்ளனர். இருவரும் நட்பாக பழகி வந்த நிலையில் அந்த இளைஞர் குடிப்பழக்கம் உடையவர் என்பது தெரிந்த உடன் அவருடான நட்பை முறித்து கொண்டுள்ளார். ஆனால் அந்த இளைஞர் அந்த பெண்ணை தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். அந்த இளைஞர் குறித்து புகார் அளித்த போதும் பின் தொடர்வதை அந்த இளைஞர் நிறுத்தவில்லை“ என்றார்.

Leave a Comment