தாயின் 50 வயது கள்ளக் காதலனால் கர்ப்பமான 17 வயது மகளுக்கு, சொந்த தாயே வீட்டில் வைத்து பிரசவம் பார்த்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

அதாவது, சென்னை ஓட்டேரி பகுதியில் 40 வயது பெண் ஒருவர், தனது 17 வயது மகளுடன் தனியாக வசித்து வருகிறார். 

இவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரை பிரிந்து தனியாக தனது மகளுடன் வசித்து வந்தார். 

அத்துடன், இந்த பெண்ணின் 17 வயது மகள், அங்குள்ள ஒரு அரசுப் பள்ளியில் படித்து வந்தார்.
 
இப்படியான சூழலில் தான், கடந்த சில வருடங்களுக்கு முன்பு சென்னை புளியந்தோப்பைச் சேர்ந்த 50 வயதான முத்துக்குமார் என்பவருடன், இந்த பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு உள்ளது.

இதனால், அவர்கள் இருவரும் கள்ளக் காதல் உறவில் ஈடுபட்டு வந்தனர். இதனால், மகள் வீட்டில் இல்லாத சமயத்தில், அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசம் அனுபவித்து வந்து உள்ளனர். 

ஆனால், இந்த கள்ளக் காதல் உறவு, சில ஆணடுகளைத் தாண்டி இவர்களுக்குள் தொடர்ந்த நிலையில், கள்ளக் காதலன் முத்துக்குமாருக்கு, தனது காதலியின் 17வயது மகள் மீது சபலப்பட்டு இருக்கிறார். 

இதனையடுத்து, தன்னுடைய சபலத்தைப் பற்றி, துனிச்சலாக அந்த பெண்ணிடமும் கூறி, தனது ஆசையை அவன் வெளிப்படுத்தியிருக்கிறான்.

இதனால், அந்த பெண்ணும், தனது கள்ளக் காதலின் ஆசைக்கு, தனது 17 வயது மகளை இறையாக்கி இருக்கிறாள்.

அதன் படி, கடந்த ஒரு வருடமாக முத்துக்குமார் அந்த 17 வயது சிறுமியை தொடர்ச்சியாக பாலியல் பலாத்காரம் செய்து வந்திருக்கிறான். 

இதனால், அந்த சிறுமி ஒரு கட்டத்தில் கர்ப்பமடைந்து இருக்கிறார். 

அத்துடன், அந்த சிறுமியின் வயிறு பெரிதான நிலையில், “மருத்துவமனைக்கு சென்றால், நாம் போலீசாரிடம் மாட்டிக்கொள்வோம்” என்று, பயந்த அந்த சிறுமியின் தாயார், தனது மகளை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லாமல், வீட்டில் வைத்தே பிரசவம் பார்த்திருக்கிறார். 

இதில், அந்த 17 வயது சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. ஆனால், அந்த குழந்தைக்கு உடல் நிலை சரியில்லாமல் போய் உள்ளது. இதனால், வேறு வழி தெரியாமல் அந்த சிறுமியின் தாயார், அங்குள்ள நம்மாழ்வார்பேட்டையில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்திற்கு அந்த கை குழந்தையை அழைத்துச் சென்றிருக்கிறார். 

அப்போது, குழந்தையுடைய தாயின் ஆதார் கார்டை அங்கிருந்த செவிலியர்கள் கேட்டு உள்ளனர். தொடக்கத்தில் ஆதார் கார்ட்டை காட்டாமல் மாறி மாறி பேசி வந்த நிலையில். “ஆதார் கார்டு இருந்தால் மட்டுமே சிகிச்சை அளிக்க முடியும்” என்று, நர்ஸ் கூறியதால், வேறு வழியில்லாமல் ஆதார் கார்ட்டை கொடுத்திருக்கிறார். 

அப்போது தான், அந்த பச்சிளம் குழந்தையின் தாய்க்கு 17 வயது நடப்பது தெரிய வந்தது.

இதனால், சந்தேகம் அடைந்த மருத்துவமனை ஊழியர்கள் விசாரித்து உள்ளனர்.

மேலும், “குழந்தையின் தந்தை யார்?” என்றும், விசாரித்து உள்ளனர்.

அதற்கு, “50 வயதான முத்துக்குமாரை காண்பித்து, இவர் தான் தந்தை” என்று, அந்த பெண் பதில் அளித்திருக்கிறார். இதனால், கடும் அதிர்ச்சியடைந்த மருத்துவமனை ஊழியர்கள், இது தொடர்பாக குழந்தைகள் நல அமைப்புக்கு தகவல் கூறி உள்னர்.

இது குறித்து விரைந்து வந்த குழந்தைகள் நல அதிகாரிகள், புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த முத்துக்குமாரை பொன்னேரியில் வைத்து அதிரடியாக கைது செய்தனர். 

அத்துடன், கள்ளக் காதலியான 17 வயது சிறுமியின் தாயாரையும் போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் விசாரணை நடத்தியப் பிறகு, அந்த கள்ளக் காதல் ஜோடி இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.