ஆவடி இரட்டைக்கொலையின் பின்னணி.. நடந்தது என்ன?

ஆவடி இரட்டைக்கொலையின் பின்னணி.. நடந்தது என்ன? - Daily news

ஆவடி இரட்டை கொலையில் நண்பனின் மனைவியை அபகரித்தல், நிர்வாண வீடியோ என்று முன் விரோதத்தினால் இரட்டைக்கொலை நடந்துள்ளது. ஆனால், முன் விரோதத்திற்கும் பலியான இளைஞர்களூக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பது விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

சென்னையை அடுத்த ஆவடி பஸ் நிலையம் பின்புறம் உள்ள ஓ.சி.எப். மைதானத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவில் 2 வாலிபர்கள் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டு கிடந்தனர். அவர்களின் முகம் சிதைக்கப்பட்டு இருந்தது. இந்த கொடூர கொலை தொடர்பாக தகவல் அறிந்ததும் ஆவடி டேங்க் பேக்டரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜீவ்பிரின்ஸ் ஆரோன், சப்-இன்ஸ்பெக்டர் விமலநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் படுகொலை செய்யப்பட்ட வாலிபர்கள் இருவரும், ஆவடி மசூதி தெருவைச் சேர்ந்த அரசு என்ற 30 வயது மதிக்கத்தக்க நபர் அவர் பெயர் அசாருதீன்  மற்றும் ஆவடி கவுரிபேட்டை பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் சுந்தர் வயது 30,  என்பது தெரியவந்தது. அசாருதீன், ஆவடி மீன் மார்க்கெட்டில் மீன் வெட்டும் தொழில் செய்து வந்தார். கொலையான 2 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்த போலீசார், மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

மேலும் நடத்திய விசாரணையில், ஆவடியை அடுத்த கொள்ளுமேடு பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மணிகண்டன் வயது 30, என்பவரும், ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த ஜெகன் வயது 30 என்பவரும் 2019-ம் ஆண்டு வெவ்வேறு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும்போது நண்பர்களானார்கள். சிறையிலிருந்து வெளியே வந்த பிறகும் இவர்களின் நட்பு தொடர்ந்தது.

இந்நிலையில் இருவரும் சேர்ந்து ஆவடி பகுதியில் கஞ்சா வியாபாரம் செய்து வந்தனர். இதனால் ஜெகன், அடிக்கடி மணிகண்டன் வீட்டுக்கு சென்று வந்தார். அப்போது மணிகண்டனின் மனைவியுடன் பழக்கம் ஏற்பட்டது. அதன்பிறகு மணிகண்டனின் மனைவியை ஜெகன் தன்னுடன் அழைத்துச்சென்று விட்டதாகவும், அதன்பிறகு மணிகண்டன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த முன்விரோதம் காரணமாக மணிகண்டன், ஜெகன் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த வாரம் ஜெகன், தனது நண்பர்களுடன் சேர்ந்து ஆவடி பஸ் நிலையம் அருகே உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் மணிகண்டனை தாக்கியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன், ஜெகனை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் ஜெகன் தனது நண்பர்களான அசாருதீன், சுந்தர் உள்பட மேலும் சிலருடன் சேர்ந்து ஆவடி பஸ் நிலையம் பின்புறம் உள்ள ஓ.சி.எப். மைதானத்தில் மது அருந்தினார். இதையறிந்த மணிகண்டன் மற்றும் அவரது கூட்டாளிகள் சுமார் 10 பேர் ஜெகனை தீர்த்து கட்டுவதற்காக அங்கு சென்றனர்.

மணிகண்டன் மற்றும் அவரது நண்பர்களை பார்த்ததும் ஜெகன் மற்றும் அவரது நண்பர்கள் சிலர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அங்கு மது அருந்தி கொண்டிருந்த ஜெகனின் நண்பர்களான அசாருதீன், சுந்தர் இருவரையும் மணிகண்டனின் கூட்டாளிகள் சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டினர். இதில் இருவரது கை, கால், முகம் உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக வெட்டியதுடன், முகத்தையும் சிதைத்து விட்டு தப்பி ஓடிவிட்டது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். 

மேலும் இந்த கொலை தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் ஆவடியை சேர்ந்த ஜெகன்,  யாஸீன் என்ற இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.  ஜெகன் உட்பட10 பேரை இந்த வழக்கில் போலீசார் கைது செய்துள்ளனர். முன் விரோதத்தினால்  இந்த கொலை நடந்துள்ள என்பதும், ஆனால் முன்விரோதத்திற்கும், பகைக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லாத இருவர் கொலை செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது.

போலீசார் விசாரணையில் ஆவடியை அடுத்த கொள்ளுமேடு பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் மணிகண்டன்.  ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ஜெகன்.  கடந்த 2019-ம் ஆண்டில்  குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தபோது ஜெகனும் மணிகண்டனும் நண்பர்கள் ஆகியிருக்கிறார்கள்.  சிறையிலிருந்து வெளியே வந்த பின்னரும் இவர்களின் நட்பு தொடர்ந்து இருக்கிறது.   இருவரும் ஆவடி பகுதியில் கஞ்சா வியாபாரம் செய்து வந்திருக்கிறார்கள்.  

அதனைத்தொடர்ந்து இது விஷயமாக அடிக்கடி மணிகண்டன் வீட்டுக்கு சென்று வந்திருக்கிறார். அப்போது மணிகண்டனின் மனைவி பிரேசில்லாவுடன் நெருக்கம் ஏற்பட்டு இருக்கிறது. மணிகண்டன் சிறையிலிருந்தபோது ஜெகன், பிரேசில்லாவை  அழைத்துக் கொண்டு சென்றிருக்கிறார். சிறையிலிருந்து வெளியே வந்த மணிகண்டன் தன் மனைவி பிரேசிலில்லா நண்பனுடன் ஓடிவிட்டது அறிந்து,   வருந்தியிருக்கிறார். பின்னர் மாலதி என்கிற விதவைப் பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்திருக்கிறார்.   ஆனால் ஜெகன் மீது முன்விரோதம் இருந்து வந்திருக்கிறது. இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது.

மேலும் கடந்த வாரம் ஜெகன் தன் நண்பர்களுடன் சென்று நள்ளிரவில் ஆவடி பஸ் நிலையம் அருகே ஆட்டோ ஸ்டாண்டில் வைத்து மணிகண்டனை நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்திருக்கிறார். இந்த வீடியோவை வலைத்தளங்களில் வெளியிடாமல் இருக்க ஒரு லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டி இருக்கிறார்.  இதனால் கடுப்பான ஜெகன், மணிகண்டனை தீர்த்து கட்ட வேண்டும் என்று சம்பவத்தன்று இரவு 10 மணிக்கு தனது நண்பர்கள் அசாருதீன், சுந்தர் உட்பட மேலும் சிலரையும் அழைத்துக்கொண்டு ஆவடி பஸ் நிலையம் அருகே உள்ள மைதானத்தில் சென்று மது அருந்தி இருக்கிறார். 

இந்நிலையில் மணிகண்டனை தீர்த்துக்கட்ட வேண்டும் என்பதற்காகத்தான் அவர்களுடன் சேர்ந்து மது அருந்தியிருக்கிறார்.  இதை அறிந்து கொண்ட மணிகண்டன் ஜெகனை தீர்த்துக்கட்ட தனது கூட்டாளிகளுடன் அங்கே சென்றிருக்கிறார். மணிகண்டனையும் அவரது கூட்டாளிகளையும் பார்த்துவிட்டு  நண்பர்களும் தப்பி ஓடியிருக்கிறார் ஜெகன்.  

இது  எதுவுமே தெரியாமல் மது அருந்திக் கொண்டிருந்த அசாருதீன், சுந்தர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். கை, கால், முகம் என்று சரமாரியாக வெட்டி விட்டு தப்பியிருக்கிறார்கள் மணிகண்டனும் ஆதரவாளர்களும். ஜெகனுக்கும் மணிகண்டனுக்கும் உள்ள முன்விரோதத்தால் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஆனால் இந்த முன்விரோதத்தில் கொஞ்சமும் சம்பந்தம் இல்லாமல் ஆசாருதீனும் , சுந்தரும் பலிகடா ஆகியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment