தமிழ் திரை உலகின் பிரபல கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் விஷ்ணு விஷால் இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்த வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து குள்ளநரி கூட்டம், நீர்பறவை, ஜீவா, இன்று நேற்று நாளை உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

குறிப்பாக இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்த முண்டாசுப்பட்டி மற்றும் ராட்சசன் உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த வரிசையில் ராட்சசன் படத்திற்கு பிறகு மீண்டும் அடுத்த சைக்கோ த்ரில்லர் திரைப்படமாக தற்போது இயக்குனர் முரளி கார்த்திக் இயக்கத்தில் மோகன்தாஸ் திரைப்படத்தில் விஷ்ணு விஷால் நடித்து வருகிறார்.

இதனிடையே விஷ்ணு விஷால் நடிப்பில் அடுத்து திரைக்கு வர உள்ள திரைப்படம் FIR. இயக்குனர் மனு ஆனந்த் இயக்கியுள்ள FIR திரைப்படத்தை விஷாலின் VV ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. FIR திரைப்படத்தில் விஷ்ணு விஷால் உடன் இணைந்து ரெபா மோனிகா ஜான், மஞ்சிமா மோகன், ரைசா வில்சன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்க இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் & இயக்குனர் கௌரவ் நாராயணன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அருள் வின்சென்ட் ஒளிப்பதிவில், தோனி கிஷோர் படத்தொகுப்பு செய்துள்ள FIR படத்திற்கு அஷ்வத் இசையமைத்துள்ளார். இந்நிலையில் விஷ்ணு விஷாலின் FIR திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட வருகிற பிப்ரவரி 11-ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

We’re super excited to associate with the talented @TheVishnuVishal for #FIR

A @RedGiantMovies_ release.

The film releases in cinemas worldwide on February 11th.@Udhaystalin @itsmanuanand @menongautham @mohan_manjima @raizawilson @Reba_Monica @MusicAshwath @VVStudioz pic.twitter.com/t22qKcT8OM

— Red Giant Movies (@RedGiantMovies_) January 31, 2022