உலகளவில் கொரோனா தொற்று 3,35,40,007 கோடியாக அதிகரித்துள்ளது. உயிரிழப்பு பத்து லட்சத்தை கடந்து, 10,06,057 ஆக உள்ளது. உலகளவில் 2,48,67,725 பேர் இந்த பாதிப்பில் இருந்து மீண்டு வந்துள்ளனர். இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 777 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் கொரோனா தொற்று இன்னும் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை. ஐரோப்பிய நாடுகளில் இரண்டாவது அலை உருவாகி, தொற்றின் பாதிப்பு இன்னும் அதிகரித்து வருகிறது. ரஷ்யா கண்டுபிடித்து இருக்கும் ஸ்புட்னிக் வி என்ற தடுப்பு மருந்து அந்த நாட்டில் 3000 பேருக்கு செலுத்தி இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பரில் சீனாவின் வூஹான் நகர இறைச்சி சந்தையில் இருந்து பரவியது கொரோனா வைரஸ். ஜன., இறுதியில் இந்தியா, ஐரோப்பா, ஜப்பானிலும், பிப்., மாதம் அமெரிக்காவிலும் பரவியது. பிப்., 2ம் தேதி சீனாவுக்கு வெளியே முதல் உயிரிழப்பு பிலிப்பைன்சில் பதிவானது
.
அப்போது, அவசர நிலையை அறிவித்த உலக சுகாதார நிறுவனம், சீனாவுடனான பயண மற்றும் வர்த்தக உறவுகளுக்கு கட்டுப்பாடுகளை அறிவிக்கவில்லை. மிகச் சாவகாசமாக மார்ச் 11ம் தேதி தான் கொரோனா வைரசை பெருந்தொற்றாக அறிவித்தது. மார்ச் 10ல் இந்தியாவில் முதல் கொரோனா உயிரிழப்பு கர்நாடகாவில் நிகழ்ந்தது. இன்று உலக கொரோனா பலி எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்துள்ளது.

கடந்த ஜூன் 29ல் உலகளவில் 5 லட்சமாக இருந்த கொரோனா உயிரிழப்பு, 3 மாதங்களில் 10 லட்சத்தை தாண்டியுள்ளது. இது, 2004 இந்திய பெருங்கடலில் சுனாமி ஏற்படுத்திய அழிவை விட, 4 மடங்கு அதிகமாகும். உயிரிழப்புகள் மட்டும் இதில் சோகமான விஷயமில்லை, அரசுகளின் தோல்வி மற்றும் மருத்துவ வசதிகளை பெறுவதில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை இந்த இறப்புகள் சுட்டிக்காட்டுவதாக பொருளாதார அறிஞர்கள் கூறுகின்றனர். 'வறுமை ஒழிப்பில் 30 ஆண்டுகளாக நிகழந்த முன்னேற்றத்தை தொற்றுநோய் பாதித்துள்ளது. உலகளவில் 50 கோடி மக்களை இந்நோய் வறுமையில் தள்ளும்' என, ஐ.நா., கணித்துள்ளது.

ஆசியாவில் தொற்றுநோயால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் முதலிடத்தில் உள்ள இந்தியா, உலக பட்டியலில் 2ம் இடத்தில் உள்ளது. ஆகஸ்ட் 17ல் 50,000 ஆக இருந்த உயிரிழப்புகள், செப்., 29ல் 96 ஆயிரத்தை கடந்துள்ளது. ஐரோப்பாவில் 2.2 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் அதிகம் பாதிப்பைச் சந்தித்தன. வட அமெரிக்க கண்டத்தில் மட்டுமின்றி உலகளவில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. மே 27 வரை ஒரு லட்சம் பேரையும், செப்., 22 அன்று 2 லட்சத்துக்கு மேற்பட்டோரையும் கொரோனாவால் இழந்துள்ளது அமெரிக்கா. லத்தீன் அமெரிக்காவில் 3.3 லட்சம் இறப்புகள் பதிவாகியுள்ளன.

மிகவும் பின் தங்கிய நாடான ஆப்ரிக்காவில் கொரோனா பலி எண்ணிக்கை 35,512 ஆக உள்ளது. அங்கு மிக கடுமையான ஊரடங்கு இன்னமும் அமலில் உள்ளது. இதனால் கொரோனாவை விட வறுமையால் இறந்தவர்கள் எண்ணிக்கை உயர்ந்திருக்கும் என ஆய்வாளர்கள் அஞ்சுகின்றனர்.

அமெரிக்காவில் இதுவரைக்கும் கொரோனவால் 73,59,507 பேர் பாதிக்கப்பட்டு, 209,759 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரு நாளில் மட்டும் அமெரிக்காவில் கொரோனாவுக்கு 306 பேர் உயிரிழந்துள்ளனர். புதிதாக நேற்று மட்டும் 35,314 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. 46,06,009 பேர் இந்த நோயில் இருந்து குணமடைந்துள்ளனர். பத்து லட்சம் பேருக்கு 633 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவில் அடுத்து இந்தியாவில்தான் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. இந்தியாவில் மொத்தம் 61,43,019 பேருக்கு இதுவரைக்கும் தொற்று ஏற்பட்டு, நாடு முழுவதும் 96,351 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று மட்டும் 700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கடந்த வாரங்களில் உயிரிழப்பு ஆயிரத்தை கடந்து வந்த நிலையில் தற்போது குறைந்துள்ளது. பத்து லட்சம் பேரில் 70 பேர் உயிரிழந்துள்ளனர். மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில்தான் ஒரு நாள் தொற்று பாதிப்பு அதிமகாக உள்ளது. நேற்று மட்டும் 70,000 த்தை நெருங்கிய பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டது.

பிரேசிலில் 47,48,327 பேர் பாதிக்கப்பட்டு, 142,161 பேர் உயிரிழந்துள்ளனர், புதிதாக 16,018 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று ஒரு நாளில் மட்டும் 385 பேர் உயிரிழந்துள்ளனர். பத்து லட்சம் பேருக்கு 688 பேர் உயிரிழந்துள்ளனர். 4,084,182 பேர் இந்த நோயில் இருந்து மீண்டு வந்துள்ளனர்.

கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்து மனிதர்களுக்கு செலுத்தி இருக்கும் ரஷ்யாவில் 11,59,573 பேர் பாதிக்கப்பட்டு, 20,385 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரு நாள் மட்டும் புதிதாக 8,135 பேருக்கு தொஎர்று ஏற்பட்டு, 61 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் 1,93,268 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். பத்து லட்சம் பேரில் 140 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது