டெல்லியில் இலவச வகுப்புகளை எடுத்துவரும் பி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வரும் மாணவர் சந்தீப்பை போலீசார் கைது செய்துள்ளனர். 


20 வயதான சந்தீப், 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச வகுப்புகளை எடுத்துவருகிறார். NS சொலியுஷன் செலுத்தப்பட்டால் குழந்தைகளின் நியாபக திறன் மேம்படும் என்று தான் யூ டியூப்ல் பார்த்து, தனது டியூசனில் படிக்கும் மாணவர்களுக்கு NS சொலியுஷனை ஊசி மூலம் செலுத்தியுள்ளார்.


மாணவர்களின் ஒருவரின் பெற்றோர் தங்கள் குழந்தைக்கு ஊசி போடுவதைக் கண்டு போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.  அவர் கொடுத்த புகாரின் பேரில் ,  டியூசன் ஆசிரியர் சந்தீர்ப்பை கைது செய்து விசாரித்த போலீஸ், Normal Saline என்ற சொலியுஷனை , நியாபக திறன் அதிகரிக்க செய்ய தன்னிடம் பயிலும் மாணவர்களுக்கு செலுத்தியதாக கூறினார். இதனால் சந்தீப் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.