சேலத்தில் குடியை நிறுத்த செய்வதறியாது தாய் மற்றும் மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சேலம் மாவட்டத்தில் மேச்சேரி அடுத்த  ஆயாமரத்து காடு பகுதியை சேர்ந்தவர் ரத்தினம். இவரது மனைவி புவனா. இத்தம்பதிக்கு தேவன் என்கிற முப்பது வயது வாலிபர் ஒருவர் திருமணமாகாமல் இருந்திருக்கிறார். கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னர் ரத்தினம் உயிரிழந்துவிட்டார். புவனாவும் அவர் மகன் தேவனும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். தாய் -மகன் இருவருக்கும் மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது . கடந்த 15 ஆண்டுகளாக இவர்கள் இருவரும் மது அருந்தி வந்துள்ளனர்.

இந்நிலையில் உடல்நலம் பாதிப்பினால் மருத்துவமனைக்குச் சென்றபோது, மருத்துவர்கள் பரிசோதனை செய்துவிட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்கும் இருவரும் இனி மது பழக்கத்தை கைவிட வேண்டும் என்று எச்சரித்துள்ளனர். ஆனாலும் அதன் பின்னரும் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையிலும் தாயும் மகனுமாக மது பழக்கத்தை கைவிடாமல் இருந்து வந்துள்ளனர்.

மேலும் கடந்த ஒரு மாதமாக இருவரும் சாப்பிடாமலும் இருந்திருக்கிறார்கள்.   இந்தநிலையில் நேற்று முன்தினம் இருவரும் வீட்டில் உயிரிழந்து கிடந்த இருக்கிறார்கள்  மேச்சேரி போலீசார் சென்று இருவரின் உடலையும்   மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனை அனுப்பி வைத்துள்ளனர்.

அதனை தொடர்ந்து மது அருந்தியதால் ஒரு மாத காலம் சாப்பிடாமல் இருந்து வந்துள்ளதால் உயிரிழந்தார்களா? மதுவில் விஷம் கலந்து குடித்து உயிர் இழந்துள்ளார்களா என்பது குறித்து மேச்சேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.