“காலம் மாறி போச்சு நண்பா..” 17 வயது சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்த 20 வயது இளம் பெண்!

“காலம் மாறி போச்சு நண்பா..” 17 வயது சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்த 20 வயது இளம் பெண்! - Daily news

17 வயது சிறுவனை 20 வயது இளம் பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள தாராவி பகுதியில், 20 வயதான இளம் பெண் ஒருவர் தனது உறவினர்களுடன் வசித்து வந்தார். 

அங்குள்ள கல்லூரியில் படித்து வந்த அந்த இளம் பெண், எந்நேரமும் சமூக வலைதளங்களில் மூழ்கியே இருந்து உள்ளார்.

இப்படியான சூழலில் தான், பீகாரைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவனோடு அந்த பெண், சமூக வலைதளங்கள் மூலமாக அறிமுகம் ஆகி, அந்த சிறுவனுடன் தொடர்ந்து சாட்டிங்கில் ஈடுபட்டிருக்கிறார்.

ஒரு கட்டத்தில், அந்த 17 வயது சிறுவனும் சாட்டிங் செய்த நிலையில், தனக்கான லிமிட் தாண்டி தொடர்ந்து சாட்டிங் செய்த அந்த இளம் பெண், எல்லை தாண்டி, “என்னை காதலிக்குமாறு” அந்த சிறுவனை, அந்த இளம் பெண் காதல் டார்ச்சர் செய்தார் என்றும், கூறப்படுகிறது.

ஆனால், அந்த 17 வயது சிறுவன், அந்த இளம் பெண்ணை காதலிக்க வில்லை என்றும் கூறப்படுகிறது. 

இந்த நிலையில் தான், அந்த சிறுவன் பீகாரில் இருந்து தாராவியில் உள்ள தன் உரவினர் வீட்டுக்கு வந்திருக்கிறார். 

இதனை எப்படியோ தெரிந்து கொண்ட அந்த இளம் பெண், அந்த சிறுவன் இருக்கும் இடத்திற்கு வந்து உள்ளார்.

பின்னர், அந்த சிறுவனை அங்குள்ள ஒரு இடத்தில் தனிமையில் அழைத்துச் சென்று, அந்த சிறுவனை அந்த 20 வயதான இளம் பெண் வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்தார் என்றும் கூறப்படுகிறது. 

இதனால், அந்த சிறுவன் பயந்த நிலையில், “உன்னை எதாவது சொல்லி போலீசில் பிடித்து கொடுத்துவிடுவேன்” என்று மிரட்டியதுடன், “நான் சொன்னபடி அப்படியே நடந்துகொள்” என்றும், அந்த இளம் பெண் கடுமையாக மிரட்டி இருக்கிறார். இதனால், அந்த சிறுவன் பயந்துபோன நிலையில், அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் இருந்திருக்கிறார்.

இதனையடுத்தே, அந்த 17 வயது சிறுவனும், அந்த 20 வயது இளம் பெண் சொன்னது போல் நடந்துகொண்ட நிலையில், அந்த இளம் பெண்ணும், இந்த சிறுவனை பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்தார் என்றும் கூறப்படுகிறது.

இதனையடுத்து, அந்த சிறுவன் வீடு திரும்பிய நிலையில், தனக்கு நேர்ந்த இந்த பாலியல் கொடுமைகள் குறித்து தனது உறவினரிடம் கூறி அழுதிருக்கிறார்.

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த அந்த சிறுவனின் உறவினர், அந்த பெண்ணை வீட்டை விட்டு வெளியே போகும்படி திட்டி துரத்தி உள்ளனர்.  

இதனால், கோபம் அடைந்த அந்த இளம் பெண், சிறுவனின் உறவினர் மீது அங்குள்ள காவல் நிலையத்தில் பாலியல் பலாத்கார புகார் அளித்து உள்ளார்.

இதனைப் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்த அந்த 17 வயது சிறுவனும், அந்த இளம் பெண் மீது, பாலியல் பலாத்கார புகார் அளித்திருக்கிறார்.

இதனால், சிறுவனின் புகாரையும் பெற்றுக்கொண்ட போலீசார், இரு தரப்பு வாதங்களையும் கேட்டு தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக, அந்த இளம் பெண்ணுக்கு 20 வயது நடப்பதாலும், அந்த சிறுவனுக்கு 17 வயது நடப்பதாலும், பாலியல் புகார் அந்த இளம் பெண்ணுக்கு எதிராக இருப்பதாகவும், இதனால் அந்த இளம் பெண் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படலாம் என்றும், கூறப்படுகிறது.

இதனிடையே, 17 வயது சிறுவனை மிரட்டி 20 வயது இளம் பெண் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படும் சம்பவம், பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. 

Leave a Comment