உலகை அச்சுறுத்திவரும் கோவிட் - 19 கொரோனா வைரஸ், வரலாறு காணாத சோகத்தை ஏற்படுத்திவருகிறது. கொரோனாவின் தாக்கம் உச்சத்தை அடைந்ததைத் தொடர்ந்து, உலக சுகாதார நிறுவனத்தின் முதன்மை அதிகாரி டெட்ராஸ் அதோனாம் தொடர்ந்து மக்களை சந்தித்து வருகின்றார்.

கொரோனா பரவத் தொடங்கிய நேரத்தில், உலக சுகாதார நிறுவனத்தின் முதன்மை அதிகாரி டெட்ராஸ் அதோனாம் கெப்ரேயேஸஸ் நேரடியாக சீனா சென்று, கள நிலவரம்குறித்து அறிந்துகொண்ட பின்னர், பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். அப்போது பேசிய அவர், ``இந்தக் கொரோனாவுக்கு எதிராக உலகம் மிகத் தீவிரமாகச் செயல்பட வேண்டும்" என்று குறிப்பிட்டார்.

முதலில் நாவல் கொரோனா என பெயரிடப்பட்டிருந்த இது, கோவிட் - 19 (COVID - 19) என பின்னர் பெயரிடப்பட்டது. இந்தப் பெயர், எந்தவொரு குறிப்பிட்ட நாட்டின் பெயரையோ, விலங்கின் பெயரையோ குறிப்பிடவில்லை எனக் கூறினார் டெட்ராஸ். இந்தப் பெயரில் வரும் CO என்பது, கொரோனாவின்(Corona) முதல் இரு எழுத்துகளையும், VI என்பது வைரஸின் (Virus) முதல் இரு எழுத்துகளையும், D என்பது நோயின் (Disease) முதல் எழுத்தையும் குறிப்பதாக விளக்கம் தந்தார். இறுதியாக உள்ள 19 என்ற எண், வைரஸ் கண்டறியப்பட்ட வருடத்தைக் குறிப்பது. டிசம்பர் 31, 2019 - ம் தேதியே உலக சுகாதார நிறுவனத்துக்கு வைரஸ் குறித்த தகவல்கள் வந்துவிட்டதால், அந்த ஆண்டையே அவர்கள் பெயரில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த கோவிட் - 19 கொரோனா வைரஸ், டிசம்பர் தொடங்கி, இன்று வரை உலகில் ஏற்படுத்தி வரும் பாதிப்புகள், மிக மிக அதிகம். ஒன்பது மாதங்கள் ஆனபிறகும், இதன் தாக்கம் சற்றும் குறையாமல் இருக்கிறது. இன்றைய தேதிக்கு, அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கான பட்டியலில், இந்தியாவுக்கு இரண்டாவது இடம். ஒவ்வொரு நாளும் இந்தியாவில் மட்டும் 90,000 வரை புதிய கொரோனா நோயாளிகள் கண்டறியப்பட்டும் - 70,000 க்கும் அதிகமான பேர் நோயிலிருந்து குணப்படுத்தப்பட்டும் வருகின்றனர்

இப்படி தொடர்கதை போல நீண்டுக் கொண்டிருக்கும் கொரோனாவை கையாள முடியாமல் நாடுகள் அனைத்தும் தவித்து வரும் நிலையில், அதை அழிப்பதற்கு முன் அடுத்த தொற்று நோய்க்கு உலக நாடுகள் முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனத்தினர் தற்போது எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் உவகளவில் பெரிதான அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றால் தினம் தோறும் பாதிப்புகளும், உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த வைரஸ் தொற்றுக்கு இன்னும் மருந்து பயன்பாட்டுக்கு வராத நிலையில் பல நாடுகள் ஊரடங்குகளை தளர்த்தி வருகின்றன. இருப்பினும் சுகாதார நடவடிக்கை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டியது அவசியம் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்து வருகின்றது.

இந்நிலையில் அடுத்த தொற்றுநோய் தாக்குவதற்கு முன் உலகநாடுகள் இன்னும் கூடுதல் கவனத்துடன் தயாராக இருக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து அவர் கூறுகையில், பொதுசுகாதாரத்தை மேம்படுத்தும் நாடுகளில் உலக நாடுகள் ஈடுபட வேண்டும். கொரோனா தொற்றுதான் கடைசி வைரஸ் என்று சொல்ல முடியாது. இதுதொடர்பாக வரலாறு நமக்கு நிறைய கற்றுக் கொடுத்துள்ளது.

அதனால் அடுத்த தொற்றுநோய் வரும்போது சுகாதார நடவடிக்கைகளை மேம்படுத்தி உலகம் தயாராக இருக்க வேண்டும். இந்த கொரோனா தொற்றுநோயை விட அடுத்த தொற்றுநோய்க்கு முன்கூட்டியே தயாராக வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.