தமிழ் திரை உலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் விஷால் நடிப்பில் கடைசியாக வெளிவந்த வீரமே வாகை சூடும் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து அதிரடி ஆக்ஷன் படங்களில் நடித்து வரும் நடிகர் விஷால் இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ள துப்பறிவாளன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பை இம்மாதம் (ஏப்ரல்) மாதம் லண்டனில் தொடங்கவுள்ளார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்ததாக மீண்டும் ஆக்ஷன் த்ரில்லர் படமாக இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தயாராகும் மார்க் ஆண்டனி திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இப்படத்தில் SJ சூர்யா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். முன்னதாக இப்படம் கைவிடப்பட்டதாக வதந்திகள் பரவி வந்த நிலையில் வருகிற மே மாதம் மார்க் ஆண்டனி படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என தகவல்கள் கிடைத்துள்ளன

இதனிடையே மீண்டும் காவல்துறை அதிகாரியாக தற்போது லத்தி படத்தில் விஷால் நடித்து வருகிறார். இயக்குனர் வினோத் குமார் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளிவர உள்ள லத்தி படத்தில் சுனைனா கதாநாயகியாக நடிக்க, நடிகர் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

லத்தி திரைப்படத்தை ராணா புரொடக்ஷன்ஸ் சார்பில் நடிகர்கள் ராணா மற்றும் நந்தா இணைந்து தயாரிக்கின்றனர்.பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவில் லத்தி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வருகிற ஏப்ரல் 6 ஆம் தேதி கத்தி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸாகவுள்ளது.

இந்நிலையில் லத்தி படத்தின் இசையமைப்பாளராக முன்னணி இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இணைந்துள்ளார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விஷால்-யுவன் காம்போவில் லத்தி 12வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Elated to have our lovely combo back for the #12th time in my career.
Welcoming our little maestro n my good friend @thisisysr on-board for #Laththi. pic.twitter.com/OFfcUaU2LW

— Vishal (@VishalKOfficial) April 4, 2022