நேற்று ஜூலை 16 ல் லண்டனில் நடைபெற்ற உலக புகழ்பெற்ற வில்ம்பில்டன் டென்னிஸ் தொடரின் இறுதி போட்டியில் ஆடவர் ஒற்றை பிரிவு சாம்பியன் பட்டத்தை முதல் முறையாக ஸ்பெயினின் கார்லஸ் அல்காராஸ் வென்று சாதனை படைத்துள்ளார். இதுவரை இறுதி போட்டியில் 7 முறை சாம்பியன் பட்டத்தையும் 23 முறை கிரான்ட் ஸ்லாம் பட்டம் வென்ற பிரபல டென்னிஸ் வீரர் ஜோகொவிச்சை 1- 6, 7-6, 6-1, -6, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் கார்லஸ்.

இந்த சாதனை மூலம் 4 முறை விம்பிள்டன் பட்டத்தை வென்ற ஜோகொவிச்சின் ஆதிக்கம் முடிவுக்கு வந்துள்ளது. இதில் வென்ற வீரர் கார்லஸ் ஆல்காராஸ் 25 கோடியே 25 லட்சம் ரூபாய் இந்திய மதிப்பில் பரிசு தொகை வென்றார். இந்த வெற்றியை விம்பிள்டன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் ரசிகர்களை ஆச்சர்ய படுத்தும் வகையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் பட போஸ்டர் வடிவத்தில் கார்லோஸ் அல்காராஸ் உருவத்தை வைத்து வெளியிட்டுள்ளனர். இதையடுத்து விஜய் திரைப்படம் உலகளவில் பிரபலமானது தெரிய வந்து ரசிகர்கள் கொண்டாடி அப்பதிவினை வைரலாக்கி வருகின்றனர்.

விம்பிள்டன் தளபதி விஜய் திரைப்படத்தை உதாரணமாக வைப்பது இது இரண்டாவது முறை. இதற்கு முன்னதாக புகழ்பெற்ற டென்னிஸ் விளையாட்டு துறையில் சூப்பர் ஸ்டாரான ரோஜர் பெடரர் புகைப்படத்தை பதிவிட்டு அதில் ‘வாத்தி கமிங்’ என்று மாஸ்டர் பட பாடலை குறிப்பிட்டு இருந்தனர். மேலும் ஒரு பதவில் தலைவா என்று குறிப்பிட்டும் இருந்தனர். உலகளவில் தமிழ் திரைப்படங்கள் மீது ரசிகர்களுக்கு நாட்டம் இருந்து வருகிறது. இதில் குறிப்பாக தளபதி விஜய் திரைப்படங்கள் என்றாலே தனி கவனம் கிடைத்து விடுகிறது, இதில் சிறப்பு மாஸ்டர் திரைப்படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் முடிந்தும் இன்றும் அப்படத்தின் மீதான ஈர்ப்பு குறையவில்லை என ரசிகர்கள் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

THALAIVA 🤴 #Wimbledon pic.twitter.com/u4nuPknbT2

— Wimbledon (@Wimbledon) July 4, 2023

தளபதி விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் திரைப்படத்தின் பிளாக் பஸ்டர் ஹிட் படத்திற்கு பின் தற்போது ‘லியோ’ படத்தில் பணியாற்றுகின்றனர். அதிரடி ஆக்ஷன் நிறைந்த திரைப்படமாக் உருவாகும் லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. தற்போது படத்தின் அடுத்தக் கட்ட பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளனர். வரும் அக்டோபர் ஆயுத பூஜை பண்டிகையையொட்டி லியோ திரைப்படம் உலகளவில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.