தமிழ் சினிமாவின் பிரபல ஹீரோக்களில் ஒருவரான நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் அடுத்ததாக தயாராகி வரும் திரைப்படம் மோகன்தாஸ். முன்னதாக இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் சைக்கோ த்ரில்லர் திரைப்படமாக விஷ்ணு விஷால் நடித்த ராட்சசன் திரைப்படத்தை தொடர்ந்து மோகன்தாஸ் திரைப்படமும் சைக்கோ த்ரில்லர் திரைப்படமாக தயாராகியுள்ளது.

விஷ்ணு விஷால் உடன் இணைந்து பிரபல மலையாள நடிகர் இந்திரஜித் சுகுமாரன் மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அடுத்ததாக இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்துள்ள F.I.R படத்தின் ரிலீஸ் குறித்த முக்கிய தகவல் தற்போது வெளியானது.

விஷ்ணு விஷாலின் VV ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள F.I.R படத்தில் மஞ்சிமா மோகன், ரைசா வில்சன் மற்றும் ரெபா மோனிகா ஜான் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்க, இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அருள் வின்சென்ட் ஒளிப்பதிவில், அஷ்வத் இசையமைத்திருக்கும் விஷ்ணு விஷாலின் F.I.R திரைப்படம் தமிழ் & தெலுங்கில், அடுத்த ஆண்டு (2022) பிப்ரவரியில் உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் என நடிகர் விஷ்ணு விஷால் அதிகாரப்பூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தொடர்ந்து F.I.R படத்தின் அடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The greatest efforts need the biggest arrivals..
I feel I've waited enough, and now is the time to break the silence..

Gear up!#FIRinFebruary in THEATRES !#FIR in TAMIL n TELUGU ! pic.twitter.com/l1om6sP99q

— VISHNU VISHAL - V V (@TheVishnuVishal) December 2, 2021