உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, தற்போது 20 மில்லியனை தொட்டுள்ளது. சரியாக, 2,02,23,780 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இதுவரை 7,37,866 பேர் மரணம் அடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, கடந்த 24 மணி நேரத்தில் 2,08,657 என அதிகரித்து, மொத்தம் 2,02,37,780 பேர் பாதிப்பு அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை மட்டும், 4,308. இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து மொத்தம் 7,37,866 பேர் உயிர் இழந்துள்ளதாக கூறப்பட்ட்டுள்ளது. 20 மில்லியனில், 10 மில்லியனுக்கும் பேற்பட்டோர் குணமாகிவிட்டதாக தெரிகிறது. அதன்படி இதுவரை 1,31,00,237 பேர் குணம் அடைந்துள்ளனர்.64,558 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது

உலகிலேயே மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் முதலிடத்தில் இருக்கும் அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 49,912 பேர் அதிகரித்து மொத்தம் 52,50,658 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 721 அதிகரித்து மொத்தம் 1,66,163 பேர் இதுவரை உயிர் இழந்துள்ளனர். மேலும் இதுவரை அங்கு 27,15,759 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இரண்டாவது இடத்தில் இருக்கும், பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21,888 பேர் அதிகரித்து மொத்தம் 30,57.470 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 721 அதிகரித்து மொத்தம் 1,01,857 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 21,63,812 பேர் குணம் அடைந்துள்ளனர்.

மூன்றாவது இடத்தில் இருக்கும் இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 53,016 பேர் அதிகரித்து மொத்தம் 22,67,153 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 887 அதிகரித்து மொத்தம் 45,353 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 15,81,640 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவை பொறுத்தவரை, கேரளாவின் திரிச்சூரில் ஜனவரி 30 ஆம் தேதி முதல் நபர் கொரானாவால் பாதிக்கப்பட்டார். ஜூன் 26 அன்று 5 லட்சம் (அரை மில்லியன்) நோயாளிகள் என்ற நிலையை இந்தியா எட்டியது. ஆனால் அடுத்த 5 லட்சத்தை எட்ட இந்தியாவுக்கு 149 நாட்கள் பிடித்தன

ஆனால் இதற்கு மாறாக, அமெரிக்காவும் பிரேசிலும் அரை மில்லியன் நோயாளிகளை மிக வேகமாக எட்டியன, அமெரிக்கா 81 நாளிலும் பிரேசில் 96 நாட்களிலும் எட்டின. ஆனால் இரு நாடுகளும் ஒரு மில்லியன் கொரோனா பாதிப்பை எட்ட இந்தியாவை விட சற்றே குறைவான நேரத்தை எடுத்தன. அடுத்த 5 லட்சம் கொரோனா கேஸ்களை எட்ட, அமெரிக்கா 17 நாட்கள் மற்றும் பிரேசில் 19 நாட்கள் பதிவு செய்யதன. ஆனால் இந்தியா 20 நாட்கள் எடுத்தது. 

அப்போதிலிருந்து, இந்தியாவில் கொரோனா பாதிப்பு மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. வெறும் 21 நாட்களில் இரண்டாவது மில்லியனை இந்தியா தொட்டது. அதாவது அடுத்த 21 நாளில் கூடுதலாக 10 லட்சம் பேர் இந்தியாவில தொற்றால் பாதிக்கப்ட்டனர். ஆனால் அமெரிக்காவில் இதற்கு 43 நாட்கள் ஆனது. பிரேசிலில் 27 நாட்கள் ஆனது. அமெரிக்கா பிரேசில் அமெரிக்கா மற்றும் பிரேசிலை விட மிகவேமாக கொரோனா தொற்றின் 20 லட்சம் இலக்கை இந்தியா அடைந்திருப்பதால் விரைவில் இந்த இரு நாடுகளையும் பாதிப்பில் மிஞ்சினாலும் ஆச்சயப்படுவதற்கு இல்லை என்று மருத்துவ நிபுணர்கள் கவலை தெரிவிக்கிறார்கள். 

இந்தியா நிலவரம் இரண்டாவது மில்லியன் நோயாளிகளில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் டெல்லி ஆகியவற்றின் பங்கு குறைந்து வருவதோடு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால், தொற்றுநோய் எந்த அளவிற்கு வேகமாக பரவியுள்ளது என்பதை தரவுகள் நிரூபிக்கிறது. இதன் காரணமாகவே, இன்று பிரதமர் மோடி, இந்தப் பகுதிகளிலெல்லாம் கொரோனா பரிசோதனைகளை வேகப்படுத்த அறிவுறுத்தியுள்ளார். மோடியின் அறிவுரைப்படி, மகாராஷ்ட்ரா, தமிழகம், ஆந்திரா, கர்நாடகம், டில்லி, உத்திர பிரதேசம், மேற்கு வங்கம், தெலுங்கானா, குஜராத், பீகார் ஆகிய மாநிலங்களில் தொற்றை கட்டுக்குள் கொண்டு வந்தாலேவும், சூழலை கட்டுக்குள் கொண்டு வந்துவிடலாம் என சொல்லப்படுகிறது.