இந்தியாவில் கொரோனா பாதிப்பு தீவிரமாக காட்டி வரும் நிலையில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 26 ஆயிரத்தைக் தாண்டி உள்ளது. 


மொத்தமாக 1 கோடியே 29,28,000 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 59,258 பேர் குணமடைந்துள்ளனர் மற்றும்  685 பேர் உயிரிழந்தனர். அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 59,907 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 


இந்தியாவில் கொரோனா பரவல் கட்டுப்பாட்டுக்குள் இருந்த நிலையில், கடந்த 4 வாரங்களாக தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து நாள் தோறும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. கொரோனா தொற்று பரவத் தொடங்கிய நாளில் இருந்து இதுவரை இல்லாத அளவிற்கு, இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 1,26,789 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 


நாடு முழுவதும் இதுவரை 9 கோடியே 1 லட்சத்து 98,000 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.