கடந்த ஆண்டு இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். ராம்சரண், ஜூனியர் என்டிஆர், அஜய் தேவ்கான், ஆலியாபாட், ஸ்ரேயா சரண் ,ரே ஸ்டீவன்சன், அலிசன் டூடி, ஒலிவியா மோரிஸ், சமுத்திர கனி உள்ளிட்டோர் நடித்த இப்படத்திற்கு எம் எம் கீரவாணி இசையமைத்தார். பெரும் எதிர்பார்பின் மத்தியில் வெளியான ஆர் ஆர் ஆர் திரைப்படம் உலகளவில் இமாலய வெற்றி பெற்றது. வசூல் ஒரு புறம் விருதுகள் ஒருபுறம் குவித்து வருகிறது. குறிப்பாக உலகளவில் உயரிய விருதான கோல்டன் குலோப் விருதை சிறந்த பாடல் பிரிவில் ஆர் ஆர் ஆர் படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் வென்றது.

மேலும் சமீபத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் நடைபெற்ற கிரிட்டிக் சாய்ஸ் விருதினை சிறந்த பாடலுக்கான பிரிவிலும் சிறந்த படத்திற்கான பிரிவிலும் வென்றது. இந்நிகழ்வில் உலகப் புகழ்பெற்ற டைட்டானிக், அவதார் படங்களை இயக்கிய இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் அவர்களை ஆர் ஆர் ஆர் படக்குழு சந்திக்க நேர்ந்தது. ஆர் ஆர் ஆர் படத்தினை இரண்டு முறை பார்த்ததாகவும் தன் மனைவிக்கும் இந்த படத்தை பரிந்துரைத்ததாகவும் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் ராஜமௌலியிடம் தெரிவித்திருந்தார்,

மேலும் பேசிய ஜேம்ஸ் கேமரூன், மக்களிடம் எது பயங்கரமாக பரவலாக சென்றடையும் என்பது குறித்த உக்தி. உங்களால் மட்டுமே முடியும். இந்த திரைப்படத்தை உருவாக்க அதற்கு பின்னால் இருக்கும் விஷயங்கள் எல்லாம் நீங்கள் போட்ட உழைப்பு மற்றும் ஆர்வம். நிச்சயமாக இது எல்லாம் உங்களால் மட்டுமே சாத்தியமடைந்துள்ளது. உங்க சொந்த நாட்டு மக்கள் எல்லோரும் இந்த நிகழ்வுகளை பார்த்து ஆச்சரியப்பட்டு இருப்பார்கள். இந்த விருது உங்களுக்கு கிடைத்தது மேலும் ஒரு அங்கீகாரமாக நான் பார்க்கிறேன். உங்களுடைய கொண்டாட்டங்களை இன்று உலகமே உற்று பார்த்து கொண்டு இருக்கிறது”

என்று இயக்குனர் ராஜ மௌலி மற்றும் இசையமைப்பாளர் எம் எம் கீரவாணி ஆகியோரிடம் படம் குறித்து பேசினார். இதுகுறித்து இயக்குனர் ராஜ மௌலி, இசையமைப்பாளர் எம் எம் கீரவாணி மற்றும் ஆர் ஆர் ஆர் படக்குழு அவர்களது சமூக வலைதளத்தில் பதிவிட்டனர், இதனையடுத்து ஜேம்ஸ் கேமரூன் பேசிய வீடியோ இணையத்தில் பரவாலகி வருகிறது.

கோல்டன் குலோப் போன்ற விருதுகளை குவித்து இந்திய திரைப்படங்கள் மீது ஒரு கவனத்தை உலக நாடுகளில் பெற்று வரும் ஆர் ஆர் ஆர் திரைப்படத்தை இன்று உலகளவு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். நிச்சயம் இந்திய சினிமா திரைபடங்களுக்கு இதற்குமுன் கிடைத்த அங்கீகாரத்தை விட இந்த படத்திற்கு கிடைக்கும் வரவேற்பு அதிகமாகவே உள்ளது. மேலும் ஆர் ஆர் ஆர் திரைப்படம் ஆஸ்கார் போட்டியில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது