மீனவப் பெண் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூர கொலை! வட மாநில தொழிலாளர்கள் வெறிச்செயல்..

மீனவப் பெண் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூர கொலை! வட மாநில தொழிலாளர்கள் வெறிச்செயல்.. - Daily news

கடல்பாசி எடுக்க சென்ற மீனவப் பெண் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், வட மாநில தொழிலாளர்கள் 6 பேர் சேர்ந்து இந்த வெறிச்செயலை செய்தது தெரிய வந்த நிலையில், “குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வலியுறுத்தி” மீனவர்கள் சாலையில் டயரை தீ வைத்து எரித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகில் உள்ள வடகாடு மீனவ கிராமத்தில், 100 க்கும் மேற்பட்ட மீனவக் குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இங்கு உள்ள மீனவ பெண்கள் பலரும், அந்த பகுதியில் கிடைக்கும் கடல் பாசியை சேகரித்து, அதை விற்று பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், எப்போதும் போலவே அந்த பகுதியைச் சேர்ந்த வடகாடு மீனவ பெண் 45 வயதான சந்திரா என்ற பெண், வழக்கமாக கடல்பாசி எடுப்பதற்காக, நேற்று முன் தினம் சென்று உள்ளார்.

அப்போது, அந்த பகுதியில் இறால் பண்ணையில் வேலை பார்க்கும் வட மாநில தொழிலாளர்களான ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 6 பேர் சேர்ந்து, சந்திராவை கேலி கிண்டல் செய்து உள்ளனர்.

அத்துடன், அந்த இறால் பண்ணையானது அடர்ந்த காட்டுப் பகுதியில் அமைந்து உள்ளதால், சற்று பயந்த போன அந்த பெண் அங்கிருந்து செல்ல முற்பட்டு உள்ளார்.

அப்போது, அந்த வட மாநில அரக்கர்கள் 6 பேரால் கடத்தப்பட்ட அந்த பெண், அங்குள்ள அடர்ந்த காட்டுப் பகுதிக்கு தூக்கிச் செல்லப்பட்டு பலவந்தமாக கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இருக்கிறார்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த பெண், அந்த வட மாநில கும்பலிடம் தனி ஒருத்தியாக கடுயைாக போராடி உள்ளார். எனினும், அந்த அரக்க கும்பல், 6 பேரும் இந்த பெண்ணை மாறி மாறி வெறித் தனமாக வேட்டையாடிவிட்டு, அந்த பெண்ணை கொடுரான முறையில் அங்கேயே படுகொலையும் செய்து உள்ளனர்.

கொடூரத்தின் உச்சமாக, தடயங்களை அழிக்கும் விதமாக, அந்த பெண்ணின் உடலை அந்த கும்பல் தீ வைத்து எரிந்து உள்ளனர். 

இதனையடுத்து, அதிகாலையில் கடல்பாசி எடுக்கச் சென்ற சந்திரா, வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த அவரது உறவினர்கள் ராமேஸ்வரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இது தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் 6 வட மாநிலத்தவர்களையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி உள்ளனர்.

இதனால், அந்த பகுதி மக்கள் சந்தேகம் அடைந்து கடும் கோபத்தில் கைது செய்யப்பட்ட அந்த 6 போரையும் சரமாரியாக தாக்கி உள்ளனர்.

இதனால், அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்ட நிலையில், அந்த பகுதியில் 100 க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் துப்பாக்கி ஏந்திய அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டனர்.

அதே நேரத்தில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் உயிரிழந்த சந்திராவின் உடலை மீட்ட போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இது தொடர்பாக தொடர் விசாரணை நடைபெற்ற நிலையில், கைது செய்யப்பட்ட அந்த 6 வட மாநிலத்தவர்கள் தான், அந்த பெண்ணை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து, கொடூரமாக கொன்ற குற்றவாளிகளா? அல்லது வேறு யாருமா?” என்பது தெரிய வரும் என்றும், இன்னொரு தரப்பிலிருந்து கூறப்படுகிறது. 

இந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், “கைது செய்யப்பட்ட குற்றவாளிகளான வட மாநிலத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தியும்” அந்த பெண்ணின் உறவினர்கள் மற்றும் அந்த கிராம மக்கள் ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டம் குறித்து விரைந்து வந்த போலீசார், பேச்சு வார்த்தை நடத்தியும் எந்த தீர்வு எட்டப்படாமல் இருந்த நிலையில், இன்னொரு பக்கம் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்குள்ள டயரை தீ வைத்து எரித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில்,  துப்பாக்கி ஏந்திய அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு, போராட்டத்தை கலைத்தனர். இதனால், அந்த பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. எனினும், அங்கு, அசம்பாவிதம் எதுவும் ஏற்படாமல் இருக்க, அங்கு அதிக அளவிலான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, “தமிழக மீனவப் பெண் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், சம்மந்தப்பட்ட வட மாநில கயவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று, சீமான் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

Leave a Comment