தமிழ் சினிமாவின் அதிரடியான ஆக்ஷன் கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் விஷால் தற்போது இயக்குனர் வினோத் குமார் இயக்கத்தில் லத்திசார்ஜ் படத்தில் காவல்துறை அதிகாரியாக விஷால் நடித்து வருகிறார். ராணா புரோடக்சன்ஸ் தயாரிப்பில் உருவாகும் இத்திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அடுத்ததாக எனிமி படத்தின் தயாரிப்பாளரான மினி ஸ்டூடியோஸ் தயாரிப்பில், இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் Pan இந்தியா திரைப்படமாக இந்தியாவின் பல்வேறு மொழிகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள #Vishal33 புதிய திரைப்படத்திலும் கதாநாயகனாக நடிக்க உள்ளார் விஷால்.

முன்னதாக அறிமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்கத்தில் விஷால் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் விஷால் தயாரித்து நடித்துள்ள திரைப்படம் வீரமே வாகை சூடும். விஷாலுடன் இணைந்து டிம்பிள் ஹயாத்தி, ரவீனா ரவி மற்றும் யோகிபாபு ஆகியோர் நடித்துள்ள வீரமே வாகை சூடும் படத்திற்கு கவின் ராஜ் ஒளிப்பதிவில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

வருகிற ஜனவரி 26ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீசாக உள்ள வீரமே வாகை சூடும் படத்தின் டீசர் தமீபத்தில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் வீரமே வாகை சூடும் படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடைந்து உள்ளதாகவும், யுவன் ஷங்கர் ராஜாவின் குரலில் மனதை மயக்கும் 2வது பாடலும் ரிலீஸாக உள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

& that’s the wrap for #VeerameVaagaiSoodum

Mesmerizing 2nd Single sung by our young maestro @thisisysr, Coming soon !! pic.twitter.com/ww7jyVwrXK

— Vishal (@VishalKOfficial) January 3, 2022