தனக்கே உரித்தான பாணியில் தொடர்ந்து வித்தியாசமான கதைகளங்களை தேர்ந்தெடுத்து நடித்துவரும் நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் முன்னதாக வெளிவந்த ராட்சசன் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் சைக்கோ த்ரில்லர் திரைப்படமாக தயாராகி வரும் மோகன்தாஸ் நிறைவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில், விரைவில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் விஷ்ணு விஷாலின் நடிப்பில் விளையாட்டை மையப்படுத்தி இதுவரை வெளிவந்த வெண்ணிலா கபடி குழு & ஜீவா உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டாகின. இந்த வரிசையில் மீண்டும் விஷ்ணு விஷாலின் நடிப்பில் பாரம்பரியமான கட்டா குஸ்தி சண்டையை மையப்படுத்தி தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகி வரும் திரைப்படம் கட்டா குஸ்தி (தெலுங்கில் மட்டி குஸ்தி).

இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கத்தில், விஷ்ணு விஷாலுடன் இணைந்து பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலியாக மனதைக் கவர்ந்த ஐஸ்வர்யா லெக்ஷ்மி கதாநாயகியாக நடிக்க, முனீஸ்காந்த் ,லிஸ்ஸி ஆண்டனி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ரிச்சர்ட்.M.நாதன் ஒளிப்பதிவில், கட்டா குஸ்தி திரைப்படத்திற்கு ஜஸ்டீன் பிரபாகரன் இசையமைக்கிறார்.

தெலுங்கு நடிகர் ரவிதேஜாவின் RT டீம் வொர்க்ஸ் மற்றும் விஷ்ணு விஷாலின் விஷ்ணுவிஷால் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் கட்டா குஸ்தி திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று (நவம்பர் 2) வெளியானது. இந்நிலையில் கட்டா குஸ்தி திரைப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. அந்த போஸ்டர் இதோ…

Here is the second look of #GattaKusthi #MattiKusthi, such a pleasure working with #AishwaryaLekshmi in this film 😊

See you soon in theatres! #GattaKusthiSecondLook #MattiKusthiSecondLook pic.twitter.com/Kcu3JtcR70

— VISHNU VISHAL (VV) (@TheVishnuVishal) November 3, 2022