8 ஆம் வகுப்பு மாணவியை கடத்திச் சென்ற பள்ளி ஆசிரியர் கைது!

8 ஆம் வகுப்பு மாணவியை கடத்திச் சென்ற பள்ளி ஆசிரியர் கைது! - Daily news

8 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியை, ஆசை வார்த்தைகள் ஆசிரியர் ஒருவர் கடத்திச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த ஆசிரியர் அதிரடியாக குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளார்.

தருமபுரி மாவட்டத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

தருமபுரி அருகே தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த தனியார் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வரும் 13 வயதுடைய ஒரு மாணவியை, அதே பள்ளியில் பணியாற்றி வந்த கிருஷ்ணகிரி மாவட்டம் புலியூர் கிராமத்தைச் சேர்ந்த திருமணமான முபாரக் என்கின்ற ஆங்கில ஆசிரியர், கடந்த சில நாட்களுக்கு முன்பு கடத்திச் சென்றாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த மாணவியின் பெற்றோர், அங்குள்ள மொரப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், பள்ளியை சுற்றி உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.

அத்துடன், அங்குள்ள அரூர், சேலம் அயோத்தியபட்டினம் உள்ளிட்ட அந்த சுற்றுவட்டார பகுதிகளில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

அப்பொழுது, அயோத்தியபட்டினம் பகுதியில் சந்தேகத்தின் பேரில் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வந்த போலீசார், சம்மந்தப்பட்ட அவர்கள் இருவரையும் கையும் களவுமாக மடக்கப் பிடித்த போலீசார், அவர்கள் இருவரையும் மொரப்பூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில், “ 8 ஆம் வகுப்பு படித்து வரும் 13 வயதுடைய ஒரு மாணவியிடம் ஆசை வார்த்தைகள் கூறி, அந்த ஆசிரியர் கடத்திச் சென்றது” உறுதி செய்யப்பட்டது. 

இதனையடுத்து, பள்ளி மாணவியை கடத்திச் சென்ற அந்த பள்ளி ஆசிரியர் மீது போலீசார், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்தனர். 

இதனையடுத்து, கைது செய்யப்பட்டு அந்த பள்ளி ஆசிரியர், சேலம் மத்தியச் சிறையில் அடைத்தனர். இதானல், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Comment