செல்லமே என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் விஷால்.தொடர்ந்து இவர் நடித்த சண்டக்கோழி,திமிரு,தாமிரபரணி உள்ளிட்ட படங்களில் நடித்தார்.ஆக்ஷன் கலந்த குடும்ப படங்களான இவை ரசிகர்களிடமும்,விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை அடுத்து தமிழகம் முழுவதும் பிரபலமான நட்சத்திரமாக விஷால் வளர்ந்தார்.

இதனை தொடர்ந்து இவர் நடித்த பல ஹிட் படங்களில் நடித்து அசத்தினார்.இவரது நடிப்பில் உருவான எனிமி படம் கடைசியாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து து பா சரவணன் இயக்கத்தில் வீரமே வாகை சூடும்,லத்தி,மார்க் ஆண்டனி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் விஷால்.

வீரமே வாகை சூடும் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.விஷால் பிலிம் பேக்டரி இந்த படத்தினை தயாரித்துள்ளனர்.டிம்பிள் ஹயாட்டி இந்த படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.யோகி பாபு,ரவீனா ரவி,பாரதி கண்ணம்மா புகழ் அகிலன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படம் ஜனவரி 26ஆம் தேதி வெளியாகவிருந்தது ஆனால் கொரோனா பரவல்,ஊரடங்கு போன்றவற்றால் ரிலீஸ் தள்ளிப்போனது.தற்போது ஊரடங்கு தளர்வுக்கு வந்த நிலையில் இந்த படம் பிப்ரவரி 4ஆம் தேதி வெளியாகும் என்று படத்தின் வெளிநாட்டு விநியோகஸ்தர் ஒருவர் ட்விட்டர் பக்கத்தின் மூலம் தெரிவித்துள்ளார்.

RISE OF A COMMON MAN at cinemas from 4th February 2022. Don't miss the action thriller #VeeramaeVaagaiSoodum on big screens near you. 🔥#malikstreams #malaysia #vishal31 #vishal #dimplehayathi #yuvan pic.twitter.com/0Xgij0BOH6

— Malik Streams Corporation (@malikstreams) January 29, 2022