குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி.யில் இன்று மேலும் 60 மாணவர்கள் உட்பட மொத்தம் 141 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

CORONOகடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவின் வூகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் பல்வேறு உருமாற்றமடைந்து வேகமாக பரவி வருகிறது. ஏற்கனவே இங்கிலாந்தில் ஆல்ஃபா, இந்தியாவில் டெல்டா, தென் ஆப்பிரிக்காவில் பீட்டா, பிரேசிலில் காமா என பல்வேறு வகைகளில் கொரோனா வைரஸ் உருமாற்றமடைந்துள்ளது. அதற்கு ஒமிக்ரான் என பெயரிடப்பட்டுள்ளது. 

மேலும் இந்த ஒமிக்ரான் வைரஸ் பிற வைரஸ்களை ஒப்பிடும்போது அதிவேகமாக பரவக்கூடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. 50 பிறழ்வுகளை கொண்டுள்ள ஒமிக்ரான் வைரஸ் 25-க்கும் அதிகமான நாடுகளில் அறிவிப்பதற்கு முன்னரே பரவியுள்ளது. இந்நிலையில் ஒமிக்ரான் வைரஸ் தற்போது இந்தியாவிலும் பரவியுள்ளது.

இந்நிலையில் ஒமிக்ரான் உருமாறிய கொரோனா வைரஸ் பல நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. ஒமிக்ரான்  வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மத்திய , மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன . வெளிநாடுகளில் இருந்து வருவோரை விமான நிலையத்திலேயே பரிசோதித்து தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதனைத்தொடர்ந்து  தமிழகத்தில் ஒமிக்ரானை  எதிர்கொள்ளத் தேவையான மருந்துகள், ஆக்சிஜன் வசதிகள், முககவசங்கள் போன்றவை அடுத்த 3 மாதங்களுக்கு தேவையான அளவு கையிருப்பில் உள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

அதனைத்தொடர்ந்து தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் என்பது நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது இதன் காரணமாக தமிழகத்தில் வருகிற 31 ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் வார இறுதி நாட்களில் வழிபாட்டு தலங்களுக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த சூழலில் நேற்று ஒரேநாளில் தமிழகத்தில் 6,983 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 11 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 27 லட்சத்து 67 ஆயிரத்து 432ஆகவும், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 36ஆயிரத்து 825 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் சென்னை அருகே  குரோம்பேட்டை எம்.ஐ.டி கல்லூரியில் மேலும் 61 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.  எம்.ஐ.டி.யில் இதுவரை மொத்தம் 142 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் குரோம்பேட்டை சரவணா ஸ்டோர்சில் 30 ஊழியர்களுக்கு கொரோனா இருப்பது தெரியவந்துள்ளது. சுமார் 250 ஊழியர்களுக்கு பரிசோதனை செய்ததில் 30 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தலின் பேரில் சரவணா ஸ்டோர்ஸில் மாநகராட்சி ஊழியர்கள் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ததோடு, கடையும் மூடப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை கடை திறக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.